DIRECTOR TR RAMANNA
இயக்குனர் டி ஆர் ராமண்ணா
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபர் டி ஆர் ராமண்ணா . பல படங்களை இயக்கியவர், காலத்திற்கேற்ப காட்சிகளை அமைப்பவர். அந்நாளைய முன்னணி நடிகை டி ஆர் ராஜகுமாரியின் சகோதரர் , பின்னாளில் ஈ வி சரோஜா என்ற பெண்மணி [கதாநாயகியாக வலம் வந்தவர்] யை மணந்தார். முன்னணி நாயக நாயகியரை வைத்து படங்கள் இயக்கியவர், இசையில் நல்ல நாட்டமும் ஆர்வமும் கொண்டவர் . அவர் படங்களில் நல்ல பாடல்களை அமைத்து பெருமை பெற்றவர். அவரது சில ஆக்கங்கள் நமது இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ளன
மயக்கும் மாலை -- குலேபகாவலி [1956] தஞ்சைராமையாதாஸ் , ஜி .ராமநாதன் , ஏ எம் ராஜா ஜிக்கி . இப்பாடல் உண்மையில் கே வி மகாதேவனின் ஆக்கம் [கூண்டுக்கிளி படத்தில்] ஆனால் படம் திரைக்கு வர தாமதம் ஆனதால், டி ஆர் ஆர் அவர்கள், இந்தப்பாடலை குலேபகாவலி யில் பயன்படுத்திக்கொண்டார் ஆனால் விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரில் வெளிவந்தது. ஒரு நல்ல பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=Zgcq8v3rdns KULEBAGAVALI [1956] THANJAI
RAMAIYADAS , KVM [V-R] AMR JIKKI
அதே படத்தில் ஆசையும் நேசமும் பாடல் , பாடியவர் ஜமுனா ராணி
அந்த காலக்க்கட்டத்தில்
வந்த விக்கல் பாடல். ராஜசுலோச்சனா நடித்திருந்தார். ஒரு போதைவகைபாடல், ஜமுனாராணியின் குரலில். வெகு நேர்த்தி யாக பாடப்பெற்று வெற்றி ஈட்டிய பாடல். குரலின் வசீகரம் இப்பாடலின் சிறப்பு அன்றைய விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வந்து வெற்றி ஈட்டிய பாடல்
MANAPANDHAL[1961]
UDALUKKU
UYIR KAVAL
மணப்பந்தல் 1961 , கண்ணதாசன் , வி, ரா,பி பி ஸ்ரீனிவாஸ்
உடலுக்கு உயிர் காவல்
வெகு நேர்த்தியான தத்துவப்பாடல் , 3
நிமி டங்க- ளில் பாடல் உருவானது அடுத்த 5 நிமிடங்களில் பாடல் ரெடி. தத்துவக்குவியல் ,
பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கிய நிகழ்வுகளை குறிப்பால் பேசும் பாடல். கவி அரசரின் சொல்லாட்சியும் , மெல்லிசை மன்னர் உருவாக்கிய ஒரு சோகம் ததும்பும் தத்துவப்பாடல் . சரோட் கருவியில் சோகம் இழையக்காணலாம்கேட்டு ரசிக்க
https://www.youtube.com/watch?v=DD02gs6NkaY KD VR PBS
SRI VALLI
[1961]
PAAYAADHA
KANAL PAYA THANJAI RAMAIYADAS , GR TMS
பாயாத கனல் பாய [ஸ்ரீ வள்ளி -1961] தஞ்சை ராமையாதாஸ் , ஜி ராமநாதன் பாடிய குரல் டி எம் சௌந்தரராஜன் . வெகு நேர்த்தியான சொல் வீச்சும் இசை நளிநமும் மிகுந்த
இப்பாடல் ; சொல்லாட்சியும் பாடும் பாவமும் வெகு நேர்த்தி எவ்வளவு அனாயாசமாக டி எம் எஸ் பாடியுள்ளார் என்று கவனியுங்கள் . .நுணுக்கமும் நேர்த்தியும் கேட்டு மகிழ இணைப்பு
PASAM 1962 VR JANAKI
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி பாசம் 1962, கண்ணதாசன் ன், வி-ரா, குரல் எஸ் ஜானகி
அந்த நாளிலேயே வந்த வெகு சுவையான பாடல் ஜானகியின் குரலில். ஜானகியை கண்டுபிடித்தது போல் பேசுவோர் இந்தப்பாடல் வந்தது 1962 என்று தெரிந்து கொள்க. சரோஜாதேவிக்கு பாடியுள்ளார். அப்போதே வெற்றிப்பாடல் வரிசையில்
மிளிர்ந்த பாடல், குறலும் இசையின் சீரான வேகமும் , பாடலுக்கு அழகூட்ட , கேட்டு மகிழலாம் இணைப்பு இதோ
PERIYA IDATHTHUPPEN [1963] KATTODU KUZHAL , KD , VR TMS, PS LRE
கட்டோடு குழலாட ஆட , பெரிய இடத்துப்பெண்
1963, கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி, குரல்கள், பி சுசீலா, டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி
இது ஒரு சிந்தைகவரும்சொற்கட்டும், இசையின் தாலாட்டும் ஒருங்கிணைந்த சுநாத பாடல். பாடல் முழுவதிலும் தாலாட்டுப்போன்ற ஒரே swing எனப்படும் ராக அசைவும் ஒலி நயமும் மெல்ல நம்மைப்பீடிக்க ஒரு அமைதியான பாடல் . இப்பாடலின் சொல் நயம் மாறுபட்ட ஒன்று. பாடலிலேயே "தேவாரப்பாட்டாக
" என்று சொல் வருகிறது. இப்பாடலில் சில சொற்கட்டுகள்
"தேவார"த்தை அடியொற்றி அமைந்துள்ளதாக ஒரு கருத்து நீண்டநாட்களாக உண்டு. ரொம்ப அழகாகப்பாடியுள்ளனர். பச்சரிசிப்பல்லாட
, பம்பரத்துநாவாட, முதிராத நெல் ஆ ட , முளைக்காத சொல் ஆட என ஏராள வருணனைகள் கவிஞரின் ஆளுமைக்கு கட்டியம் கூற அனைத்தையும் இசையின் கட்டுக்குள் ஆடவைத்த வி ரா , இசை வல்லுநர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? கேட்டு மகிழ இணைப்பு இதோ
.
https://www.youtube.com/watch?v=SL-tgW_4JTQ
TABLA FLUTE , LYRIC
THEVARA STYLE PHRASING
QFR OF THE ABOVE
கட்டோடு குழலாட ஆட , பெரிய இடத்துப்பெண்
1963, கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி, குரல்கள், பி சுசீலா, டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி
இப்பாடலை வர்ணித்து விளக்கும் சுபஸ்ரீ அவர்கள், மற்றும் அவரது qfr இசைக்குழுவின் இசை நளினத்தையும் ரசித்து மகிழ இணைப்பு இதோ
https://www.google.com/search?q=paasam+1962+jal+jal+jal+video+song+download&newwindow=1&sca_esv=c64f92f75d6f9f24&sxsrf=ADLYWIIZSf7fBoHcyNJaAVFsmbiolu_dUg%3A1732171780742&ei=BNg-Z63-LOGU4-EPtpvq-Ak&oq=paasam+1962+jal+jal+jal+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiI3BhYXNhbSAxOTYyIGphbCBqYWwgamFsIHZpZG
Listen for the content –kd /msv mesmerism
தொடரும்
அன்பன் ராமன்
Nice info about TRR and his taste to Music.
ReplyDelete