Tuesday, October 8, 2024

OLD MOVIE SONGS -5

OLD MOVIE SONGS -5 

பழைய திரைப்படப் பாடல்கள்-5

பழைய பாடல்களில் கவி சொல்லாத அலங்காரங்கள்

அது என்ன கவி சொல்லாத அலங்காரங்கள் என்ற கேள்வி எழும். அதுதான் சில இசை அமைப்பாளர்கள் பாடலுக்கு சுவை கூட் டிய  உத்தி எனில் தவறில்லை . இந்த அலங்கார மெருகேற்றும் வேலை எப்போது துவங்கியது , யார் துவங்கியது போன்ற ஐயங்களுக்கு . விடை காணுதல் எளிதன்று. எனினும் இந்த ஜோடனைகள் பாடலுக்கு புதிய பரிமாணம் தந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது

அந்தக வித்தகத்தில் எத்தன் எம் எஸ் விஸ்வநாதன் என்பதை பல சான்றுகளோடு விளக்கலாம். அதில் தான் எத்துணை வகைகள் ஆனால் அவை இல்லாமல் பாடலைப்பாடி ப்பார்த்தால் பாடலுக்கு ஏதோ மழுங்க மொட்டை அடித்துவிட்டது போல் தோன்றுவதாக நினைக்கத்தோன்றுகிறது.

கவிதை என்ற ஒன்று இருந்தால் தான் இசை அமைக்க ஏதுவாகும். அப்படியானால் மீட்டருக்கு மேட்டர் எனும் ட்யூனுக்கு பாடல் எழுதுவது ஏன் / எப்படி என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதுதான் அந்த க்கால படங்களில் கதாசிரியர்- இயக்குனர்- இசை அமைப்பாளர் -கவிஞர் கூடிப்பேசி பாடலை உருவாக்கும் தொழில் பண்பு.. காட்சியும் கதையும் புரிந்துகொண்ட பின் இசை அமைப்பாளருக்கு [அதாவது நல்ல இசை அமைப்பாளருக்கு] கற்பனை ஊற்றெ டுக்கும் . அவர் ஏதாவது, லாலா/ நானா நா என்று அஸ்திவாரம் போடுவார். அதை ஒட்டி கவிஞர் சொற்களை தொகுப்பார் . அப்போது தான் ட்யூனில் கவிதை உட்காரும் . எனவே பாடல் என்பது உணர்வுகளின் [பாவம் வெளிப்படுத்தும்] பிரதிபலிப்பு என்றே புரிந்து கொள்ளலாம். எனவே பாவம் என்பது மூட் [mood ] எனும்மனநிலை சார்ந்தது.

நல்ல இசை அமைப்பாளனுக்கு காட்சியில் mood உணர்த்துவது என்ன என்று தெளிவாக உணர்த்திவிட்டால் பின்னர் வானமே எல்லை., எல்லையே இல்லை என சிறகடிப்பார். [கற்பனை வறண்ட இசை அமைப்பாளர் நம்மை சிறகொடிப்பார்] - அதுவே இரு ஆளுமைகளுக்கான வேறு பாடு..

அந்த அடிப்படையில் பாடலின் பாவம் மேலிட சொல் எதற்கு ? ஒலி  போதுமே   என்பதாக எம் எஸ் வி கையில் எடுத்த உத்திகள் ஏராளம் . அவற்றில் பல அணுகுமுறைகள் உண்டு ; சிலவற்றைக்காண்போம்.

டட டட் டா   டா/ சம் சம் சம், லா ரம் லா ரம் பம் , ராரரீ போன்ற கவி சொல்லாத அலங்காரங்கள்

‘டட டட் டா   டா  என்று குரல் கொடுத்துப்பாடும் குதூகலம்’. பெரும் பாலும் டூயட் வகைப்பாடல்கள் தான் இந்த குதூகலத்திற்கு ஏதுவான களம் என்று எம் எஸ் வி யின் பாடல்களை ஊன்றி கேட்டு ரசித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதோ அவ்வகைப்பாடல்களை    டட டட் டா   டா இல்லாது  கற்பனை செய்து பாருங்கள் , ஏதோ ஒன்று மாற்று குறைந்ததாக தோன்றும் .

ஜில்லென்று காற்று வந்ததோ [நில் கவனி காதலி-1969] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ்,சுசீலா

நீச்சல் குள ப்பாடல், இசையில் எவ்வளவு நுணுக்கங்கள், அக்கார்டியன்  அவ்வபோது நேரலை போல் பாய்வதையும் , ஆண் குரலில் டட் டா ஒளிப்பதைகேளுங்கள் கற்பனையின் வீச்சு புரியும் இணை ப்பு இதோ 

https://www.google.com/search?q=jillendru+kaarru+vandhadho+video+song+download&newwindow=1&sca_esv=4ff4415d42662cf1&sxsrf=ADLYWIIroAgauKIzwtS5WPrgXN3W1pLvIA%3A1728210483213&ei=M2YCZ-zSDOzm4-EPw4rLiQU&oq=jillendru+kaarru+vandhadho+vi

ஹாப்பி இன்று முதல் ஹாப்பி [ஊட்டி வரை உறவு]-1967, கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ், சுசீலா

மிகுந்த உற்சாகத்தில் மிதக்கும்- இருவரின் உடல் மொழி இப்பாடலின் தனிச்சிறப்பு. அதே நேரத்தில் எப்படி ஓங்கி ஒலித்து படுகிறார்கள்; ஹாப்பி இன்று முதல் ஹாப்பி என்று பல்லவி முடிந்த தும் அக்கார்டியன் எவ்வளவு நேர்த்தியாக ஒலிக்கிறது கூடவே பிற இசைக்கருவிகள் பாய்ந்து களம் காண ஒரே உணர்ச்சிக்குவியல். திடீரென்றுட டட் டா , டட் டாஎன்று குதூகலம் கொப்பளிக்க பெண் பாட, பின்னர் ஆண் குரலும் அதையே ஒலி க்க , பாடல் விண்ணில் மிதக்க , இந்த உறவுக்கு தடையேது இந்த பிறவியில் கிடையாது எனும் பகுதியில் உணர்ச்சியின் விளிம்பில் இருவரும் இடக்கையால் வலக்கையில் தாளமிடுவதையும் மீண்டும் ஓங்கிப்பாடுவதும்,  வித விதமான [அளவில் ஊசி முதல் உலக்கை வரைஅமைந்த ] புல்லாங்குழலில் எழும் நாத அலைகள் பாடலின் பரிமாணத்தை பன் மடங்கு உயர்த்த , இப்பாடல் சொற்களை விட ஒலிகளால் மிளிர்ந்த நளினம் என்பது எனது பார்வை.

https://www.google.com/search?q=HAPPY+INRU+MUDHAL+HAPPY&oq=HAPPY+INRU+MUDHAL+HAPPY&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgNGB4yCAgCEAAYDRgeMggIAxAAGA0YHjIICAQQABgNGB4yCAgFEAAYDRgeMggIBhAAGA0YHjIICAcQABgNG

கேட்டுக்கொடி உறுமி மேளம் [பட்டிக்காடா  பட்டணமா 1972] கண்ணதாசன் எம் எஸ் வி, டி .எம்.எஸ் எல் ஆர் ஈஸ்வரி

காலத்தில் அழியாத ஒரு மினி fusion ; ஆம் கிராமத்து ஆணும் நகரத்துப்பெண்ணும் ;அனால் இசை கருவிகள் ஆணுக்கு மேற்கத்திய வகையின, பெண்ணுக்கு -உறுமி , உடுக்கை ஆனால் சொல்லில் லாரம் பம் லாரம் பம் என்று பெண்ணும், டடட டடட ஒளியை மாறி மாறி  பெண் ஆண் இருவரும் பாட , வெகு நேர்த்தியான ஒலிக்கலவைகளின் சங்கமம் இப்பாடல். திடீரென்று கிராமிய இசையை கண்டுபிடித்தார் போல் பேசுகிறார்கள் இப்பாடல் எப்போதோ பட்டி தொட்டி எங்கும் பிரபலம். உணர்ச்சிகளின் பிரவாகம் இந்த உறுமி மேளம் பாடல். எண்ணற்ற கருவிகளின் குழப்பமில்லா பங்களிப்பு இப்பாடல் கேட்டு மகிழ இணைப்பு .

dada daa dada daa +larumpum larum pum

https://www.google.com/search?q=kettukkodi+urumi+melam+video+song&oq=kettukkodi+urumi+melam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQRRhAMgYIAhBFGDsyCAgDEAAYDRge0gEJMTY4NDJqMGo0qAIAsAIB&sourceid=chro  pattikkaa pattanam 1972 tms lre

நாளை முதல் குடிக்க மாட்டேன் [நீதி -19 ] கண்ணதாசன் எம் எஸ் வி  டி எம் எஸ்

குடிகாரன் பாடல், எனவே சொல் இல்லாமலே ரா ரா ரா ரா லா லா ஓஒ என்றே துவக்குகிறார் இசை அமைப்பாளர் எம் எஸ் வி.

