Tuesday, October 15, 2024

MUSIC DIRECTOR R GOVARDHANAM -2

 MUSIC DIRECTOR   R GOVARDHANAM -2

இசை அமைப்பாளர்  ஆர். கோவர்தனம்-2

ANJAL PETTI 520

பத்து-பதினாறு முத்தம் [அஞ்சல் பெட்டி 520] கண்ணதாசன் , கோவர்தனம், டி எம் எஸ் , பி சுசீலா

இது ஒரு டூயட் -பாடல்

அந்நாளில் நல்ல வெற்றி எட்டிய பாடல்; இதுபோன்ற பாடல்கள் கவிஞர் கண்ணதாசனின் எழுத்தாற்றல் குறித்து பேசுவன . மேலும் அந்நாட்களில்         படங்கள்  கதை. பாடல், போன்ற அம்சங்களுக்காகவே ஓடின. இப்போதுபோல், நடிகரை நினைத்து படம் பார்க்கும் ரசிகர்கள் அப்போது இல்லை. படம் விரசம் இல்லை எனில் கஷ்டப்படாமல் ஓடும். இதுவும் அப்படி ஓர் படம். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=8K5G9cPjf8c  kd RG TMS LR E 10, 16 MUTHAM

இது ஒரு மாபெரும் வெற்றிப்பாடல் கோவர்தனம் இசையில் -தமிழககமெங்கும் பிரபலம்.

சிவகாமி மகனிடம்-சேதிசொல்லடி [பட்டணத்தில் பூதம் -1967] கண்ணதாசன் , கோவர்தனம் , பி சுசீலா .

மிகவும் நளினமான பாடல் , தேர்ந்த இசை அமைப்பு , சிறப்பான கருவி மீட்டல் மற்றும் சுசீலாவின் மென்மையான குரல் , சர்ரே அரசியல் கலந்திருந்தாலும் பலரும் ரசித்த பாடல் . கோவர்தனம் பலரை மிரள வைத்த பாடல்கள் கொண்ட படம்.  பார்த்து ரசிக்க இணைப்பு இதோ.  

https://www.google.com/search?q=ANDHA+SIVAGAMI+MAGANIDAM++video+song+download&newwindow=1&sca_esv=42205e6ff90f4371&biw=1604&bih=790&sxsrf=ADLYWILWHinWOiGxU4qt2_-00OywW1YU9g%3A1728547201611&ei=gYkHZ8SGJby9juMPwJWG2As&ved=0ahUKEwiEy7ePrIOJA KD RG PS

கோபம் கொப்பளித்த காட்சி ; காதலன் தன்னை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு நாயகி புஸ் பஸ் என்று மூச்சு விடாத குறையாக கே ஆர் விஜயா அங்குமிங்கும் ஓட, ஜெய்சங்கர் செய்வதறியாது அவளை சமாதானப்படுத்த முயல , நாயகி சொல்லில் காட்டும் சூடு பாடலின் தனித்தன்மை . டி எம் எஸ் தழைந்து பாடுவதையும், சுசீலா குரலை உயர்த்தி வெறுப்பை உமிழ்வதும் அதற்கேற்ப       கே ஆர் விஜயாவின் உடல் மொழி வலு சேர்க்க நீச்சல் குளத்தில் பாடல் சோகக்குளத்தில் மூழ்கி திணறுவதாக இசை அமைப்பு. சரியான விகிதத்தில் இசைக்கருவிகள் ஒலிப்பது, இப்பாடலின் மற்றுமோர் சிறப்பம்சம்.                      கேட்டு பாடலின் தன்மையை உணர இணைப்பு இதோ .

https://www.google.com/search?q=pattanaththil+bootham+kannil+kandadhellam+kaatchiyaa+video+song&newwindow=1&sca_esv=9ae0de02914ab2f0&sxsrf=ADLYWIJN7237WOGwtODTSR8H_jvkC9_ZCg%3A1728461395640&ei=UzoGZ4P PATTANATHTHIL BOOTHAM KD TMS PS  KRV

இது போன்ற பல நல்ல பாடல்களை வழங்கிய கோவர்தனம், இறுதி நாட்களில் வறுமையில் வாடி, நினைவாற்றல் இல்லாது சேலம் நகரில் வசித்துவந்தார். அன்றைய முதல்வர் [பெண்மணி], நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி அவரும் அவரின் மனைவியும் வாழ வழி செய்தார். எனினும் அவருக்கு பட்டணத்தில் பூதம் என்ற பெயர் தவிர வேறெதுவும் முற்றாக நினைவில்இல்லை என்று கேள்விப்பட்டபோது மனம் மிகுந்த துன்பத்தை உணர்ந்தது. அதிர்ஷ்டம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்பதற்கு திரு கோவர்தனம்அவர்களின் வாழ்வு ஒரு  சிறந்த உதாரணம்

ன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-19

       TEACHER BEYOND YOUR IMAGE-19 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-19 இன்னும் சில அணுகுமுறைகள் / உத்திகள் BLACK BOARD   AND ...