Monday, September 30, 2024

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53

நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57க்கு சுப்பு ரெத்தினம் வந்தார்

என்னசார் ராத்திரிதான் வந்திருப்பீங்க காலைல சீக்கிரமே வந்துட்டீங்க, பாவம் ஓய்வு ருந்துருக்காதே என்றார்   சுரெ 

 ல்லை சார் நேரத்துக்கு வரலைனா உடனே 5 நாளா ஆள க் காணும் னு தகவல் பறக்கும், இவன் என்ன மாசா மாசம் சேஷ்டை பண்றான்னு சஸ்பெண்ட் பண்ணிட்டா அரைசம்பளத்துல நம்மால காலம் தள்ள முடியாது என்று சொன்னார் மாடசாமி.

சுந்தரிக்கு வம்பிழுக்கிறார் என புரிந்தது. என்ன செய்வது? தவறு செய்து விட்டு அடங்கிப்போவதை தவிர வேறு வழியில்லை  இருந்தாலும் மா சா  தன்னை  வம்புசெய்பவள் என்றே நினைக்கிறார்  போலும். கௌரியிடமாவது சொல்லி அழலாம் என்றால் அவள் மேல்நாட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாள் 'இறைவா வழி காட்டு" என்று  வருந்தினாள்

சிறிது நேரத்தில் ஒரு யோசனை -ராமசாமியிடம் முந்தாநாள் விளக்கியதை , சார் மா சா சாருக்கு சொல்லி புரிய வையிங்க சார்  நீங்க ரெண்டு பேரும் தெய்வங்களா தான் நான் நினைக்கிறேன். நான் அவசரப்பட்டது பெரிய தவறுதான் மன்னிக்கவோ தண்டிக்கவோ மாட்டேங்கிறாரு ஆனா நைசா குத்தலா சொல்லும்போது வலி ரொம்பவே இருக்கு சார் நீங்க கொஞ்சம் விளக்கினா புரிஞ்சுக்குவார் சார் ; என்று வேண்டினாள்.

ராசா என்ன செய்தாரோ மாடசாமி ஒரே நாளில் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். மேலும்        சு ரெ , இந்திரா செய்த அவமரியாதையுயும், கோமதியின் தூங்கு மூஞ்சித்தனத்தையும் சொல்லி நல்ல ஐடியா குடுங்க இதுங்கள பெண்ட நிமித்தணும்    என்றார் .

சரி சுந்தரி?  என்று மாசா கேட்கபாவம் சார் அது 85-90 % வேலை அதுதான் செய்யுது லேட் இல்லாம நீட் ஆவும் செய்யுது, ஏதோ புகார் சொல்லிடுச்சு ஆனா வேலைல, மரியாதைக்குடுக்கிறதுல நல்ல குணம்;

இந்த ரெண்டும் சர்விஸ் போட்டதை சொல்லிக்கிட்டு தூங்கி வளிஞ்சுக்கிட்டு கொலு பொம்மை மாதிரிஉக்காந்திருக்குது”-. சு ரெ       மா சா -" அடுத்தவாரம் சென்னைலிருந்து ரிப்போர்ட் கேட்டு லெட்டர் வரும் , அதை இவங்களுக்கு குடுத்து 1 வாரத்துல முடிக்க சொல்லுங்க  , தன்னால பெண்டு நிமிந்திரும்" .

அப்ப சுந்தரிக்கு ஒன்னும் வேலை குடுக்க வேண்டாமா. என்றார் சு ரெ .

“இந்த ரிப்போர்ட் எல்லாம் சீனியருங்கதான் பார்த்து  முடிக்கணும் னு சொல்லுங்க. அதுவுமில்லாம அவங்க [சுந்தரி] தங்கச்சிக்கு கல்யாணம் வருது [ஆமா ஆமா என்றார் சு ரெ ]

“அதுனால வேலை முடிக்க முடியலைனா சிக்கல் ஆயிடும் னு சொல்லி இவங்களை வேலை வாங்குங்க. ஒழுங்கா முடிக்கலைனா நல்ல பெரிய வைத்தியம் பாத்துவிட்டுருவோம்என்றார் மாடசாமி.

