ஒரு விளக்கம்
ஆ இனிகதை எழுத ப்போவதில்லை என்றாயே? இப்போது என்ன என்று சிலர் நினைக்கலாம். இப்போதும் என் நிலை அதுதான். நேற்று இரவு வாசகர் ஒருவர் தொலைபேசியில் "நாளை என்ன வரும்?"
நான் -ஒன்றும்வராது என்று சொன்னேன் உடனே குரலில் ஒரு ஏமாற்றம் தொனிக்க , கதை நன்றாக இருந்ததே என்று சொல்லி விட்டு , வேறு ஏதாவது எழுதலாமே என்றார். உண்மையில் அவர் குரல் ஒரு ஏமாற்றத்தைக்காட்டியது . அதனால் ஒரு" one
episode" இப்போது எழுதி உள்ளேன். அதை இன்றைய பதிவாக வெளியிடுகிறேன்.
எனக்கு நன்றாக தெரியும், பலருக்கு எனது கதை அமைப்பில் நாட்டம் இல்லை ; எப்படி எனில், கடைசி பதிவு சேலம் சுந்தரி - 60 சென்ற சனிக்கிழமை வெளி வந்தது .BLOG வெளியீடு ஒரு புறம் இருக்க தனி நபர் வாட்சப்பில் 56 பேருக்கு நானே அனுப்பிவருகிறேன் 4 நாட்களில் இன்று காலை வரை முக்கி முக்கி 18 பேர் பார்த்துள்ளதாக DATA BASE தரும் புள்ளி விவரம்.
நம் மக்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் டிவி யில் சீரியல் பார்க்கின்றனர். அது போல் கதைகள் நான் எழுதமாட்டேன், எழுதக்கூடாது ;
அடுத்துக்கெடுப்பதும் அடுத்தவன் சொத்துக்கு ஆசை கொள்வதும் , மைத்துனியை மடக்கிப்போட விழையும் ஆண்கள், நாங்க மட்டும் என்ன என்று அதற்கு ஈடாக திட்டம் தீட்டும் பெண்கள் , இவை இருந்தால் கதை நன்றாக ஓடும். இந்தக்காலத்தில் மற்றும் களத்தில் சேலம் சுந்தரி, பரமேஷ், பத்து , மாடசாமி, ராமசாமி களுக்கு இடமில்லை என்பதை சமீபத்தில் புரிந்து கொண்டேன்.எனவே இனியும் கதை எழுத நான் முனைய மாட்டேன். எனவே இனி சனி ஞாயிறு இரு நாட்களில் ஆங்கில கட்டுரை வரும், செவ்வாயில் one episode ஏதேனும் வரும். முடிந்தால் படியுங்கள். இல்லையேல் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்று அமைதி கொள்வேன்.
நேற்றைய வாசகரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு அவசர ஆக்கம் இதோ :
OH—THIS ?
இது இது ஐயோ
இது கற்பனைக்காட்சி என்றாலும் நடக்கவே முடியாது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்.. காலை 7 மணி எங்கோ நாக்பூர் என்னும் ஊரில் இருந்து தென் தமிழ் நாட்டு காரைக்குடி பகுதிக்கு வந்தார் முகேஷ் சர்மா என்ற மராட்டியர். அவர் தேடி வந்தது வியாபார நிமித்தம் ,செட்டியார் சிதம்பரநாதன் என்ற புள்ளியை. எப்போதும் சீனா நானாவுடன் ஒரு உதவியாளர் மஹாலிங்கம் இருப்பார். மகாலிங்கத்துக்கு தான் பெரிய மொழி விற்பன்னர் என்று ஒரு பெருமை. ஆனால் அந்தப்பெருமை எப்படி வந்தது ? அது பொருத்தமான பெருமை தான என்று துருவி ஆராய்ந்தால். மகாலிங்கத்துக்கு கோபம் கொப்பளிக்கும். அதுபோல் கேள்வி கேட்கும் யார் மீதும் எரிந்து விழும் மஹாலிங்கம் . கூடவே போய்யா அங்குட்டு என்று பொங்குவார்.. இதெல்லாம் தெரியாத முகேஷ் ஷர்மா செட்டியார் வீட்டருகில் நின்று கொண்டு செட்டியார் மிஸ்டர் செட்டியார் என்று கூவ , மகாலிங் ‘யாரூ ? யாரு’ என்றபின் வந்தவவர் பதில் சொல்லாமல் நிற்க மகாலிங் ஹூ ஹூ [Who
Who] என்று ஆங்கிலத்தில் கேட்பதாக பெருமை கொண்டு குதூகலிக்க--
வந்தவர் Can I SPEAK TO CHETYAR? என்றார். மகாலிங்குக்கு அவமானம் தன்னால் ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லை என்று இருந்தாலும் நிலைமையை சமாளிக்க வெளியே போய் ஹூ ஹூ யூ SEE WANT ? [யாரை நீர் பார்க்க விரும்புகிறீர் [சி வாண்ட் ]
என்று கதி கலங்கவைத்தார். சர்மா ஓரளவுக்கு புரிந்து கொண்டு CHETYAR I SEE
WANT என்றார்.
மகாலிங் . WHY SEE WANT ? என்றார் . கோபத்தில் சர்மா
MIND YOUR BUSINESS என்றார் .
உங்களுக்கு நல்ல பிசினெஸ் மைண்ட் என்று பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு. எஸ் எஸ் என்றார் ஈ என்று இளித்துக்கொண்டு..
CHETYAR
WHERE ? என்றார் சர்மா
மகாலிங் .சிரித்துக்கொண்டே
HE IS WENT OUT SIDE [அதாவது பாத்ரூம் போயிருக்கிறார் என்பதை OUTSIDE என்கிறார் மஹாலிங்]. சர்மா வென் ஹி வென்ட் OUTSIDE ? மஹாலிங் EVERYDAY EVERYONE கோ OUTSIDE . சர்மாவுக்கு நேரம் போவது பிடிக்கவில்லை
செட்டியார் GOES OUTSIDE -WHERE ?
மஹாலிங் HE OUTSIDE GO INSIDE.
சர்மா WHAT ? GO OUTSIDE -INSIDE CONFUSING . நோ EVERYDAY கோ OUTSIDE INSIDE ஹவுஸ் என்று முழங்கினார் மகாலிங்.
HOW HE WILL GO OUTSIDE INSIDE என்றார் சர்மா.
SETYAR IS YAMAHADHAGAN என்றார் மஹலிங் . எமகாதகன் என்பதை சர்மா ,
யமாஹா தஹன் என்று தானாகவே எண்ணிக்கொண்டு நடுங்கி,
WHAT YAMAHA DHAHAN
? யமஹா பைக் கில் எரிந்து மடிந்தாரா ?
பல லட்ச ரூபாய் போச்சே என்று தலை சுற்றிக்கீழே சாய்ந்தார் சர்மா.
என்னவென்றே புரியாமல் ஹி ஹி என்று பேப்பரை படிக்க கிளம்பினார் மஹாலிங்
----------------------------------------------------
This episode is nice.
ReplyDeleteGood beginning. Awaiting every Tuesday. (மகாலிங்கம் பாக்ஷையில் - Tuesday wait everyday.)
When communication goes astray it leads to many comic situations. RK
ReplyDelete