Tuesday, October 1, 2024

OLD MOVIE SONGS -4

 OLD MOVIE SONGS -4

பழைய திரைப்படப் பாடல்கள்-4

சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் "நான் உன்னை சேர்ந்த செல்வம்" பாடலில் அமைந்த சில தகவல்களைப்பகிர்ந்திருந்தேன். ஆயினும் அந்த 1964 ம் ஆண்டின் வெகு குறைந்த பாடல் பதிவு வசதிகளைக்கடந்து குரல்களும் கருவிகளும், குறிப்பாக தாள ஒலிகளும், குழலின் நேர்த்தியும் வழங்கிய ரம்மியம் இன்று எங்கே போனது? போனதைத்தேடிக்கொண்டிராமல், அன்றைய உழைப்பு மற்றும் மனமொன்றிய செயல் இவற்றை அன்றாடம் உய்த்து மகிழ்தல் பேருஉவகை அன்றோ. கண்ணதாசன் இறுதி சரணத்தில் காட்டிய சொல் நளினம் அலாதியானது எனில் பாடல் முழுவதும் விஸ்வநாதனின் மென்மையான நெளிவு சுளிவுகளை கேட்கக்கேட்க இப்பாடலில் எவ்வளவு உழைப்பு புதைந்துள்ளது என்றே மலைப்பு தரும்  அவ்வகையில் இப்பாடலின் இன்ன பிற வலிமைகளை சுபஸ்ரீ குழுவினரின் QFR பதிவில் கண்டு கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=YS0lxEOnx8o qfr nu s kala KOIL

1959 ல் வந்த படம் அமுதவல்லி , பாடல் பட்டுக்கோட்டையார் , இசை வி ரா, குரல்கள் டி ஆர் மாகாலி ங்கம், பி சுசீலா .

பட்டுக்கோட்டையார் எப்போதும் மேட்டருக்கு மீட்டர் கண்டுபிடிச்சுக்குங்க, என்று பாடலைத்தருவார். இசை அமைப்பாளர்கள் அவற்றை அழகாக ட்யூன் அமைத்து பதிவு செய்ய வேண்டும் அதாவது கவிதையின் நேர்த்தியை ட்யூனுக்காக சமரசம் செய்துகொள்ள உடன் பட்டதே இல்லை என்றே கேள்விப்படுகிறோம்.. ஒருநாளும், ட்யூனுக்கு எழுதமாட்டார். இந்தப்பாட்டில் அதுதான் மேட்டரே . ஏன்னா கேளுங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் மிக நேர்த்தியான பொருத்தமான நெளிவுகளுடன் பாடி, பாடலை சிறப்பாக்கி தந்துள்ளனர் வி ரா குழுவினர். மேலும், உரிய இடத்தில் ராகம் சற்று நிதானித்து பயணித்து மேட்டருக்கு மீட்டரைக்காப்பாற்றி வெற்றிகண்டுள்ளது.

பாடல் தாளத்திலேயே துவங்கும் உத்தியை 1959 லேயே கையுண்டுள்ளார் விஸ்வநாதன் . அதீத கற்பனையாளர். மேலும் போங்கோ என்ற தாளக்கருவியை தமிழ்திரையில் விளையாட விட்டதில் எம் எஸ் வி க்கு நிகர் எம் எஸ் வி தான். போங்கோவின் துடிப்பான இயக்கத்தையும் இறுதியாக பல்லவி ஒலிக்கும் போது போங்கோ வழிவிட்டு தபலா ஒலிப்பதுகூட வெகு அழகுதான்.. இதுபோன்ற பாடல்கள் இனி எப்போது வரும் /எப்படிவரும் கற்பனை வறண்டவர்கள் நிறைந்த உலகில்?. பாடலைக்கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=mqttcgYpViY adai katti amudhavalli pk msv tr m ps

இந்த ப்பாடலின் வேறு அழகுகளை சுபஸ்ரீ அவர்களின் விளக்கமும் QFR குழுவினரின் பாடலும் வழங்க, அந்த நாளில் உருவாக்கப்பட்ட பாடல் இன்றும் இளமை குன்றாமல் மிளிர்வது ஏன் என்று நன்கு விளங்கும். கேட்டு ரசியுங்கள் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=AOnQBOrxt5I QFR FOR THE ABOVE

கனிய கனிய மழலை பேசும் கண்மணி [மன்னாதி மன்னன் -1960] கண்ணதாசன், வி, ரா, டி எம் எஸ், பி சுசீலா

எந்தக்காலத்தில் [64 ஆண்டுகள் முன்] இப்படி ஒரு பாடல் அதுவும், நொடிப்பொழுதும் சுணக்கம் இல்லாத குழைவான இசை. குரலும் இசையும் பின்னிப் பின்னி ஒன்றை ஒன்று தழுவிச்செல்வது விஸ்வநாதனின் இசை அமைப்பில் காலங்காலமாக இருந்து வரும் அணுகுமுறை.. ஆங்கிலத்தில் 'seamless blending 'என்பார்கள். அவரியின் இசையில் 'ஒட்டுப்போட்ட உருவம் ஒருநாளும் இல்லை. பல இசை அமைப்பாளர்கள் திண்டாடித்திணறும் இடையிசை என்னும் பகுதியில் வெகு இயல்பாக நீரோடைபோல் வளைந்து நெளிந்து நேர்த்தியாக பயணிப்பது எம் எஸ் வியின் இசையின் தனிச்சிறப்பு. வேண்டாத ஒலிகளும் நாராசக்குறுக்கீடுகளும் இல்லாத ரம்மியம் எம் எஸ் வியின் அக்மார்க் முத்திரை எனில் மிகை அல்ல. பாடலைக்கேளுங்கள். இணைப்பு இதோ

https://www.google.com/search?q=kaniya+kaniya+mazhalai+pesum+painkili+song+video+song&newwindow=1&sca_esv=5009c1303de011b0&sca_upv=1&sxsrf=

kaniyakaniya mazhalai pesum

இந்தப்பாடலை QFR குழுவினர் ரசித்து இசைப்பதையும் சுபஸ்ரீ அவர்கள் சிலாகித்து வர்ணிப்பதையும் கூர்ந்து கவனியுங்கள் , ஒரு பாடல் ஆக்கம் எவ்வளவு நுண் உழைப்பிப்ன் வெளிப்பாடென விளங்கும். இணைப்பு இதோ

 https://www.youtube.com/watch?v=Hp0w8jNhc2k KANIYA KANIYA MANNADHI MANNAn mani magudam

பழையபாடல்கள் பழைய குப்பைகள் அல்ல. அவை தரும் செய்திகள் ஏராளம். ஒவ்வொரு பாடலிலும் எத்துணை இசைக்கருவிகள்,, நுணுக்கங்கள். வெகு இயல்பாக வேகம் மாறுவதும் பாவம் மறையாமல் தொடர்வதும் சாதாரண நிகழ்வுகள் அல்ல.. எவ்வளவு கடும் சிந்தனையின் /உழைப்பின் பலனாக விளைந்தவை;. எனவே தான்-- வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்கள் எனினும் அனைத்திலும் சுவை குன்றாத இசை வழங்கி ரசனையை மேம்படுத்திய மேதைககுக்கு நன்றி.

மேலும் வளரும்

அன்பன்             ராமன்  

No comments:

Post a Comment

OLD MOVIE SONGS -4

  OLD MOVIE SONGS -4 பழைய திரைப்படப் பாடல்கள்-4 சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாட...