Sunday, September 29, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-16

 TEACHER BEYOND YOUR IMAGE-16

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-16

நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்   கவனம் பெறும். அதனால், உங்கள் வகுப்புகள் நல்ல ஆரோக்கியமான பாதையில் பயணிக்க, உங்களின் ஆசிரிய பிம்பம் பன்மடங்கு உயரும் .

இன்னும் பிற நல்ல செயல் முறைகள்

3 விளக்குவதற்கு தேவையான படங்களை நீங்களே கரும்பலகையில் வரைந்து விளக்கினால் உங்களின் பணித்திறன் பெரிதும் பாராட்டு பெறும். அதனால், நீங்கள் ஒரு முழுமை யான ஆசிரியர் என்ற அங்கீகாரம் உங்களின் இளம் வயதிலேயே உங்களை வந்தடையும். பாடப்பகுதியில் 5, 6 கருத்துகள் முடிந்தபின், அனைத்தையும் மீண்டும் நினைவு படுத்துங்கள். இது இன்ஸ்டன்ட் recap என்று பெரிதும்    உதவி செய்து நினைவாற்றலுக்கு உதவும்.

4 மற்றுமோர் செயல் உத்தி

கரும்பலகையில் எழுதி சொற்களை பயில்வோரிடம் கொண்டு சேர்ப்பது

ஆசிரியர் எவ்வளவு தான்முயன்று சிறப்பாக ஒலித்தாலும், பல தருணங்களில் பயில்வோர் சொற்களை தவறாக எழுதியிருப்பதைக்காணலாம். ஏனெனில் குரலில் ஒலித்த சொல்லுக்கு உரிய வார்த்தை இன்னதென்று புரியுயாமல் ஏதோ ஒன்றை எழுதுவர்.

 அவ்வப்போது அவர்கள் நோட் டை வாங்கிப்பார்த்தால் பல பிழைகள் தென் படும். அதற்காகவேனும் ஆசிரியர்கள் உரிய சொற்களை தெளிவாக பிழையின்றி புரிந்துகொள்ளும் வகையில் எழுதினால், பிழைகள் அநேகமாக விலக்கப்படும்.

இப்படித்தான் மொழியறிவு விதைக்கப்பட, காலப்போக்கில் பிற மொழி அச்சமும் தயக்கமும் விலகும். சில ஆசிரியர்கள் எழுதுவதே இல்லை; அதை பெருமையாகப்பேசும்போது, இவர்கள் ஆசிரியப்பணிக்கு தகுதி அற்றவர்கள்   என்றே கருதுகிறேன். தோண்டித்துருவினால் சில ஆசிரியர்களுக்கு சொற்களுக்கான ஸ்பெல்லிங் என்னும் எழுத்துவரிசை சார்ந்த ஐயப்பாட்டினால் எதையும் எழுதாமல் தன் கைகள் சுத்தமாக இருப்பதாக பெருமை கொள்வர்.

எழுதும் ஒவ்வொரு எழுத்தும், 21/2 அங்குல உயரம் இருக்கும் படி எழுதினால் ஸ்பெல்லிங் சார்ந்த குழப்பம் அகற்றப்படும்.

உயிரியல் கல்வியில் 'அக்கரன்ஸ் '   என்ற சொல் ஒவ்வொரு உயிரினமும் வசிக்கும் இடம் பற்றி தெரிவிப்பது. 90%நபர்களுக்கு இந்த 'அக்கரன்ஸ் ' என்ற சொல்லிற்கான ஆங்கிலஸ்பெல்லிங் தெரியாது ஏதேதோ எழுதுவர். இதைப்படிக்கும் அனைவரும் ஆங்கிலத்தில் 'அக்கரன்ஸ் ' என்ற சொல்லை எழுதி பின்னர் ஆங்கில அகராதியில் பாருங்கள்; நான் சொல்வது விளங்கும் .மற்றுமோர் பிழை-- உச்சரிப்பு என்றஆங்கில சொல்லுக்கான ஆங்கில எழுத்து வரிசை. அதையும் எழுதிப்பார்த்து பின் ஆங்கில அகராதியில் பாருங்கள் நமது கவனமின்மை பளிச்சிடும். முறையாக புரிந்து உள்வாங்கிக்கொள்ளாமல், புத்தகங்களை சுமந்து சென்று வகுப்பில் படிக்கும் ஆசிரியக்கூட்டம் எண்ணிக்கையில் அதிகம்.

உலகமே paperless நடை முறை நோக்கி பயணிக்க ஆசிரியர் கொத்து கொத்தாக காகிதங்களை சுமந்து சென்று [யாரோ]எழுதியதை படிக்க முனைவர் பட்டம்  [Ph .D ] வேண்டுமா?

10ம் வகுப்பு --ஆங்கில மீடியக்கல்வி இருந்தால் போதும். நாம் எவ்வளவு இழிவான நிலைக்கு வீழ்ந்துள்ளோம் என ஆசிரியர்கள் சுய பரிசோதனை செய்தல் நலம்.

நீங்கள் சொந்தக்காலில் நிற்பவர் எனில், மாணவர்களை கண்டிப்புடன் வழி நடத்தக்கலாம். கண்டிப்பு காட்டும் எந்த ஆசிரியனும் மறக்கப்பட்டதே இல்லை. ஏனெனில் முறையாக கற்று முறையாக போதிப்பவனால் மட்டுமே கண்டிப்பை கண்டிப்பாய் நிலைநாட்ட இயலும். நேரத்தை முறையாக செலவிட நினைக்கும் எவரும் வீண் அரட்டை/வாதம் இவற்றை தவிர்த்து பயனுள்ள பங்களிப்பிற்கே முயலுவர். 

 இன்னும் பிற நல்ல செயல் முறைகள் ஆசிரியரின் செயல் திறனை விரிவாக்கம் செய்யும் அவற்றை பின்னர் காண்போம்.

தொடரும்

அன்பன் ராமன்  

1 comment:

  1. அழகான கையெழுத்து ஆசிரியர்களின் ஒரு முக்கியமான ஆயுதம். உதாரணம் நமது ஆசிரியர்.

    ReplyDelete

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...