Monday, October 14, 2024

OLD MOVIE SONGS -6

 

OLD MOVIE SONGS -6 

பழைய திரைப்படப் பாடல்கள்-6

பழைய பாடல்களில் கவி சொல்லாத அலங்காரங்கள்  -2

கவிஞனின் கற்பனைக்கு மேலும் வலு சேர்க்க, இசை அமைப்பாளர் செய்யும் ஒலி அலங்காரங்கள் தான் கவி சொல்லாதவை என்று பேசப்படுவது. அவ்வகையில், எம் எஸ் வி மேற்கொண்ட உத்திகள் பல. அவற்றில் ஒன்று தான் "ஹோய்' இந்த  "ஹோய்' என்ற ஒலிவடிவம் பல பாடல்களில் பல வடிவங்களில் இடம் பெற்று ஒரு வித வசீகரத்தை தோற்றுவித்ததை இன்றைய பதிவில் காண்போம்.

இது போன்ற அலங்காரங்களை டூயட் வகைபாடல்களில் வெகுவாக நுழைத்துவிட்டு பாடலின் பொதுவான உருவத்தை மேம்படுத்தலாம் என்பதை உணர்த்தும் பதிவு இது . 

சிலபாடல்களில் வெறும் '' மற்றும் அதன் இதர நீட்சிகள், நெளிவுகள் பாடப்பெற்று பாடலுக்கு ஒரு மெருகேற்றிய நிகழ்வுகளும் உண்டு அப்படி ஒன் று 

துள்ளி ஓடும் கால்கள் எங்கே [பணக்கார குடும்பம்] கண்ணதாசன் , வி, ரா, டி எம் எஸ் பி சுசீலா

இதை ஒரு கழிவிரக்க ப்படல் எனலாம். ஆம் ஐயோ இப்படி ஓடி ஆடித்திரிந்தவள் அமைதியாகி விட்டாளே என சொல்வது போல் அமைந்த நடை எனவே பாவம் என்பது போல் இந்த அலங்காரம் அமைந்துள்ள அழகினை ரசியுங்கள் பாடலின் இறுதியில் ஹஹ் ஹாஹா ஹாஹா என்ற மாறுபட்ட அலங்காரம் வருகிறது.- ரசியுங்கள்

https://www.google.com/search?q=pesuvadhu+kiliyai+video+song+download&newwindow=1&sca_esv=3779ba0312543554&sxsrf=ADLYWIJf7rgkb_Ck0SlcXMP4MpbLDVJa4w%3A1728888826112&ei=-r8MZ_K8BomE4-EP1eGAgAo&ved=0ahUKEwjyodjipI2JAxUJwjgG panakkara kudumbam kd vr tms ps oo h ooh ,ends hahahaaha haahahaah kazhivirakkappadal

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை [பணக்கார குடும்பம்] கண்ணதாசன் , வி ரா, பி சுசீலா டி எம் எஸ்

மேலோட்டமாக கடந்து சென்றால் பாடலின் சிறப்பு புரியாது . 

ஹோ ஹோ ஹோய் என்றே துவங்கி பாடல் நெடுகிலும் வெவேறு ப்ரமாணங்களிலும் இடங்களிலும் வெகு நேர்த்தியாக ஒலிக்கும் அலங்காரம்; இதெல்லாம் தேர்ந்த கற்பனையின் வடிவங்கள். ஒரு காலத்தில் பாடல்கள் எவ்வளவு உழைப்பின் வடிவங்கள் என்பது விளங்கும் . இணைப்பு இதோ இதை ஆழ்ந்து கவனியுங்கள்

https://www.google.com/search?q=idhuvarai+neengal+parththa+paarevai+video+song+download&newwindow=1&sca_esv=33073fab614d76a8&sxsrf=ADLYWIJ-9din9mfQ_cT0NSmWdSpDigSymQ%3A1728888307726&ei=870MZ43zK_OW4-EPjou0uA4&oq=idhuvara idhuvarai neengal panakkaara kudumbam  v r tms ps

 முன்னம் பார்த்த , , ஹோ , ஹோய் போன்ற சிறு உத்திகளை மாலை தொடுத்தாற்போல் பிணைந்துள்ள நளினம் இப்பாடல் .

ரோஜா மலரே [வீரத்திருமகன் ] கண்ணதாசன் வி ரா, பிபி சீனிவாஸ் , பி சுசீலா

ஓஹோ ஹோ ஹோ வில் தொடங்கி காற்றில் மிதந்த மேகமென தவழ்ந்த பாடல் 60 களில் பலரையும் கவர்ந்த பாடல், இதிலும் ஹோய், மற்றும் அவ்வப்போது ஹோஹோஹோ ஹோஹோஹோஹோ என்று கோரஸ் , ஹோய், மற்றும் இறுதியும் ஹா ஹா ஹா ஹா என்று அடங்கும் அற்புதம் தெவிட்டாத ஓர் பாடல் , இணைப்பு இதோ

https://www.google.com/search?q=rojamalare+rajakumari+video+song+download&newwindow=1&sca_esv=3779ba0312543554&sxsrf=ADLYWIJou9oacRm38mVx89qO7zxFWzDkPw%3A1728888601671&ei=Gb8MZ_nPKJOG4-EPiN veerathirumagan kd vr pbs ps

மற்றுமோர் அதகளம் இந்தப்பாடல் .

பேசுவது கிளியா [பணத்தோட்டம்] கண்ணதாசன் , வி ரா, டி எம் எஸ் பி எஸ்

இந்தப்பாடல் ஹோய் என்ற ஒலி க்கு ஒரு லைப்ரரியோ என்பது போல் உள்ளது

போங்கோவின் ஒலிக்கு ஏற்ப நாயகியின் தலையில்,டட்டட்  டட் என்று தட்டி பாடல் துவங்கி பயணிக்கிறது. அதன் பின்னர் வரிகள் முடியும் நிலையில் ஹோய் , ஹோ ஹோ ஹோய் என்பதாக பல வேறு அமைப்புகளில் பாடலில் எண்ணற்ற அலங்காரங்கள் ; என்று கேட்டாலும் இளமைத்துள்ளல் பாடலின் தனிச்சிறப்பு. வெகு நேர்த்தியான நடிப்பும் சேர்ந்துகொள்ள பாடல் குதூகல மயம் . கேட்டு மகிழ இணைப்பு .  .

https://www.google.com/search?q=pesuvadhu+kiliyai+video+song+download&newwindow=1&sca_esv=3779ba0312543554&sxsrf=ADLYWIJf7rgkb_Ck0SlcXMP4MpbLDVJa4w%3A1728888826112&ei=-r8MZ_K8BomE4-EP1eGAgAo&ved=0ahUKEwjyodjipI2JAxUJwjgG pesuvadhu kiliya panathottam , kd vr tms ps hoil library ends huhhahahguhhahha

ஹாய் /ஹோய் மட்டும் தானா ? ஹோயன்ன  ஹோயன்ன ஹோய்  ஹோய்னா  என்றொரு வகை அறிமுகம் செய்தார் எம் எஸ் வி, . இந்தப்பாடல் ஹோய் என்ற ஒலி க்கு ஒரு லைப்ரரியோ என்பது போல் உள்ளது

நான்  மாந்தோப்பில் [எங்க வீட்டுப்பிள்ளை] 1965 , வாலி, வி ரா, டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி

பட்டி தொட்டி ங்கும் பட்டையைக்கிளப்பிய பாடல் அதிலும் மா ந் ..... தோப்பில் என்று கிளம்பி பிரமிப்பூட்டிய பாடல். இதிலும் ஹோய் உண்டு ஆன் பெண் இருவரும் சரியான இடங்களில் ஹோய் என்று முடித்து மீண்டும் பாடல் தொடர மென் மேலும் ஆர்வம் அதிகரிக்க இறுதி பகுதியில் ஹோயன்ன ஹோயன்ன ஹோய் ஹொய் ய்னா   நிறைவுற கேட்க வெகு மகிழ்ச்சி தரும் பாடல்.

https://www.google.com/search?q=pesuvadhu+kiliyai+video+song+download&newwindow=1&sca_esv=3779ba0312543554&sxsrf=ADLYWIJf7rgkb_Ck0SlcXMP4MpbLDVJa4w%3A1728888826112&ei=-r8MZ_K8BomE4-EP1eGAgAo&ved=0ahUKEwjyodjipI2JAxUJwjgG engav pillai vali vr tms lr e  ohooo oho rply hoi , hoyanahoyanna o hoyanaa

பல உத்திகள் உள.

  வரும் பதிவுகளில் காண்போம்

தொடரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. Beautiful writing on MSV'S short humming and Sound in songs which have lifted the Beauty of the song great heights. Thanks

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...