Friday, October 4, 2024

SALEM SUNDARI- 54

SALEM SUNDARI- 54

சேலம் சுந்தரி- -54

புதன் காலை 10.00 மணி சுமாருக்கு விசாலாட்சி தனது உறவினர் [தூரத்து சொந்தம்] உடன் திருச்சியில் அக்காவின் கண்டோன்மெண்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வேறென்ன  களை  கட்டத்துவங்கியது சுந்தரியின் வீடு.   

வெள்ளி அன்று மாலை 3.30க்கு ராமசாமிக்கு போன் "சார் வர புதன் மாலை 4.30க்கு[tran] திருச்சி வருகிறோம். சுப்பிரமணி வீட்டினர் மறுநாள் மாலை  3.00 மணிக்கு வருவார்கள். உங்கள் அட்ரஸ் தந்தால்,  நானும் ஒய்ப்பும் வந்துவிடுவோம்" என்றார் .PK .

ரொம்ப சந்தோஷம்,  நான் ஜங்க்ஷன் தான் இருப்பேன் உங்கள ரிஸீவ் பண்ணி நானே கூட்டிகொண்டு போகிறேன் என்றார் ராசாமி.. உடனே மாடசாமி/சுந்தரி இருவருக்கும் தெரிவித்து வியாழன் மாலை 3.00 மணிக்கு சுப்பிரமணி குடும்பத்தினரை கண்டிப்பாக சுந்தரி இருந்து வரவேற்க வேண்டும் [அப்போது விசாலாக்ஷி இங்கு வர வேண்டாம் ,வீட்டில் இருக்கட்டும்] என்று தெளிவாக சொல்லி விட்டார் ராமசாமி .

சுந்தரி மாடசாமியிடம்எனக்கு பயம்மா இருக்கு சார் நீங்களும் என் கூட இருந்தா நல்லா இருக்கும் சார் ப்ளீஸ் என்றாள்.

மண்டபம் 36 மணி நேரம் புக் பண்ணியிருக்குல்ல அதுனால கொஞ்சம் ஜங்க்ஷன் காபி /டீ சாப்பிட வெச்சு 4.30 மணிக்கு மண்டபத்துல கூட்டி கொண்டு போய் தங்கவெச்சுரலாம்.

மத்தபடி கோயில் குளம் எல்லாம் கல்யாணம் முடிஞ்ச பின்ன .கூட்டிகிட்டு போவோம்.. ஸ்டேஷன் இறங்குனதும் எல்லாரையும் மறக்காம வணக்கம் சொல்லி வாங்க வாங்க னு தனித்தனியா கூப்புடுங்க.    PK சார் கூட நான் போக வேண்டிவந்தா எப்பிடியும் 3.30 மணிக்குள்ள ஜங்க்ஷனுக்கு வந்துடுவேன், பயப்படாதீங்க. குக் கிட்ட ராமசாமி தெளிவா பேசிட்டார் அப்புறம் ஒரு புரோகிதர் என்னவோ பேர் சொன்னார் அவர் வந்து கல்யாணம் பூராவும் சாஸ்திரமா பண்ணி  கொடுப்பார். எந்த கவலையும் வேண்டாம். .ராமசாமி பக்காவா ஏற்பாடு பண்ணியிருக்கார். கல்யாண பார்ட்டி க்கு நைட் சாப்பாடு மண்டபத்திலேயே ரெடி பண்ணி குடுத்துருவாங்க. அப்புறம் நீங்க வீட்டுக்கு போறதுன்னா கல்யாண பையன் தாயார் கிட்ட சொல்லிட்டு போங்க அப்பதான் நம்பள தேட மாட்டாங்க என்று அறிவுரை சொன்னார் மாடசாமி..

சொன்னபடி அனைவரும் நடந்து கொண்டனர்.

PK, உமா இருவரையும் புதன் மாலை ராமசாமி தன்  வீட்டிற்கு அழைத்தது சென்றார்  . போகும் முன் மாடசாமி PK தம்பதியினரை வணங்கி அவர்களின் லக்கேஜ்  மாடசாமி மேற்பார்வையில் பெரிய வேன் இல் வைத்தனர். ஏற்பாடு சுபத்ரா மேடம் அவரும் இருந்தார். அறிமுகம் முடிந்து, ஸ்ரீரங்கம் சென்றனர். சுபத்திராவின் பங்களிப்பை பாராட்டினார் PK . மறுநாள் சமயபுரம் போக முடியுமா என்று உமா கேட்க, அதற்கும் ஏற்பாடுகளை சுபத்திரா போனில் செய்து , காலையில் 6.00 மணிக்கு வருவதாக சொல்லி விடை பெற்றார் சுபத்திரா . காலை 6.00 மணிக்கு மாடசாமி யை வரச்சொல்லி ராமசாமி பூரா விவரமும் தெரிவித்தார். மறுநாள் காலை 6.00 மணிக்கு சுபத்திரா மாடசாமி வந்து சேர்ந்தனர். காபி முடித்து 6.40க்கு கிளம்பினர் அனைவரும்..

உமா, அம்மனுக்கு சார்த்த புடவை வைத்திருந்தார்.

சுபத்திரா/மாடசாமி இருவருக்கும் பலத்த வரவேற்பு மாரியம்மன் கோயிலில், நொடிப்பொழுதில், வேண்டிய அனுமதியுடன் தலைமை பட்டரிடம் புடவையை கொடுத்து, சுபத்ரா சொல்ல, PK தம்பதியினர் வெகு அருகில், அம்மன் தரிசனம் செய்தனர்.மாலை மரியாதை,கை  நிறைய மலர்கள் எலுமிச்சை மாலை, குங்குமம் விபூதி   என்று திக்குமுக்காடினார் PK தம்பதியினர். சுபத்திரா /மாடசாமி செல்வாக்கை நேரில் கண்ட ராமசாமியே சற்று மிரண்டுதான் போனார்.