போதையில் பேதலித்தவனாக நடிகர் திலகம் கழுதையிடம் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து பாடுகிறார். பாடல் நெடுகிலும் போதையின் மெல்லிய ஆட்டம் தென்படும் இசை.

 ஆ எ ஆ ஆ என்று பாடிக்கொண்டே காடு \மேடெல்லாம் திரியும் மனிதன். பாடலின் கடைசி சரணம் 'கடவுள் என்வாழ்வில் " துவங்கும் முன் ஆஅ டடட் டடா என்று கவலை மறந்து பாட எவ்வளவு கற்பனை?

.கவிஞர் இறைவனை ஒரு பிடி பிடிக்கிறார் "ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்" எவ்வளவு ஆழமான வாதம்.. மொத்தத்தில் அவ்வளவு சொற்களும் ஒலிகளும், உணர்ச்சியின் பிம்பங்கள் எனில் சத்தியம். கேட்டு மகிழ இணைப்பு .

https://www.google.com/search?q=naalai+mudhal+kudikka+matten+video+song&newwindow=1&sca_esv=a5db118e05c2ad26&sxsrf=ADLYWII9F_KwewwD5zb7KPsE6xn0xueE3Q%3A1728213253315&ei=BXECZ-n5EsvX4-EPvJKAgAU&oq=NALA

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு [சவாலே சமாளி -19 ] கண்ணதாசன் எம் எஸ் வி சுசீலா

குருவியின் குதூகலம் பாடலின் துவக்கத்திலேயே சம் சம் சம் ல் ல் லா என்று கிளம்ப க்ராமத்துபசுமையை கேமரா அப்படியே விழுங்கி வைத்திருக்கிறது [ஒளிப்பதிவு -வின்சென்ட்- வெங்கட் ] பாடலின் அடிநாதம் சுதந்திரமாந சிறகடித்து பறக்கும் குருவி மற்றும் நீரோடையின் இயல்பான ஓட்டம். என்று கேட்டாலும் இனிமை குன்றாத மார்க்கண்டேய வகைப்பாடல். மீண்டும் ஒலிகளால் விளைந்த உவகை பரிமளிக்கும் பாடல். இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=cxhittukkuruvikkenna+kattuppaadu+video+song+download&newwindow=1&sca_esv=0d873c87ae80d178&sxsrf=ADLYWILS5L5iPX_9JIMNUXkU7vVQkbaC9g%3A1728354582584&ei=FpkEZ6GzI9OSseMPpOy0iAk&oq=cxhittukkuruvikkenna+kattuppaadu+video+song+&gs_lp savale samaali 1971 a Vincent a venkat

பழைய பாடல்கள் ஏன் இனிமை நிறைந்தவை என ஓரளவுக்கேனும் புரிந்திருக்குமே.. இன்னும் எவ்வளவோ உண்டு தொடர்வோம்

அன்பன் ராமன்

4 comments:

  1. 1.இந்த
    ட ட ட டா டா
    லல லல லா லா
    ஆஹா ஆஆஆஹாஹா
    எல்லாம் MSV இன் தனித் தன்மை போலும்.

    2 அந்த கால
    "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்?
    டடடா டடடா டடா டடா" வும் உங்கள் வரிசையில் சேருமா?

    ReplyDelete
  2. IRRESPECTIVE OF COMPOSER , SUCH NON-LYRICAL FRAMES CERTAINLY MOLLIFY THE GRANDEUR OF SONG[S] THROUGH LISTENING PLEASURE

    ReplyDelete
  3. தகவல் பகிர்ந்தமைக்கு ஆசிரியருக்கு நன்றி 🙏.

    ReplyDelete
  4. da da lala chum chumm போன்ற வார்த்தைகள் ஊட்டிய உன்னதம் அருமை

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-19

       TEACHER BEYOND YOUR IMAGE-19 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-19 இன்னும் சில அணுகுமுறைகள் / உத்திகள் BLACK BOARD   AND ...