SALEM SUNDARI- 58
சேலம் சுந்தரி-
-58
ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு ,
கல்யாண பந்தி முடிந்தது.. சேஷாத்திரி ரா சா விடம் மாலைக்கு என்ன என்றான். ராமசாமி சொன்னார் ,
அநேகமா எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். ஒரு 15 பேர் இரவு சாப்பிடுவார்கள் அதுனால சிம்பிளா நல்ல டேஸ்ட்டா பண்ணிடு.
. [சேஷு பார்த்தான் பெரிய கல்யாணத்தில் மாலை ரிசப்ஷன் சரி கொஞ்சம் சில ஐட்டங்கள் எக்ஸ்ட் ரா வா செஞ்சு அதிலிருந்து இங்கே கொண்டுவந்துடலாம். அதிகமா செஞ்சுட்டா [சில ஐட்டம் ] திருடினேன் னு சொல்ல முடியாது. இல்லாட்டி இன்னோர் 3 பேர் வேலை பாத்தாதான், சரிப்படும்.]. சரி தம்பிகிட்ட சொல்லிட்டா அவன் சரியா பாத்துப்பான். என்று முடிவு செய்து சாயங்காலம் காபி ?
என்றான். டேய் இப்ப 2 மணிக்கு நாமக்கல் போயிட்டு
7.30- 8.00 மணிக்கு வந்துடுவோம் அதுனால நீ நைட் க்கு ஏற்பாடு பண்ணி வை என்றார் ராமசாமி. பேச்சோடு பேச்சாக, உனக்கு எவ்வளவுடா தரணும் ? என்றார் ராமசாமி . எனக்கு என்னண் ணா 60, 00/0- மொத்தமா [மளிகை, லேபர் , வண்டி வாடகை எல்லாமா
], குடுங்கண்ணா போறும் என்றான்.
ஜாஸ்தி கேக்கறியே என்றார் ரா சா .
எண்ண , நெய், சில பருப்புகள் அநியாய விலை யா இருக்கு; வேற ஒன்னும் அதிகப்படியே இல்லை.என்றான் கேப்டன் கு க் .
சரி ஏதாவது ஏடா கூடம் பண்ணின , நீ தப்பிக்க முடியாது என்று எச்சரித்தார்.
அண்ணா , உங்ககிட்ட மாட்டிக்கறதுக்கு நான் என்ன வெளியூர் ஆளா? . நன் லிஸ்ட் தரேன் உத்தேசமா கணக்கு போட்டு பாருங்கண்ணா புரியும் என்றான் கேப்டன் குக் . இதுவரை எத்தனை டிபன் காபி சாப்பாடு தாம்பூல பை பட்சண பை + நாளை காலை சில பார்சல் எல்லாம் லிஸ்ட் கொடுத்தான் சேஷு . ராமசாமி PK இடம் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே இந்த சாப்பாடு க்கு எவ்வளவு செலவு வரும் என்று பேச்சுக்கொடுத்தார். PK சொன்னார் சார் நல்ல குவாலிட்டி சாப்பாடு, சில ஸ்பெஷல் ஐட்டம் போட்டிருக்கார் சென்னைல னா அது எக்ஸ்டரா னு தனியா
20.-25000/- போட்டு மினிமம் 85-90,000/- வாங்கிடுவாங்க. என்று சொல்லி, இங்க எவ்வளவு கேக்கறார்? என்றார். ராமசாமி -
60, 000/- கேட்டிருக்கார் என்றார்
தாராளமா குடுக்கலாம் ஏன்னா குறையில்லாத சமையல் தாராளமா பரிமாறினாங்க. கங்க்ராட்ஸ் -
நல்ல குக் ஏற்பாடு பண்ணிருக்கீங்க என்று கை குலுக்கி ரொம்பவே பாராட்டினார்.
ராமசாமி, திருப்தி அடைந்தார்.
சுந்தரியிடம் தொகையை சொல்லி , ராத்திரி செட்டில் பண்ணிடலாம் என்றார் ராமசாமி. அப்போது வந்த மாடசாமி எவ்வளடா என்றார்? சுந்தரியே விடை சொல்ல பரவால்ல ரொம்ப நியாயமா தெரியுது; ரொம்ப சுமார் சாப்பாட்டுக்கே 75000/- கேக்கறானுக, சந்தோசமா குடுத்துருங்க என்றார் மாடசாமி. சுந்தரி ரொம்பவே நன்றிப்பெருக்குடன் இருந்தாள்.
மதியம் 1.45 மணி க்கு 3 பெரிய வேன் களில் சுமார் 25-26 பேர் நாமக்கல் சென்றனர் அம்ஜம் இப்போதுதான் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க போகிறாள் ,
ராமசாமி, மாடசாமி ,
PK குடும்பத்தினர் , மேடம் சுபத்திரா ஒரு வேனில் ;ஏனையோர் பிற வேன் களில் .அதில் கார்மெண்ட் முதலாளி பத்மாவதி , சுந்தரியின் சித்தப்பா இன்னும், புடவை செட்டியார் +
2 சேலம் உறவினர்கள் அடக்க்கம். சுபத்திரா மேடம் ஏற்பாடு .
வேன் சரியாக
1.50 நிமிடத்தில் கோயில் வளாக பார்க்கிங் பகுதியில் நிற்க, அனைவரும் இறங்கி கோயிலுக்கு சென்றனர் .
நெடிதுயர்ந்த ஆஞ்சநேயர் கம்பீரமாக கூப்பிய கரங்களில் துளசி மாலையுடன் அனைவரையும் தெளிவாகப்பார்க்கும் விழிகளுடன் ,
ஒரே பரவசக்காட்சி.
சுந்தரி ஆஞ்சநேயா என்று சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க, சுப்பிரமணியும், விசாலாட்சியும் எப்போதுமே ஆஞ்சநேய பக்தர்கள் ,
அவர்களும் பரவசப்பட்டு வணங்கினர். அம்ஜம் ,
அம்மாடியோ என்று ஒருகணம் தன்னை மறந்தாள் ஆஞ்சநேயரின் ஆகிருதியில் . மொத்தத்தில் ஒரே பக்தி பரவசம் . PK உமா , கல்யாண கோஷ்டியினர் அர்ச்சனை செய்வித்தனர். சுப்பிரமணி பரவசம் கொண்டான் -திருமணத்தன்று ஆஞ்சநேய தரிசனம் அதுவும் நாமக்கல்லில் ,
விசாலி ரொம்பவே மகிழ்வுற்றாள்.
கார்மெண்ட் முதலாளி, சித்தப்பா , மற்றும் சேலம் உறவினர்கள்
"நாங்க இப்படியே பஸ் ல சேலம் போயிடறோம் 1
மணி நேரத்துல ஊருக்கு போயிடுவோம் என்று . விடை பெற கார்மெண்ட் பத்மாவதி , கலங்கி சிவந்த கண்களுடன் ,
விசாலு என்னை மறந்துடாத என்று கை கூப்ப, அப்பிடி சொல்லாதேங்கம்மா என்று அழுதபடியே விசாலி வணக்கம் சொன்னாள். இவளுக்கு அந்த அம்மா தான் PK போல இருக்கு என்று அந்த அம்மையாருக்கு மனதார நன்றி சொன்னான்
சுப்பு.. பின்னர் ஓட்டலில் காபி சாப்பிட்டு திருச்சிக்கு வந்தனர் மணி 7.50..
இரவு நல்ல சுவையான டின்னர் ;
அனைவரும் மகிழ்ந்தனர். இரவு மண்டபத்தில் தங்கிக்குங்க காலைல
7.00 மணிக்கு காலி பண்ணணும் என்று மாடசாமி சொல்லி விட்டு புறப்பட்டார்.
தொடரும்
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment