Thursday, October 10, 2024

MUSIC DIRECTOR R GOVARDHANAM

 MUSIC DIRECTOR   R GOVARDHANAM

இசை அமைப்பாளர்  ஆர். கோவர்தனம்

இன்றிலிருந்து பின்னோக்கி ஒரு 65 ஆண்டுகால தமிழ் திரை இசை யின் வளர்ச்சியை பின்பற்றிவந்தவர் களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர். கோவர்தனம்

 இதே போல் இன்னொரு ஆளுமை உண்டா எனில், ஆம் ஒன்றே ஒன்று உண்டு அவர் தான்-- புகழேந்தி. இவ்விருவரும் இல்லாமல் 70 களில் பாடல் பதிவு நடந்ததா எனில் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருந்திருக்கலாம் . ஆனால்  .இவர்களின் சேவை ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு  மகத்தானது. புகழேந்தி திரு கே வி மகாதேவனின் உதவியாளர் [கர்னாடக சங்கீதத்தில் தேர்ந்த ஞானம் கொண்டவர் சங்கராபரணம் படத்தில் எஸ் பி பி யை ஒரு பெரும் சங்கீதக்கலைஞ ராக உயர்த்திய பெருமை புகழேந்திக்கே சேரும் ]. திரு கே வி எம் அவர்களின் ஆக்கங்களுக்கு துணை நின்றவர்.

இது ஒரு புறம் இருக்க திரு  கோவர்தனம் பல ஆண்டுகள் எம் எஸ் வியின் இசைக்குழுவில் கண்டக்டர் [conductor] ; பலதருணங்களில் டைட்டில் கார்டுகளில் இசை உதவி கோவர்தனம் -ஹென்றி டேனியல் என்று பார்த்திருப்பீர்கள். அந்த கோவர்தனம் தான் இன்றைய பதிவின் நாயகன்.

இவர் வேறு யாருமல்ல இசை அமைப்பாளர் ஆர் சுதர்சனம் அவர்களின் இளைய சகோதரர் தான்.      னால், பெரும்பாலும் இருவரும் தனித்து இயங்கியவர்கள் அதிலும் கோவர்தனம் நீண்ட இசை வரலாறு கொண்டவர். அவர் ஒவ்வொரு பாடலுக்கும் என்னென்ன ட்யூன் , மாற்றங்கள், இசைக்கோர்வைகள், கருவிகளின் வரிசை அவற்றிற்கான குறியீடுகள் [நொட்டேஷன் -notation] அனைத்தையும் விரல் நுனியில்   வைத்துக்கொண்டு இசைக்கலைஞர் கள் பிழை செய்யாமல் இயக்கும் பேராற்றல் கொண்டவர்.. அவரை கம்பியூட்டர் என்றே சிலர் குறிப்பிட்டு வியந்ததை பார்த்திருக்கிறேன் . மேலும் சி ஆர் சுப்புராமன் காலத்திலேயே இசை உதவியாளர் ஆக பணியாற்றி தனது ஆளுமையை களப்படுத்தியவர். .  கோவர்தனம் போல ஒரு உதவியாளர் வாய்ப்பது. இசை அமைப்பாளனுக்கு கிடைத்த வரம் எனில் மிகை அல்ல. இவர் பல படங்களுக்கு இசை அமைத்து வெற்றிப்பாடல்களை படைத்தவர். ஆனால், பல தருணங்களில் திறமை அங்கீகாரம் பெறுவதில்லை. அந்த வகையில் கோவர்தனம் இருக்க நேர்ந்ததை என்னென்று சொல்ல?

சரி அவரின் ஆக்கங்களில் சிலவற்றைக்காண்போம் . .

காதலெனும் ஆற்றினிலே [கைராசி- 1960]  கண்ணதாசன் -கோவர்தனம், டி எம் எஸ், பி சுசீலா குழுவினர்.

அந்நாட்களிலேயே பெண்களை கிண்டல் செய்யும் காட்சி. பாடலின் நயம் மறுக்க வொண்ணாதது. இசையின் பாங்கில் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் R G என்பதை வலிமையாக கட்டமைத்துள்ளார். அதிலும் ராகம், குரல் கட்டுப்பாடு, இடை இசை , உச்சரிப்பு எதிலும் இது ஒரு உயர் வகைப்பாடல் எனில் மிகை அல்ல. கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=kadhalenum+aatrinile+video+song+download&oq=kadhalenum+aatrinile+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUqBwgBECEYoAEyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRigATIHCAUQIRigAdIBCTE4MjQ4aj KAIRASI 1960, KD RG TMS, PS

அதே படத்தில் அமைந்த மற்றுமோர் வெற்றிப்பா டல்

அன்புள்ள அத்தான் வணக்கம் [கைராசி 1960] கண்ணதாசன் கோவர்தனம் , பி சுசீலா

எவ்வளவு இயல்பான அமைப்பில் பாடல். உண்மையிலேயே R G  சிறப்பான திறமையாளர். என்பது பளிச்சிடுகிறது அதிலும் சரோஜாதேவியே பாடுவதுபோல் சுசீலாவின் குரலில் இழை ந்துள்ள நளினம் . பாடலில் அவ்வப்போது தோன்றும் பாவங்கள் எவரையும் வசீகரிக்கும் .சொல்லிக்கொண்டே போகலாம் . ரசியுங்கள் இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=anbulla+athan+vanakkam+song+video+song+download&newwindow=1&sca_esv=420e1a9f55386e97&sxsrf=ADLYWILhFN5YCRqeaptvvTntGIEcEBZoLg%3A1728459878350&ei=ZjQGZ6iLFayNseMP8fu1qQE&oq=ANBULLA++  KD RG PS PS BSS MATCH

 

எண்ணம் போல கண்ணன் வந்தான் [ பூவும் பொட்டும் -1968] கண்ணதாசன், கோவர்தனம் பி சுசீலா

மிகவும் ரம்மியமான பாடல், காதல்பொங்கினாலும் ஊடலும் பிணைந்துள்ள பாடல்-கவிஞர் அல்லவா, அதற்கேற்ற கம்பீரமும் இசை நடையும் பாடலின் சிறப்பு. அதிலும் கண்ணன் ராமன் இரு காவிய நாயகர்கள் குறித்த விளக்கத்தில் ட்யூன் எவ்வளவு உணர்ச்சியை சுமந்து வந்திருக்கிறது. ஊன்றி கவனியுங்கள் தமிழ் பாடல்கள் எவ்வளவு தரமானவையாக வலம் வந்திருக்கின்றன என விளங்கும். கௌரவமான நடிப்புக்கும் இப்பாடல் இடம் தந்துள்ளது. ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=ENNAM+POLA+KANNAN+VANDHAN+AMMAMMA+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=9ae0de02914ab2f0&sxsrf=ADLYWIKX_lySgy17C-xblC-pceba7N_mLQ%3A1728460252962&ei=3DUGZ-62OvaPseM POOVUM POTTUM KD RG PS

நாதஸ்வர ஓசையிலே [பூவும் பொட்டும் -1968] கண்ணதாசன் கோவர்தனம்             டி எம் எஸ், பி எஸ்

பாடலின் உள்ளார்ந்த பொருள் சரசம் என்றாலும் விரசம் இல்லாத பண்பு நிறைந்த கவிதை. கவிதைக்கேற்ற இசை நளினம் மற்றும் மேன்மை இரண்டும் பாடலின் பெருமைக்கு அச்சாரம் . காட்சி அமைப்பிலும் ஒரு நல்ல ரசனை. பாரதியின் நளினம் சொல்லவேண்டியதில்லை, அதற்கு ஈடாக அன்றைய வி எம் ராஜன் ; மனம் அமைதிப்படும் வகைப்பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=NADHASWARA+OSAIYILE++VIDEO+SONG&newwindow=1&sca_esv=9ae0de02914ab2f0&sxsrf=ADLYWIJ8gHSrN8aik-8Q9MP_zeI6gpG2sg%3A1728460603357&ei=OzcGZ7m_FbSF4-EPnrnqsQY&ved=0ahUKEwj5yJXC6YCJAxW0wjg TMS PS  AVM R BHARATHI

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. பதிவிட்ட நான்கு பாடல்களும் அற்புதமானவை. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவை. ஆயினும் இசை அமைத்த இத்தகைய கலைஞர்கள் பிரபலமாக இருந்தார்களா என்பது எனக்கு தெரியாது.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...