TEACHER BEYOND YOUR IMAGE-`17
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-17
PHONETICAL
CLARITY / ACCURACY OF PRONUNCIATION
அன்பர்களே
ஆசிரியப்பணியில்- குறிப்பாக கல்லூரியில்PG /UG முக்கிய பாடத்திட்டங்கள் [மேஜர் /துணைப்பகுதி [ancillary] /பல்கலையில் உயர்மட்ட M.Phil
போன்ற நிலையில் போதிக்க மிகுந்த கவனமும் ஆழ்ந்த புரிதலும், எப்போதும் தயார்நிலை என்னும் PREPAREDNESS கொண்டும் இயுங்க வேண்டும் அவ்வாறு இயங்கும் ஆசிரியர்க்கு / இயங்குவோருக்கு இன்னல்கள் தோன்றுவதில்லை. ஏனையோர் கண்டிப்பாக இன்னலும் அவமானமும் சுமப்பது என்பது கண்கூடு. அத்தகையோர் எதுவுமே நடக்காதது போல் ஹிஹீஹி என்று புறத்தோற்றத்தில் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளூர பொங்குவதென்னவோ அன்றாட நிகழ்வு தான். அத்தகையோர் முயன்று வெற்றி ஈட்டுவதை விட அவலமும் அவமானமும் எனது பிறப்புரிமை அதை நான் கைவிடுதல் கூடாது என வேள்விபோல் சற்றும் பிசகாது இவர்களா ஆசிரியர்கள்? என்னும் அளவிற்கு இயங்குவதை பெருமளவில் காணலாம்.
சண்டமாருதமென முழங்கிய பேராசிரியர்கள் இருந்த மகோன்னத துறைகளில் , தற்போது பூனைகள் போல் முனகிக்கொண்டிருக்கும் குரல்களை கேட்கிறோம். இவ்விரண்டு துருவங்களுக்கும் ஒரே அடிநாதம் =ஆசை தான். இடி முழக்கங்கள் வைத்த ஆசை போதிப்பதின் நுணுக்கங்களை முறையாக பின்பற்றி கோலோச்சுவது, 2 பூனை முனகல் நபர்களின் ஆசை =பொருள் [ஆம் மாதம் ஒன்றிற்கு . ஒன்றரை முதல் இரண்டு லட்சங்கள் ஊதியம்]; எனவே யார் என்ன சொன்னால் என்ன --ஊதியம் கிடைத்தால் போதும், பூனை என்ன, பல்லிகளின் முனகல்களும் வகுப்பறைகளில் இருப்பின் ஆச்சரியம் கொள்வதற்கில்லை .
சரி, பூனைகளும், பல்லிகளும் வருந்தாதபோது பிறர் வருந்தி ஆவதென்ன?
நமது கவனம் முற்றான ஆசிரிய ஆளுமையை எட்டுவது/ ஈட்டுவது எவ்வாறு என்பது குறித்தே
PHONETICAL
CLARITY / ACCURACY OF PRONUNCIATION
சொல் தெளிவும் உச்சரிப்பில் சுத்தமும்
ஒரு உயர்ந்த ஆசிரியர், சொல்லையும் உச்சரிப்பையும் முறையாக கையாளவேண்டும். கல்லூரி மற்றும் பல்கலை நிலையில் பயில்வோர் பலர் நல்ல மொழி அறிவு உடையோராக இருக்கக்கூடும்.அவர்கள் உயரிய வகுப்புகளை கையாள வரும் ஆசிரியர்கள் தேர்ந்த மொழி அறிவு, சொல்லாற்றல், உச்சரிப்பு போன்ற அடிப்படைத்தகுதிகளில் வளமானவர்களாக இருப்பதை எதிர்பார்க்கின்றனர் /விரும்புகின்றனர். மேலும் உயர்கல்வியில், பெரும் அறிவை தெளிவாக விளக்க மொழியாற்றல் ஒரு வலிமையான ஆயுதம் என்றே கருதுகின்றனர்.
எனவே, எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாதவர்களை, பயில்வோர் பலர் குறைவாகவே மதிப்பிடுகின்றனர்.
அவ்வகை மொழிசார் திறன்களில் ஏற்றம் கொண்டோர், முழங்குவதில் வியப்பில்லை. ஏனெனில் என்ன சொல்ல நினைக்கிறோம் என்பதில் தெளிவும் அதோடு மனதில் எழும் கருத்துகள் தரும் தன்னம்பிக்கை யுமே சண்டமாருத ஒலியாக பரிணமிக்கிறது.
it is an expression of total confidence on
subject and the power to deliver.
ஒருவர் கருத்துகளை செம்மையாக புரிந்து வைத்திருந்தால் எவருக்கும் அடங்கவோ முடங்கவோ தேவை இல்லை.. எனவே மடை திறந்த வெள்ளமென கருத்துகள் பீறிட்டு வெளிப்பட , அவ்வாசிரியரின் ஆளுமை பன்மடங்கு கவனம் பெறுகிறது..
பயில்வோர் அவ்வகை ஆசிரியரின் கருத்துத்தெளிவை மிகவும் போற்றி வணங்குவர். இது-- பயில்வோரை தன் பால் ஈர்த்து கட்டிப்போடும் வலிமையான உத்தி. அவ்வகை மேம்பட்ட ஆளுமை வயப்பட, ஆதாரமாய் இருப்பது ஆழ்ந்த புரிதல். அதற்கு பல சிறப்பான நூல்களை பயிலவும் அவ்வப்போது மேம்படுத்தவும் [updating] வேண்டும். தகவல் மேம்படுத்துதல் இன்றி, ஆசிரியப்பணியில் இன்றியமையா நிலையை எட்டுதல் வெறும் கனவே ஆகும்.
குரல் தரும் வலிமையை முற்றாக ஆசிரியரும் பயில்வோரும் பெற்றிட முக்கிய சொற்களை தெளிவாக கரும்பலகையில் எழுதுதல் எளிய ஆனால் திறமையான அணுகுமுறை .
எனவே தான் ஆசிரியப்பணியில் வெற்றி நோக்கி பயணிக்க விழைவோர் தவறாமல் முக்கிய சொற்களை தெளிவாக பிழையின்றி எழுதினால், கற்பனை spelling தவிர்க்கப்படும் . மேலும் ஆசிரியரின் நம்பகத்தன்மை [credibility] வலுப்பெறும்.
செயல் அணுகுமுறை
பயில்வோரைப்பார்த்து பேசுவது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.. முகம் பார்த்துப்பேசுதல் தன்னம்பிக்கை மற்றும் செயல் திறனில் கொண்ட இயல்பான நம்பிக்கை இவற்றின் வெளிப்பாடு.
ஆசிரியர், பயில்வோரின் முகம் பார்த்து ப்பேச , பயில்வோர் வேறு புறம் பார்ப்பதை விட்டுவிட்டு ஆசிரியரை ஊன்றிப்பார்க்கும் நிலைக்கு உந்தப்படுவர். இதுவே கவனச்சிதறலை அநேகமாய் அகற்றிவிடும்.. இது கிட்டத்தட்ட one
-to -one விவாதம் போல் அமைய, பயிற்றுவிப்போர்-பயில்வோர் இணக்கம் அதிகமாகும். இதுபோன்ற மனத்தளவு பிணைப்பு இல்லாமல் .வகுப்புகளில் அமர்ந்திருப்பவர் , மனம் வேறெங்கோ சஞ்சரிக்க, கவனமின்றி வகுப்பில் அமர்ந்துள்ளனர் என்பதே உண்மை.
அவர்களால் எந்த கருத்தையும் உள்வாங்க இயலாது. . எனவே மாணவர்கள் வகுப்பில் ஆசிரியரை பின் தொடர வேண்டுமெனில் , முதலில் ஆசிரியர்கள் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈரத்தல் வேண்டும். இதுவரை சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் மாணவரின் கவனத்தை ஈர்த்து இருத்திக்கொள்ளும் உத்திகளே. கவன ஈர்ப்பும் அதை தக்க வைப்பதும் மொழி மற்றும் குரல் வலிமை அடிப்படையில் விளக்கப்படும் பாடக்கருத்துகளால் உருவாக்கப்பட்டு தொடர்ந்தும் தொடர்பு விலகாமல் ஆசிரியர்- பயில்வோரை பிணைப்பில் வைத்திருக்கும் .
அது மட்டுமல்ல வண்டியில் பூட்டப்படும் மாடுகள் தாங்களாகவே வண்டியின் நுகத்தடியின் கீழ் மனமுவந்து நிற்பது போல் பயில்வோர் நேரடியாக ஆசிரியரை நெருக்கமாக பின் தொடரும் பண்பினை பின்பற்றுவர். அதே மாணவர்கள் எல்லா ஆசிரியருக்கும் இது போன்ற முக்கியத்துவம் தருவதில்லை, ஏனெனில் பயிற்றுவிப்போர் காட்டும் ஈடுபாடு அடிப்படையிலேயே அமைவதே ஆசிரியர்-மாணவ மாணவியர் மன நெருக்கம். அது ஒவ்வொருநாளும் அரங்கேறும். இதுவே ஆசிரிய வெற்றியின் அடிப்படை ரகசியம் .
பிற தகவல்களை பின்னர் பார்ப்போம் .
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment