TM SOUNDARARAJAN –25
டி எம் சௌந்தரராஜன்-25
ஒருவர் மனதை ஒருவர் அறிய [கௌரி கல்யாணம் -1966] எம் எஸ் வி, டிஎம்எ ஸ்
மிகவும் யதார்த்தமான பாடல் ;அந்தக்காலத்துக்கு பொருத்தம் ஆனால் இன்று இப்பாடலை வரவேற்போர் இலர். இப்போது தபால்கள் நடைமுறையில் இல்லை ;அலுவலகங்கள் தவிர கடிதப்போக்குவரத்து செய்வோர் எவரும் இல்லை. ஆனால் அன்றைய சூழலை பாடல் நன்றாக விளக்குவதையும் , மணி யார்டர் மூலம் பணம் பெறுவதையும் பார்த்தால் நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் வியப்பூட்டுகின்றன .பாடலிலஜெய்சங்கர் நடிக்க சைக்கிளில் பயணித்து கடித பட்டுவாடா செய்கிறார். பாடலுக்கு இணைப்பு இதோ
gpuri
kalyanam 1966 kd msv tms
அவன் நினைத்தானா
இது
நடக்குமென்று
[செல்வ
மகள்
-1967] வாலி
எம்
எஸ்
வி
டி
எம்
எஸ்
சோகப்பாடலுக்கு பியானோவை கையாண்டுள்ளார் மெல்லிசை மன்னர். பாடல் நெடுக ஏமாற்றம் தந்த சோகம் நிறைந்து அதை பியானோவில் விழும் அழுத்தமான ஸ்வரங்கள் பேச கேட்கவே துன்பம் மேலிடும் பாடல் . மீண்டும் ஜெயசங்கருக்கு டி எம் எஸ் குரல். காட் சியின் அழுத்தம் வெகுவாக தெரிகிறது. . இணைப்பு இதோ
https://www.google.com/search?q=avan+ninaithana+idhu+nadakkumenru+video+song+&newwindow=1&sca_esv=159f37a1251190f9&sxsrf=ADLYWIJfwJaFSFTXr4gWddGR4iS3DwsShA%3A1728369801342&ei=idQEZ4LNFITBjuMPqemOmAE&ved=0ahUK selva magal vali msv tms
எல்லோரும் நலம் வாழ [எங்க மாமா -1970] கண்ணதாசன் , எம்
எஸ் வி, டி எம் எஸ்
மற்றுமோர் சோகம், மீண்டும் பியானோ
ஆ னால் வேறு வகை இசைக்கலவைகள காணலாம் . இப்போது காட்சியி
ல் சிவாஜி கணேசன் , எனவே டி எம் எஸ்ஸின் குரல்
வேறு பரிமாணத்தில். கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.google.com/search?q=ellorum+nalam+vazha+video+song+%5Benga+maama+%5D+&newwindow=1&sca_esv=85bbdc58692395e1&sca_upv=1&sxsrf=ADLYWILoYfeY81PLpE157Nrrp6-rLNrgDw%3A1727318736142&ei= ellorum nalam vaazha kd msv tms
மாதவிப்பொன் மயிலாள் [இரு மலர்கள்] 1968 வாலி, டி எம் எஸ்
நாட்டியப்பாடல் முறையான ஜதிகளுடன் . சொ ல்லாட்சியையும் பாடலின் கம்பீரத்தையும் பார்த்து பலர் இது கவியரசு கண்ணதாசன் பாடல் என்றே நினைத்திருந்தனர். ஆனால் வாலியின் பாடல். மேலும் சில சொல்லமைப்புகளை கண்ணதாசன் வியந்து பாராட்டிய பெருமை கொண்ட பாடல்.. டி எம் எஸ்ஸின் கந்தர்வக்குரலில் தமிழகத்தை வலம் வந்த நாட்டியப்பாடல்,. எத்துணை வகையான
பாடல்கள் பாடியுள்ளார் டி எம் எஸ் அவர்கள். . பாடலுக்கு இணைப்பு இதோ
சொர்க்கம் பக்கத்தில் [எங்க மாமா ] கண்ணாதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி
முற்றிலும் மாறுபட்ட மேற்கத்திய இசைக்கலைவைகள் மாற்றும் வசீகர உச்சரிப்புகளுடன் பாட ல் பயணிக்க; எண்ணற்ற வகைகளில் பின்னிப்பிணைந்த இசைக்கருவிகளின் ஆதிக்க நாதம். போங்கோ ட்ரம் கூட்டு அதிரல்கள், பாடலை வேறு
கள
த்திற்கு
உயர்த்த பாடலின் தரம் முற்றிலும் எட்ட முடியாத உயரம் மட்டும் அல்ல இசைக்கருவிகளின் அதகளம். மனிதர்களின் நேரடி வாசிப்பில் எழுந்த ஒலிகள் எவ்வளவு முறுக்காக ஒலிக்கிறது.. பாடகர்களின் பங்களிப்பு மகோன்னதமான தரம் மற்றும் நிர்மலாவின் நாட்டியம் போற்றும் வகையில் அமைந்த விறுவிறுப்பு குன்றாத வேகம் பாடலின் சிறப்பு . . கேட்டு மகிழ இணைப்பு இதோ .
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment