TEACHER BEYOND YOUR IMAGE-`18
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-18
DRAWING ATTENTION / SUSTAINING IT
கவன ஈர்ப்பும் அதைதக்க வைத்தலும்
கவன ஈர்ப்புக்கு எண்ணற்ற உத்திகள் உள . அடிப்படை உத்தி ஒவ்வொரு மாணவ /மாணவியும் தன்னை ஆசிரியர் கண்காணிக்கிறார் என உணரவைத்தல். அதற்கு , பாடம் துவங்குமுன் ஒரு சுற்று அனைவரையும் பார்த்தபடியே பேச்சை துவங்குதல்.. இது அருமருந்தாக வேலை செய்யும். இதற்கு அடிபணியாதோர் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.
ஆசிரியரில் ஒரு சிலர் 'LISTEN HERE ' என்று அழைப்பு விடுப்பர். அது 50% அளவுக்கே பலன் தரும். எனவே, சிலரையேனும் கடிந்துகொள்ள நேரிடும். அப்படி துவக்கத்திலேயே மன வலியுடன் பேச நேர்ந்தால் ஆசிரியரின் கவனம் சிதறும் .
வகுப்பை கவனிக்காமல் இருந்தால், ஆசிரியர் 'மூட் அவுட் ' ஆவார் எனில் பயில்வோர் அவ்வப்போது மூட் அவுட் வைத்தியத்தைக்கையில் எடுத்து ஆசிரியரை வெறுப்பேற்றுவர்.
பொதுவாகவே, ஏதாவது செய்து வகுப்பு சரிவர நடக்க வில்லை என்றால் அதுவே ஒரு பொழுதுபோக்கு என ஆகிவிடும்.
ஆசிரியரின் கூரிய கண் பார்வை எனும் கண் காணிப்பு வேறெந்த முயற்சியையும் விட விரைந்தும் முழுமையாகவும் பலன் தரும்.
இனி அடுத்த கட்டத்தின் துவக்கமாக ஆசிரியர் குரல் மெல்ல துவங்கி, வேகமும் ஒலி யும் அதிகரிக்க பயில்வோர் அடங்கி ஒடுங்கி அமர்வர்; ஆசிரியர் கண் காணிப்பவர் என நிறுவி விட்டதால் வேறு வகை இடையூறுகள் எழ வாய்ப்பில்லை.. இதன் அடுத்த ‘படி’ தான் பாடத்தில் மட்டும் கவனமும் கருத்தும் வைக்கும் போது இது ஒரு மிகுந்த அக்கறைக்குரிய SERIOUS
MATTER என்பதும் அந்த ஆசிரியரின் செயல் வடிவம் [FUNCTIONAL MODEL ] என்பதும் முற்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்படித்தான், இடையூறின்றி செயல் பட நமது வியூகம் அமைய வேண்டும். ஒன்றை நன்றாக நினைவில் நிறுத்துதல் மிக மிக அவசியம்.. இது வரை விளக்கப்பட்டுள்ள எந்த அணுகுமுறையையும் திடீரென்று நடை முறைப்படுத்த இயலாது. இவை எல்லாமே, ஒவ்வொரு புது வகுப்பிலும் ஆசிரியர் ஆரம்பத்திலேயே
நடை முறைப்படுத்திவிட்டால், ஆசிரியரிடம் உரசிப்பார்க்க எவருக்கும் எண்ணமோ தைரியமோ தோன்றாது.
இந்த ஒரு செயல் தான் வகுப்பறைக்குள் உங்கள் பிம்பம் கட்டமைக்கப்பட உதவும். .
ஆரம்பத்தில் மிகவும் தளர்ச்சியாக இயங்கி விட்டு பின்னர் கட்டுப்பாடுகள் விதிக்க முயன்றால் நீங்கள் கேலிப்பொருள் ஆவது நிச்சயம். எனவே கவனம் தேவை.
இவ்வாறு கவன ஈர்ப்பு செய்துவிட்டால் போதுமா? போதாது,
தொடர்ந்து அவர்கள் நம்மைப்பின் தொடர சில மென்மையான செயல் பாடுகள் அவசியம்.. அவைகள் வருமாறு: 1 பழைய தகவலை இணைக்கும் அடுத்த தகவலை நன்கு விளக்கி, பழையது புதியது என்றில்லாமல் எல்லாம் சங்கிலித்தொடர் போன்றவை என அழகாகக்கோர்வையை நிறுவுவது, ஆசிரியனின் ஆளுமைக்கும் நினைவாற்றல்/ போதனா வலிமைபோன்ற செயல் தெளிவுகளுக்கும் சான்றாகும் .
இவை அன்றாட செயல்முறைகள் என்பதாக அவ்வப்போது செய்துவர இவர் சொல்வதை தவறவிடக்கூடாது என்று பின்பற்றுவர். இந்தவகையில் கவனஈர்ப்பை தன்பால் கொண்டுவரும் ஆசிரியர்களின் வகுப்புகளில் மாணவ மாணவியர் அவர்களாகவே ஈடுபாடு கொள்வர். எனவே seriouness எனப்படும் மனம் சார்ந்த நிலைப்பாட்டினை ஆரம்ப வகுப்புகளிலேயே நிறுவிவிட்டால் செயல் படுதலுக்கு இடையூறுகள் .தோன்றுவதில்லை. எனினும் பயில்வோரைப்பார்த்துக்கொண்டே பேசுவது என்று ஆசிரியர் தன்னை பழக்கிக்கொண்டால் புத்தகத்தையோ நோட்டையோ பார்த்து படிக்காமல் அனைத்தையும் மனதிலிருந்து பேசுகிறார் -எனவே பெரும் மரியாதைக்குரியவர் என்பதும் , இவரிடம் பயிலாது போனால் வேறெங்கு போய் பயில்வது என்ற ஒரு கவலை மாணவர்களை பிடிக்கும்/பீடிக்கும்.
கவனயீர்ப்பு செய்த ஆசிரியன் மடை திறந்தார் போல் விரைந்து முழங்க, வகுப்பறைகள் பெரும் தெய்வீக சன்னிதானங்களாக பரிமாணம் பெரும். இந்த சூழலில், கரும்பலகையை திறமையாக பயன்படுத்த ஆசிரியர் அறிந்துவைத்திருத்தல் நலம். அது வேறொரு திறமையின் அங்கீகார அடையாளம் எனில் மிகை அன்று
அது எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும்?
கரும் பலகையில் எழுத சில நுணுக்கங்கள் தேவை. அனைத்தையும் கணித ஆசிரியர் போல எழுதவேண்டியதில்லை.
ஆனால் கலைச்சொற்கள் [technical
terms] முறையாக கிறுக்காமல் தெளிவாக அவற்றிற்கென்று உலகளாவிய நடைமுறைப்படி எழுத வேண்டும் .. அதென்ன உலகளாவிய என்றால், ஒவ்வொரு கலையியல் நுணுக்கமும் பயிறுவிக்கப்படவேண்டும்.
அதாவது வேதியல் முறையில் கெமிக்கல் பார்முலா முறையாக பெரிய சிறிய எழுத்து உரிய இடங்களில் , ஈரப்பதம் [water of
hydration ] உள்ளிட்ட தகவல்களுடன் எழுத, இந்த நடைமுறை மாணவர்கள் தேர்விலும் கடைப்பிடிக்க, பாடத்திட்டத்தின் செயல் மரபுகள் தெரிந்து கொள்வர்; அதே போல பயாலஜி பாடங்களில் , genus , species , author என்பன வரிசை மற்றும் பெரிய சிறிய எழுத்துகள் முறையாக எழுதிவந்தால் , மாணவர்கள் அவற்றையும் எளிதில் பயில்வர் .
எந்த சொல்லையும் தெளிவாக எழுதி பயிற்றுவிக்காத ஆசிரியர்கள், பயிலுதலை ஒரு துயர நிகழ்வாக மாற்றுகின்றனர். அவர்களின் மாணவர்களால் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க மிகுந்த சிராமும் இடையூறையும் சந்திக்க நேரும், உயர் கல்வி வாய்ப்புகள் மழுங்கி, சோர்வை சந்திப்பர். பயிலும் வயதில் எவ்வளவு கடின அணுகு முறைகளையும் ஏற்கும் மனவலிமை பின்னாளில் குறைந்துவிட அவர்களால் எவ்விடத்திலும் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள இயலாது. இவை மறைமுகமாக உயர்கல்வியில் மாணவர் அடைந்த வளர்ச்சியின் குறியீடுகள் ; உனக்கு யார் இவற்றை சொல்லிக்கொடுத்தார் என்ற கேள்வியை மாணவர்கள் எதிர் கொள்வர். எந்த நிலையிலும் பயிற்சியும் பயிற்றுவித்தோரும் விமரிசக்கப்படக்கூடும். அதற்காக வேனும் முற்றான முறையான பயிற்சியை ஆசிரியர் வழங்கினால் . என்றென்றும் பயின்றோர் நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டி மகிழ்வர்,
உயர் வகுப்புகளில்கூட ரெபெரென்ஸ் [reference] மேற்கோள் காட்டி கற்பித்த மரபு கிட்டத்தட்ட மறைந்து விட்டது. இது மிகவும் தவறு ஏனெனில் உயர் கல்வி/ ஆய்வுகள் போன்ற செயல்களுக்கு reference இல்லாத எந்த தகவலும் ஏற்கப்படுவதில்லை. எனவே நல்ல பயிற்சிகள் வழங்காமல் நான் நல்ல ஆசிரியர் என்றோ அனுபவஸ்தர் என்றோ பெருமை கொள்வதில் எந்த பெருமையும் இல்லை.. பிற அணுகுமுறைகளை / நடைமுறைகளை பின்னர் பேசுவோம்.
நன்றி
அன்பன்
ராமன் .
No comments:
Post a Comment