SALEM SUNDARI- 55
சேலம் சுந்தரி-
-55
மறுநாள் காலை 5.00 மணி சுமார் விசாலாட்சி / உறவினர் பெரியவருடன் ஒரு ஆட்டோ வில் , இன்னொரு ஆட்டோவில் முக்கியமான ட்ரெஸ் , பாய் , சில முக்கிய பொருட்களுடன் சுந்தரி. பின்னாலேயே மாடசாமியும் , அவரது அக்காவும் பைக்கில் கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தனர் . அடுத்த 7 நிமிடங்களில் PK -உமா, அம்ஜம் ராமசாமி , க ரெ ஒரு பெரிய வேனில் வந்தனர் . சுப்பிரமணியன் தங்கை+கணவர் சென்னையில் இருந்து பஸ் ஸில் வந்தனர்..
குக் நல்ல காபி வழங்கினான் PK -உமா அசந்துபோனார்கள் காபியில். டே சுப்பு நல்ல குக் கிடைச்சிருக்கார் குட் என்றார் . சுப்பு "எனக்கு என்ன சார் தெரியும் இங்க உள்ளவங்க ஏற்பாடு" என்றான். ராமசாமி விளக்கினார் அவன் சிறு வயது முதல் பழக்கம் திறமையான சமையல் காரன் கவலை வேண்டாம் என்றார்.
6.00 மணிக்கு பெரியசாமி சுபத்திரா மேடம் இருவரும் வந்தனர். அப்போது முதல் பெரியசாமி முறைப்படி வரிசையாக நாதஸ்வரத்தில் பொருத்தமான பாடல்களை வாசித்தான். அனைவரும் பெரியசாமியின் திறமை கண்டு பாராட்டினர். PK அருகிலேயே ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு கண் மூடி லயித்துப்போனார். முடிவில் பெரியசாமிக்கு வாழ்த்து சொல்லி நீங்க ரொம்ப பெரிய இடத்தைப்பிடிப்பேங்க என்று வாழ்த்தினார்.
பஞ்சாக்ஷ்ரம் வாத்யார் ஹோமம், விரதம் எல்லாம் செய்வித்து மணி 7.40, முஹூர்த்தம்
9.00 மணிக்கு மேல் என்று ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்தார் அவர் PK க்கு தூரத்து உறவினர் ,
திருவானைக்காவல் கனபாடிகள்.
ஏதோ ஒரு விசேஷ ஸ்னாக் +காபி கொடுத்தான் சேஷாத்திரியின் தம்பி சுதர்சனம். ராமசாமி யின் காதில் ஓதினான் சார்
10.30கு இலை போட்டுடலாம், ஆபீஸ் போறவங்க சாப்பிட்டுவிட்டு போய்டுவாங்க அப்புறம் கல்யாணக்காரங்களுக்கு பந்தி ;
வேணும்னா
நடுவுல ஒரு காபி /டீ குடுத்துடலாம். ஈஸியா சமாளிச்சுடலாம் என்று சொல்ல கேட்ட சுந்தரி நிம்மதி அடைந்தாள். 9.30 மணி அளவில் 10 அதிகாரிகள், சுப்பு ரெத்தினம், டேவிட் , ஸ்டேஷன் சூப்பரண்டு , சுந்தரி செக்ஷன் நண்பர்கள், மாடசாமி குழுவில் 12 TTE என்று விமரிசையாக ஆனால் படாடோபம் இல்லாமல் மண விழா நடந்தது
.சுந்தரி தன் தாயாருடன் மானசீகமாக சொன்னாள் "அம்மா விசாலுவுக்கு கௌரவமான இடத்துல என்னால முடிஞ்சா அளவுக்கு .நல்ல படியா கட்டி கொடுத்திருக்கேன்; அசீர்வாதம் பண்ணுங்கம்மா என்று கண்ணை துடைத்துக்கொண்டாள். அப்போது தான் சாரதா வந்தாள். சுந்தரியை கையை பற்றறிக்கொண்டு ஆபீஸ் திறந்துட்டு வரதுக்கு லேட்டா யிடுச்சு மன்னிச்சுக்குங்க .
அவள் ஒரு நல்ல பரிசுப்பொருளை விசாலாட்சிக்கு கொடுத்தாள்.
சுந்தரி “இவங்க தான் இன்விடேஷன் டிசைன் பண்ணி குடுத்தாங்க” என்று சொல்ல, சுப்பு எங்க உமா மேடம் கிட்ட சொல்லுங்க என்று வேண்டுகோள் வைத்தான். சாரதாவை அழைத்து சென்று உமா விடம் அறிமுகம்செய்து இவங்க தான் இன்விடேஷன் தயார் பண்ணினாங்க என்றாள்
உமா மனதார பாராட்டி எக்ஸலெண்ட் என்றார். சாரதா தேங்க்ஸ் என்றாள்.
ஆபீஸ் கிளம்பறேன் என்றாள் சாரதா .
ப்ளீஸ் கொஞ்சம் இருங்க சேர்ந்து சாப்பிடுவோம் என்று சுந்தரி வேண்டுகோள் வைக்க சரி என்றாள் சாரதா. அப்போது நலுங்குப்பாடல் வாசித்து முடித்தான் பெரியசாமி. அலுவலக பெரியவர்கள் பயனுள்ள பொருட்களை அன்பளிப்பு செய்தனர். கேப்ரியல், மாடசாமி ,
ராமசாமி டேவிட் 10,000/- ரூ பணமாக வழங்கினர். PK +குண்டூர் அலுவலர்கள் 10,000/- வழங்கினர். சொன்னபடியே ஆபீஸ் காரர்களுக்கு விரைவாக சாப்பாடு பரிமாறினார் சுதர்சனம்.. அனைவரும் மகிழ்ந்து சமையலை பாராட்டினர். ராமசாமி நோட்டம் விட்டார் புளியோதரையும் அக்கார அடிசில் ம் இலையில் இருக்கிறதா என்று. கண்டிப்பாக இருந்தது.
கேப்ரியல் ராமசாமியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்
“மிஸ்டர் ராம்சாமி எனிக்கு ஒரூ ஸ்மால் பார்சல் புலி ஓதரே +
பொங்கல் டைப் ஸ்வீட் [ராமசாமிக்கு புரிந்தது புளியோதரை, அக்கர அடிசில்] கெடிக்குமா? , ஊட்டுக்காரிக்கு குட் தூ தின்னுபார் சொல்ணும்
Can you help?
ஷ்யூர் என்றார் ராசா .
சேஷாத்திரியிடம் சொன்னார் ரா சா,
அவன் பெரியமண்டபத்தில் இருந்து, 2 பிளாஸ்டிக் டப்பாக்களில் நிறைய அடைத்து கொண்டுவந்து கொடுத்தான். [ஏண்டா அங்கேந்து தூக்கிண்டு வந்துட்டயா? என்றார் ரா சா] அங்கேந்து இங்கேந்து எல்லாம் ஒன்னு தான் ரெண்டுமே ஒரே இடத்துல மொத்தமா ஒரேசமயத்தில் நானே கிளறி னது தான்; இப்ப திருப்தியா ?
பார்சல் கேக்கறா பாருங்கோ என்று வெற்றிலை பல் தெரிய,
வெற்றி
[லை] ப்புன்னகை செய்தான் கேப்டன் குக்.
கேப்ரியல் “ரொம்போரொம்போ தேங்க்ஸ்” என்று பையில் பதுக்கிக்கொண்டு நேரே
காலனியில் தன் வீட்டிற்கு ஸ்கூட்டரில் பறந்தார். .
இதே பாராட்டு பஞ்சாபகேசன் தம்பதியினர் சுந்தரிக்கு தெரிவிக்க ,
அவள், எனக்கு எதுவும் தெரியாது சமையல் ஏற்பாடு எல்லாம் ராமசாமி சார் தான் செஞ்சிருக்கார் அவருக்கு தான் நன்றியும் பாராட்டும் என்றாள் சுந்தரி.
இந்த சந்தடியில் ஒரு ஐயங்கார் [குசும்பு/சேஷ்டை/ திரிசமன்] அரங்கேறியது.
தொடரும்
அன்பன் ராமன் .
ஓய் ராமசாமி, இங்க வாரும். முன்னேற்பாடு எல்லாம் பிரமாதமா பண்ணி பெரிய பரோபகாரம் பண்ணிருக்கேள். பேஷ். ஆனா என்ன மாதிரி ஆசாமிகளுக்கு முகூர்த்த வெத்தலபாக்கு குடுக்காமல் சாத்துக்குடி போட்டு குடுத்துத்திருக்கேளே. எனக்கு பரவராயில்ல. ஆனா உமக்கு சரின்னு பட்டுதுன்னா சரி. நான் கிளம்பறேன் என்றார்.
ReplyDelete