MUSIC DIRECTOR R. SUDARSANAM
இசை அமைப்பாளர்
ஆர் சுதர்சனம்
ஆரம்ப கால ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர். அந்த நிறுவனத்தின் துவக்க ஒலியாக [SIGNATURE TUNE ] இன்றளவும் நாம் கேட்டு ரசிக்கும் க்ளாரினெட் இசை திரு சுதர்சனம் அவர்களின் கற்பனையில் உதித்தது தான். ஏராளமான வெற்றிப்பாடல்களை
உருவாக்கிய
இசை
அமைப்பாளர்.
அவரின்
சில
பாடல்களை
இன்றைய
பதிவில்
காண்போம்
..
கண்ணா கருமை நிறக்கண்ணா [நானும் ஒரு பெண்-1963] கண்ணதாசன் , ஆர் சுதர்சனம் பி சுசீலா
கண்ணன் பாடலுக்கு இவனே கவி என கண்ணதாசனை அடையாளப்படுத்திய பாடல். சுசீலாவின் பாவமும் கருமை நிறப்பெண்ணின் சோகமும் மிளிர பட்டி தொட்டி எங்கும் ஒலித்த அற்புதம் . சொற்களில் கண்ணனை வாங்கு வாங்கென்று வாங்கும் பெண்ணின் குமுறல். வெற்றிப்பாடல் , ஹிந்தியிலும் அப்படியே ஒலித்த பாடல். ஹிந்தியில் இசை சித்ரகுப்தா. குரல்லதா
மங்கேஷ் கர் இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=xO1RW80P8YU
https://www.youtube.com/watch?v=yPp5qrBMFrE
HINDI SONG
தெய்வப்பிறவி 1960
தாரா தாரா வந்தாரா தெய்வப்பிறவி [1960] உடுமலை நாராயண கவி , ஆர் சுதர்சனம் குரல் : ஜமுனாராணி
இளம் பெண் காதல் மன நிலையில் பாடும் பாடல். அந்நாளைய எம் என் ராஜம் காட்சியில் பாடுவதைக்காணலாம். பாடலில் லேசான லின்டாலும் ஒலிக்கிறது. அக்காலத்தில் பிரபலமான கீதம் . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
அன்னை-1962
அழகிய மிதிலை நகரினிலே [அன்னை 1962] கண்ணதாசன் சுதர்சனம் , குரல்கள் பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா
ஒரு அருமையான காதல் டூயட் ஆனால் சொற்களின் அமைப்பில் காவியம் பளிச்சிட ராஜாவும் சச்சுவும் சென்னையில் வலம் வந்து மகிழும் காட்சி. 1960 ல் சென்னை மிக அமைதியாக இருந்திருப்பதையும் சாலைகளில் கார்கள் ஆனால் பைக், ஸ்கூட்டர் ஆட்டோ இல்லை ; பலர் சைக்கிளில் பயணிக்க சிலர் டாக்ஸிகளில் என வியப்பூட்டும் காட்சி . சச்சுவே பாடுவது போல் சுசீலாவின் குரல் -கேட்கவே சுகம்.
அற்புதமான இசை அமைப்பு. வெற்றிப்பாடல் .கேட்டு மகிழ இணைப்பு இதோ
புத்தியுள்ள மனிதரெல்லாம் [அன்னை-1962 ] கண்ணதாசன் சுதர்சனம் குரல் ஜே பி சந்திர பாபு
வெகு நேர்மையான கருத்துகள், இன்றைய உலகின் நிலை பேசும் சொற்கள் பணம் மனம் , காதல் ,மணம் , வாழ்வு பிரிவு எதுவும் தரவைப்படி அமைவதில்லை என்று ஆடிப்பாடும் சந்திரபாபு. பொருள் பொதிந்த நகைச்சுவை . இணைப்பு இதோ
தொடரும் அன்பன் ராமன்
An indepth analysis. RK
ReplyDelete