அம்ஜம் நெகிழ்ந்து போனாள்  அம்மனின் கம்பீர தோற்றத்தில்.

சுபத்திரா தனது விருப்ப ஹோட்டலில் அனைவருக்கும் காலை டிபன் வழங்கி அனைவரும் மிகுந்த மகிழ்வுற்றனர். இங்கதான், கௌரியும் அக்காவும் மேடத்துடன் டிபன் சாப்பிட்டதாக முன்பு சொன்னதை நினைவு கூர்ந்தார் மாடசாமி.

இப்போது சுபத்திரா வின் ஆளுமை பலரையும் வியக்க வைத்தது.. நல்லா லஞ்ச் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க, சாயந்திரம் உச்சிப்பிள்ளையார் கோயில், வயலூர் முருகன் கோயில், ஜம்புகேஸ்வரம் தரிசனம் செய்யலாம் நாங்க 4.30க்கு வருவோம் என்று ஸ்ரீரங்கத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு விடை பெற்றனர் சுபத்திராவும் மாடசாமியும். மாடசாமி மாலையில் சுப்பிரமணி கோஷ்டியை வரவேற்க சுந்தரி வேண்டுகோள் சொல்லியிருக்கிறாள், எனவே மாலை மேடம் வருவார் என்று ராமசாமியிடம் தெரிவித்து மலை 3.15 மணிக்கு ஜங்க்ஷன் சென்றார் .அவரைப்பார்த்தபின் தான் சுந்தரிக்கு இயல்பு நிலை திரும்பியது

வண்டி லேட்டாக 4.00 மணிக்கு வந்தது . சுப்பிரமணி இறங்கியதும் ஓடி வந்து மாடசாமியின் கால் தொட்டு வணங்கினான். அனைவரையும் வாங்க வாங்க என்று தனித்தனியே வரவேற்றனர். அதே வரவேற்பு கஸ்தூரிரெங்கனுக்கும் கிடைத்தது , அவனை சுந்தரிக்கு தெரியாது மொத்தம் 5 பேர் சுப்பிரமணி , தாயார்,  , பெரியம்மா, PK வீட்டில் வேலை செய்யும் பரமேஸ்வரி [புதுக்கோட்டை பெண்],    ரெ.

ரெ , நான் இப்ப வீட்டுக்கு போய்விட்டு காலம்பற 6 .00 -6.30க்கு வந்துடறேன் என்றான்.  தம்பி எதுக்கும் ராமசாமி சார் கிட்ட சொல்லிட்டு அவர் என்ன சொல்றாரோ அது படி செய்ங்க , அவர் உங்களுக்கு ஏதாவது வேலை சொன்னார்னா ? அதுனால சொல்றேன் என்றார். மாடசாமி அவர் இப்ப ஆபீஸ்ல இருப்பாரா என்றான் ரெ .இல்லை அவர் வீட்டுல இருக்கார் உங்க boss PK சார் ரா சா வுடன் தங்கியுள்ளார். ரெ   "ங்கே " என்று விழித்தான் . போன் போட்டு கேளுங்க என்றார் மாடசாமி.   ரெ வுக்கு வயிற்றில் புளி -பயங்கர கறுப்பு புளி  ,ராமசாமியுடன் பேச இவனுக்கு குலை நடுக்கம் . ரெங்கநாதா என்று உள்ளூர புலம்பிக்கொண்டு போனில் தான் வந்திருப்பதையம், வீட்டுக்கு போய் விட்டு வரலாமா , நீங்க சொல்றபடி செய்யறேன் என்று  சொன்னான். வந்துட்டயா நீ , என்னடா ஒரே இருட்டிண்டு கொட்டப்போறா மாதிரி இருக்கு னு பார்த்தேன். சரி நீ எங்க வேணும்னாலும் போ , எப்ப முடியுமோ வா , உன்னைப்பத்தி எனக்கென்ன கவலை [அக்கறை]? .சுப்பிரமணி ஊகித்துவிட்டான் ரெ வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறான் என்று.. போனை வாங்கி சுப்பு பேசினான், நல்லா இருக்கீங்களா, மாமி நல்லா இருக்காங்களா, எங்க BOSS உங்ககூட தானே இருக்காங்க, நாங்க வந்துட்டோம், அவங்களை ரொம்பக் கே ட்டதா  சொல்லுங்க..

அப்புறம், ரெ க்கு ஏதாவது ஒர்க் இருந்தா இருந்து செய்வார் அதைத்தான் கேட்டாரு என்றான் சுப்பு.

  நீ அவனுக்கு பிஏ [PA] வா. போங்கய்யா அவனை நம்பி வேலை சொல்ல எனக்கு என்ன புத்தி இல்லையா என்ன?. எல்லாம் கடவுள் புண்ணியத்துல, ஏற்பாடா யிருக்கு. உங்க யாருக்கும் இங்க வேலை செய்ய சொல்ல மாட்டேன் நீங்க எல்லாரும் மாப்பிள்ளை குழுவினர். நல்ல ரெஸ்ட் எடுங்க காலைல சந்திப்போம். என்று கறாராக பேசி முடித்தார். சரி, என்று ரெ வீட்டுக்கு சென்றான்.

ஏனையோரை மண்டபத்தில் தங்கவைத்து,   மாடசாமியும் சுந்தரியும் விடை பெற்றனர் .    

தொடரும்

அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...