சு ரெ க்கு புரியவில்லை. மா சா விளக்கினார். “PK சார் வரப்போறார் நேரடியா அவரு முன்னால கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டம் னா  அவரு வசமா பின்னிப்பிடுவார்”..

“சரி, அப்படியே செய்வோம் இதுக்கு தான் மாடசாமி வேணும் கறது நல்லா என்ன செய்யலாம்னு அளகா யோசிக்கிறீங்க”.

இப்போது மாடசாமி வருந்தினார் சுந்தரியை அதிகமாக நோக வைத்துவிட்டேனோ என்று.       

ராமசாமி, சுப்புரெத்தினம் இருவர் சொன்னவற்றை பார்த்தால் சுந்தரி ஒரு நல்ல ஊழியர் பாவம் புதிய இடத்தில் தடுமாறி விட்டாள் என்று அனுதாபம் கொண்டார்

அதோ இதோ என்றிருந்த கல்யாணம் அடுத்த வாரம் வந்தே விட்டது. ராமசாமி ஏற்பாடுகளைபலமுறை கவனமாக செக் பண்ணி எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தார்.

அப்போது சுந்தரிக்கு போன் பனைமரத்துப்பட்டி செட்டியார் இடம் இருந்து. “அம்மா பத்திரிகை வந்திருக்கு திருச்சில கல்யாணம் னு பார்த்தேன் கண்டிப்பா வந்து ர் றேன்” .

உங்களுக்கு ரூம் வேண்டி இருக்குமா என்றாள் சுந்தரி.

தேவைப்படாது ஏன்னா , எங்க சங்க பில்டிங் இருக்குது நான்தான் பொருளாளர் அதுனால தங்கறது பிரச்னை இல்லை. உங்களை எல்லாம் பார்க்க ஒரு வாய்ப்புன்னு தான் வரலாம் னு பாக்கறேன் .

கண்டிப்பா வாங்க, ஆசீர்வாதம் பண்ணுங்க. அதோட உமா அம்மா வர்றாங்க , அவுங்களையம்  பாத்து ரலாம்”  .அவுங்க ...என்று இழுத்தார் செட்டியார். “மாப்பிளை பையனுக்கு உமா அம்மா வீட்டுக்காரர் தான் அதிகாரி அதுனால வருவாங்க.” என்றாள். சரி, நல்லது இன்னொரு காரணம் கிடைச்சிருக்கு அவசியம் வந்துடறேன் என்றார் செட்டியார்.

விருந்தினர் 60க்கு மேல வந்திடும் போல இருக்கே என்று யோசித்தாள்சுந்தரி.

.உடனே ராமசாமிக்கு போன் போட்டு நிலவரம் சொன்னாள். ராமசாமி -"இத பாரும்மா 63, வரை போனாலும் சாப்பாடு காபி டிபன் எல்லாம் அட்ஜஸ்ட் ஆய்டும். வெத்தில பாக்கு  தாம்பூல பை தான்    கூடும் .2 நாள் முன்னால சொல்லிடலாம் குக் சமாளிச்சுருவான் கவலைப்படாதே -அவங்களுக்கு இதெல்லாம் ஊறிப்போன விஷயம் பதட்டப்படாம அழகா HANDLE பண்ணுவாங்க. தைரியமா இரு, என்றார் ரா சா.

எமகாதகர் இந்த ராமசாமி .என்று இஷ்ட தெய்வத்திற்கு நன்றி சொன்னாள்  

அன்று மாலையே சாரதாவை நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்து கண்டிப்பா வாங்கக்கா என்றாள் சுந்தரி. கண்டிப்பா வரேன் , அதுவும் மேடம், கௌரி இவங்கலாம் இருக்கற நிகழ்ச்சின்னா மகிழ்ச்சி தான் நல்லவங்க நட்பு இருந்தாதான் முன்னேறுவோம். அதுனால  கண்டிப்பா வரேன் என்றாள் சாரதா.     .  தொடரும்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...