SALEM SUNDARI- 56
சேலம் சுந்தரி-
-56
இந்த சந்தடி யில் ஒரு ஐயங்கார் [குசும்பு//சேஷ்டை/ திரிசமன்] அரங்கேறியது.
உமா, ஒரு டிபிகல் மாமி;
நைசாக அம்புஜத்திடம், இந்த புளியோதரை ரெசிபி கிடைக்குமா? என்று காதும் காதும் வைத்தாள்.
அம்புஜம் “அதுல [புளியோதரை ரெசிபில] 3, 4 தினுசு இருக்கு. கோவிச்சுக்காதீங்கோ எவ்வளவு ரெசிபி இருந்தாலும் உங்கடவாளுக்கு [ஸ்மார்த்தா ளுக்கு] அக்கார அடிசில், புளியோதரை, தட்டையும் ஒழுங்காவே வராது, எங்கடவாளுக்கு [அய்யங்காருக்கு], பிள்ளையார் கொழுக்கட்டை, சேவை,தோசை மாதிரி மெல்லிசு அடை, புட்டு நீர் மோர்
இதெல்லாம் சரியாவராது. கோச்சுக்காதீங்கோ என்று சொல்ல, உமா ரைட் தான் என்று சிரித்தாள் ,
அழகான பல் வரிசை தெரிய.
அம்புஜம் சொன்னாள் .
“நான் குக் கிட்ட கேக்கறேன் என்று உமாவையும் கூட்டிக்கொண்டு உள்ளே போனாள். சேஷாத்திரி அதிர்ந்தான்-- மாமி ஏதோ புகார் கொண்டுவருகிறாளோ என்று; மடித்துக்கட்டியிருந்த டபபா வேஷ்டியை கீழே இறக்கி விட்டான்.
விஷயம் தெரிந்ததும்,
“மாமி [உமாவிடம்]
3, 4 ரெசிபி இருக்கு எழுதி தரேன். இப்போதைக்கு புளிக்காய்ச்சலே இருக்கு 1/2 கிலோ அளவு நல்ல பிளாஸ்டிக் டபபால தரேன் ஊருக்கு கொண்டு போங்கோ 1
மாசம் வரைக்கும் தாராளமா இருக்கும், நல்ல எண்ணையை சரியா விட்டு கிளறியிருக்கேன்..
ஸ்பூன்- எப்பவும் சொட்டு தண்ணி கூட இல்லாம யூஸ் பண்ணுங்கோ, விரல் விட்டு எடுக்கக்கூடாது.
10
நிமிஷத்துல தரேன், என்று நன்கு பேக் செய்து உமாவிடம் சேர்ப்பித்தார் குக்.
சுபத்திரா , சுந்தரி ,
சாரதா அடுத்தடுத்து அமர்ந்து சாப்பிட்டனர். எதிர் வரிசையில் பெரியசாமி கோஷ்டியுடன் அமர்ந்து நன்கு ரசித்து உண்டனர்.
. சுந்தரிக்கு நினைவு வந்தது சாராதா, பெரியசாமி இருவருக்கும் பணம் தர வேண்டும் சாப்பிட்டதும் முதல்வேலையாக அதை செய்ய வேண்டும் எனமுடிவெடுத்தாள்.
ராமசாமி மாடசாமி இருவரும் விருந்தினருக்கு தாம்பூல பைகளை கவனமாக கொடுத்துக்கொண்டிருந்தனர். பின்னர் சாப்பிட்டனர். பிறகு
payment பற்றி ராமசாமியிடம் கேட்டாள் சுந்தரி .
அவர் சொன்னார் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் தட்டில் வைத்து, உரிய தொகையுடன் தாம்பூல/பக்ஷண பை வைத்து பவ்யமாக கொடுக்கணும் , கொஞ்சம் பொறு என்று சொல்லி சாப்பிட்ட பின் அவரே அருகில் இருந்து முறைப்படி செய்வித்தார்.
சாரதாவுக்கு? மேடத்தை கேட்டாள்
சுந்தரி .
அவ சொல்லலையா? என்றார் மேடம். இல்லை என தலை அசைத்தாள் சுந்தரி
ஏய் உனக்கு எவ்வளவு டி ? சாரதா மௌனம் காத்தாள் . சொல்லு
--அப்போதும் மௌனம் ;
அடியேய் “பிரேக் ஈவென்?
" அவள் 350/-
சரிம்மா 500/- குடுங்க என்று சொல்லிவிட்டு ,
குடுக்கலாம் இல்ல? என்று கேட்டார் மேடம் .
ஓ என்று, தலை அசைத்தாள் சுந்தரி.
சாரதாவுக்கும் மேடத்துக்கும், கண்கலங்க நன்றிப் பெருக்குடன் மரியாதை செய்தாள் சுந்தரி. பெரியாசாமிக்கு கேட்கவே வேண்டாம் அதுவும் யுனிவெர்சிட்டி ஸ்டுடென்ட் என்று தெரிந்ததும் அவருக்கு தாம்பூலம்+ [ரூ 2000/] வழங்கும் போது பலத்த கைதட்டல்;
மாடசாமி இன்னார் என்று அறிமுகம் ஆனதும் பெரியசாமி, மாடசாமியை காலில் விழுந்து வணங்கி
"கௌரி"யக்கா வுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டவனுங்க என்று தலை வணங்கி சொன்னான்.
ஆங்காங்கே மக்கள் பேசிக்கொண்டிருந்தனர்
அதில் பனைமரத்துப்பட்டி செட்டியார் -உமா -PK ஒரு புறம் மிகுந்த வாஞ்சையுடன் பேச, செட்டியார் ஒரு புடவையை யும் வேஷ்டியையும் உமாவிடம் கொடுத்து இதை பொண்ணு-மாப்பிளைக்கு உங்க கையால குடுங்க என்று சொல்லி அவ்வாறே செய்தனர் உமா-PK . பெரியவர போல வராதுங்க- [உமாவின் தகப்பனார்பற்றி] செட்டியார் கண்ணீர் மல்க குறிப்பிட உமாவுக்கு கண்கள் கலங்கின.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment