SALEM SUNDARI- 57
சேலம் சுந்தரி-
-57
இப்போது புதிய வரவாக ஒரு 40 வயது மதிக்கத்தக்க அம்மையார் மண்டபத்தினுள் நுழைய மணமகள் விசாலாட்சி நன்றி, அன்பு, பாசம் கலந்த கலவையாக கை கூப்பியபடி வாங்க மேடம் [கடை முதலாளி பத்மாவதி மேடம்] எங்க வராம இருந்துருவீங்களோ னு கவலையா இருந்தேன்.
மேடம் "இல்ல விசா ராத்திரி 1
மணி பஸ் ல கிளம்பினேன் அந்த வண்டி 3
மணிக்கு ப்ரெக்டௌன் ஆகி அவங்க கம்பெனி வண்டி 5
மணிக்கு வந்து ஒரு வழியா
8.45 கு திருச்சி வந்தேன் . அண்ணன் வீட்டுல போய் குளிச்சுட்டு நேர வந்துட்டேன் கோவிச்சுக்காத என்றார் மேடம் பத்மாவதி.
விசாலாக்ஷி, மேடத்தை அக்காவுக்கு அறிமுகம் செய்வித்து பின்னர் மேடம் அவர்களை, சாப்பிட வைத்து மகிழ்ந்தனர். மேடம் ஒரு செக் +
gift பார்சல் கொடுத்து ,
ம்ம் பிரிச்சுப் பாரு என்றார். பிரித்த விசாலு மற்றும் அனைவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர். ஒரு சுடிதார் முகப்பில் வெகுநேர்த்தியான எம்பிராய்டரி வேலை. அனைவரையும் மிரள வைத்தது.
பத்மாவதி மேடம் சொன்னார்
இந்த டிசைன் விசாலு போட்டது தான் அவளை போல ஒரு திறமைசாலி கிடைக்காது. அவளால எங்க பிசினஸ் நெறைய வளந்தது; அந்த நன்றிக்குஅவளுடைய கல்யாண த்துல எல்லாரும் பார்த்து வாழ்த்தட்டும் னு அவளுக்கு இந்த DRESS
குடுத்துருக்கேன்.
சுப்பிரமணியை பார்த்து,.
தம்பி நீங்க ரொம்ப அதிஷ்டசாலி அந்தப்பொண்ணு ஒரு ஆம்பிளைக்கு சமமானவ, நெனைச்சத சாதிப்பா, நல்ல திறமைசாலி -- வாழ்த்துக்கள் என்று ஆசி வழங்கி மகிழ்ந்தார் மேடம் பத்மாவதி
-----------சுப்பிரமணியன் தாயார் மறைந்த கணவனைதெய்வமாக நினைத்து மனதில் பேசினாள் . நீங்க இருந்து செய்ய வேண்டியதை எல்லாம், முகம் தெரியாத பெரியவர்கள் நிறைவேற்ற ,
நம்ம சுப்பிரமணிக்கு கல்யாணம் நடந்திருக்கு. அந்த மருமக அவ்வளவு கெட்டிக்காரி னு சொல்றாங்க. ஆண்டவன் புண்ணியத்துல அவங்க நல்லா இருந்தா போதும் வேறென்ன வேணும் ?
தாய் உள்ளம் சஞ்சலப்படுகிறது
தம்பதியரை சாப்பிட ஏற்பாடு செய்ய, சுப்பிரமணி கறாராக சொல்லிவிட்டான். முக்கியமான பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு தான் சாப்பாடு ,
யாரும் தப்பா நினைக்காதீங்க, என்று. முதலில் சுப்பிரமணி
PK தம்பதியினரை வணங்க முயன்றான்.
PK
சொன்னார், டேய் சுப்பு முதல்ல ரெண்டு குடும்பப்பெரியவங்களை வணங்கிட்டு, அப்புறம் பாக்கி பேர் என்றார். முதலில் தாயை இருவரும் வணங்கினர். அடுத்தது சுந்தரியை தேடினர் , அவள், நம்ப சித்தப்பாரு வந்திருக்காரு , அவரை வணங்குங்க என்றாள் .
அப்படியே செய்து பின்னர் சுந்தரி க்கு
வணங்கி ஆசி பெற்றனர். எதற்கும் தடுமாறாத விசாலி [விசாலாட்சி] அக்கா என்று கண்ணீர் உகுத்தாள், அக்காவும் சற்று கலங்கினாள். அடுத்த மரியாதை
PK தம்பதியினருக்கு சுப்பு -விசாலாட்சி இருவரும் விழுந்து வணங்கினர், பெரியவர்கள் ஆசீர்வதித்தனர்,.
சுப்பு படுத்த நிலையிலேயே இருந்தான் எழுந்திருக்கவே இல்லை.
1 நிமிடம் , 2 நிமிடம் ஊஹூம் அப்படியே இருந்தான்; சுப்பு எழுந்திருப்பா என்றார்
PK , ஊஹூம் , விசாலாட்சி, அவனை தோளை த்தட்டி எழுந்திருங்க என்றாள் ஊஹூம்.
PK
குனிந்து அவனை தோளை பிடித்து தூக்கினார். ஒரே கண்ணீர்ர் வழிய கை கூப்பி விசும்பினான். இப்படி எல்லாம் அழாதேப்பா கல்யாணம் நடந்திருக்கு சந்தோஷமா இருப்பா என்றார் PK .
சுப்பு பேசினான்
‘பூட்ஸ் கால் ல ஒருத்தர் உதைக்கும் போது நீங்க தெய்வமா வந்தீங்க இல்லைன்னா நாங்க ஒவ்வொருத்தரா பட்டினிலயே செத்துருப்போம். எந்த வக்கும் இல்லாத எனக்கு எவ்வளவு உதவி செஞ்சீங்க , என் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யவும், எல்லோரும் பசியாற சாப்பிடவும் வழி செஞ்சீங்க .
அந்த நன்றிக்கு தான் நான் வணக்கம் சொல்றேன் எனக்கு வேற ஒன்னும் செய்ய தெரியல்ல; ஆயுசுக்கும் உங்க கூடவே தொடர்ந்து வாழ அனுமதி கெடச்சா போதும் . நீங்களும் மேடமும் [உமா] தந்தையா தாயா இருக்கீங்க .அந்த பூட்ஸ் கால் தந்த வாழ்வு மறைமுகமா’னு இறைவனுக்கு நன்றி என்றான்..
PK
உள்பட அனைவரும் கட்டுண்டு நின்றனர். பின்னர் அவரவர் என்னதான் நடந்தது என்று [பூட்ஸ் கால் நிகழ்வு குறித்து ]. கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர் சுப்பு தம்பதியினர் உணவருந்தினர். விசாலாக்ஷிக்கு புரிந்தது இந்த மனுஷன் பெரிய பள்ளத்துல இருந்து மேல வந்திருக்காரு .
பழுத்த அனுபவம் இருக்கு, கவனமா இருக்கணும் இவர் கிட்ட என்று புரிந்து கொண்டாள்.
அப்போது குக் ஓர் பேப்பரில் 4
வகை புளியோதரை ரெசிப்பி விவரமாக செய்முறையுடன் கொடுத்தான். உமா தேங்க்ஸ். என்றாள். PK என்னவென்று தெரிந்ததும் சும்மா இருக்கமாட்டியே நீ என்று முறைத்தார். நல்ல புளியோதரை வேணும் னா , கெஞ்சிக்கூத்தாடி தான் ஆகணும் ,
கௌரவம் பாத்தா
"நீயும் நானுமா
?"னு பாடிண்டு இருக்க வேண்டியது தான் என்றாள் உமா
சுந்தரியோ "ஆங்காங்கே மாடசாமி, ராமசாமி போல PK உமா க்கள் இருக்கின்றனர். இல்லாவிட்டால், என் போன்றவர்கள் பிழைக்க இடமே இருக்காது ஆஞ்சநேயா" என்று மனம் உருகி வேண்டினாள்.
தொடரும்
நன்றி
அன்பன் ராமன்
அந்த நாலு ரெஸிபிய நான் தெரிஞ்சக்லாமா?
ReplyDeleteகேப்டன் குக் கிட்ட கொஞ்சம் ரெக்கமண்ட்
பண்ணுங்கோ.