TM SOUNDARARAJAN –26
டி எம் சௌந்தரராஜன்-26
பாடகர் டி எம் எஸ் அவர்களின் வாழ்வில் முக்கிய இடம் இருவருக்கு உண்டு: [ மருதகாசி/ ஜி ராமநாதன்] பின்னர் வேறு பலர் இவர் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது எல்லாம் காலப்போக்கில் நிகழ்ந்தவை.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு ஆரம்பத்தில் குரல் கொடுத்தவர் சிதம்பரம் ஜெயராமன். அதனால் சிவாஜிக்கு CSJ மீது ஒரு அன்பு உண்டு. அந்த சூழலில் பாடலாசிரியர் மருதகாசி , இசை அமைப்பு ஜாம்பவான் ஜி ராமநாதன் அவர்களிடம் பரிந்துரைத்து , டி எம் எஸ் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது என்று சொல்ல , ஜி ஆர் அவர்கள் டி எம் எஸ் குரலை நன்கு கவனித்து சரி இந்த குரல் சிவாஜிக்குப்பொருந்தும் என முடிவெடுத்து தூக்கு தூக்கி படத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்தார்.
ஆனால் சிவாஜி அவர்களோ இல்லை CSJ பாடட்டும்
என்று சொல்ல ஒரே குழப்பம் ஏனெனில் ஏற்கனவே டி எம் எஸ் குரலில் ஒரு பாடல் பதிவாயிருந்தது..
இந்த போராட்டத்தில் தர்மசங்கடம் டி எம் எஸ் அவர்களுக்கு தான் . அவர் நேரடியாக சிவாஜியிடம்
சென்று ஒரு வாய்ப்பு தாருங்கள் நன்கு பாடுவேன். 2, 3 பாடல் பாடி தருகிறேன். கேட்டுப்பாருங்கள்
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்கிறேன் என்று சொல்லி சிலபாடல்களை ப்பாடி
அவற்றை கேட்ட சிவாஜி [குரலின் கம்பீர த்தில்] மனம் மாறி பின்னர் நடந்தவை வரலாறு. வேறு
யார் சிவாஜிக்கு பாடினாலும் முற்றாக பொருந்தாது. இப்படியாக தூக்கு தூக்கி பாடல்கள் ஒரேயடியாக தூக்கியது சிவாஜி டி எம்
எஸ் ஜோடியின் வெற்றிகளை..
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
என்ற மருதகாசியின் பாடல் வெகு பிரபலம்.
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
[தூக்கு தூக்கி ] ஜி ராமநாதன், பி லீலா, ஏ பி கோமளா, டி எம் எஸ்
இப்பாடலில் பெண்கள் முதலில்
பாட தொடர்ந்தும் ஆண் பாடும் வகையில் இசை அதுவும் கோயிலில் பாடுவதாக. குரல் அமைப்பு
ராக நகர்வு, ஆண் குரல் கம்பீரம் என அமைந்ததும் சிவாஜியின் நடிப்பும் பாடலின் பெரும்
வெற்றிக்கு உதவின. கேட்டு மகிழ இணைப்பு இதோ
சுந்தரி
சௌந்தரி நிரந்தரியே |
Sundhari Soundhari Nirandhariye | தூக்கு தூக்கி திரைப்பட பாடல்
| Sivaji (youtube.com)MARUTHA KASI G R , PL APK TMS
குரங்கிலிருந்து
பிறந்தவன் மனிதன் [தூக்கு தூக்கி ] உடுமலை
நாராயண கவி, ஜி ராமநாதன் ,குரல்கள் பி லீலா ஏ பி கோமளா , டி எம் எஸ், வி என் சுந்தரம்
இது நகைச்சுவை ததும்பும் சொல்லாட்சியும்
இசை வீச்சும் மற்றும் ஆலாபனை சிறப்புகளும் நிறைந்த பாடல். பெண்கள் பாட அதை ஆண் அதே அமைப்பில் பாட
வேண்டும்.. வெகு சிறப்பாகப்பாடியுள்ளார் டி எம் எஸ் அவர்கள். சிவாஜியின் நாட்டிய அபிநயம்
பாடலின் வெற்றிக்கு உதவியது. ஜி ராமநாதன் எந்த ரகத்துக்கும் ராகத்துக்கும்
ஈடு கொடுக்கும் ஜாம்பவான் எனில் உண்மை. பாடலின் அமைப்பை கூர்ந்து
கவனியுங்கள் எண்ணற்ற நளினங்கள் தென்படும். இணைப்பு
இதோ ..
Kuranginilirundhu
Pirandhavan Manidhan HD Song (youtube.com) kurangilirundhu thookku
thookki1954 UDUMALAI NARAYANA KAVI G
RAMANATHAN PL APK TMS VN SINDARAM
சத்தியமே லட்சியமாய் [நீலமலைதிருடன்] மருத காசி கே வி மஹாதேவன்,
டி எம் எஸ்
அந்தநாளைய கம்பீர கொள்கைப்பாடல் குதிரையின்
மீது சவாரி செய்தபடி [ரஞ்சன் ] நாயகன் பாடுவதாக அமைந்தது . குதிரையின் குளம்பொலி
அந்நாளில் வியப்பூட்டிய அமைப்பு. இப்பாடலின் வெற்றி
டி எம் எஸ் அவர்களின் வெற்றி
எனில் மிகையே அல்ல.. கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.google.com/search?q=neelamalaithirudan+sathiyame+latchiyamaai+video+song+youtube&newwindow=1&sca_esv=abf55b7db75781ff&sxsrf=ADLYWILI1_nSsmZG8MqyNS1vOrwmZgHNyg%3A1728806981930&ei=RYALZ8jCOKep4-EPv7eDiA8&oq=nee neelamalaithirudan maruthakasi KVM TMS
இதுகாறும் நாம் இப்பதிவில் கேட்ட பாடல்களிலிருந்து மாறுபட்ட இசைக்குறியீடுகளில் அமைந்த இரு வேறு பாடல்களை காண்போம்.
முகத்தில் முகம் பார்க்கலாம் [தங்கப்பதுமை] பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், விஸ்வநாதன் -ராமமூர்த்தி குரல்கள் டி எம் எஸ் , பி லீலா.
பட்டுக்கோட்டையாரின் பாடல் என்பதா ல் நிச்சயம் மேட்டருக்கு மீட்டர் தான். எழுதிய கவிதைக்கு இசை அமைத்துள்ளனர். மிகவும் ரம்மியமான பாடல் அதிலும் ராக பாவங்கள், ஆலாபனைகள், சொற்களை உணர்ந்து பாடிய மென்மையும் மேன்மையும் டி எம் எஸ் லீலா இருவரின் பாடும் திறனுக்கு நல்ல சான்று . வி- ரா இசை என்பது பல நுணுக்கங்களில் பளிச்சிடக்காணலாம் . பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.google.com/search?q=mugaththil+mugam+paarkkalaam+video+song+download&newwindow=1&sca_esv=da447278f1366733&sxsrf=ADLYWIK_ztefnfV0LhKDrRsCLo6i4vL-Eg%3A1728805669063&ei=JXsLZ4rKA9-s4-EP-vuzuQI&oq=mugaththil+m 1969 thngapadumai PATTUKKOTTAI V
R , TMS, PL
மற்றுமோர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடல்
இன்று நமதுள்ளமே [ தங்கப்பதுமை ] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , வி-ரா, டி ஈ.எம்.எஸ் ஜிக்கி
மீண்டும் கவிதைக்கு எழுந்த பாடல் அமைப்பு, வி-ரா வின் நளினம் பாடலில் மிளிரக்காணலாம்.
. வெகு
இயல்பான
ஓட்டம்,
மற்றும்
குரல்
குழைவுகள்
எதிலும்
சலிப்போ.
தொய்வோ
இல்லாது
பயணித்த
பாடல்;
இது
போன்ற
குரல்கள்
கொண்ட
டூயட்
வகைப்பாடல்கள், வி-ரா வின் இசை அமைப்பின் உன்னத மாதிரிகள். கேட்டு மகிழ இணைப்பு இதோ .
https://www.youtube.com/watch?v=eLnmoEKwxnU
INDRU NAMADHULLAME Thangapadumai pattukottai vr jiki
tms
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment