Wednesday, November 20, 2024

T M SOUNDARARAJAN -30

 T M SOUNDARARAJAN -30

டி எம் சௌந்தரராஜன் -30

தமிழ் திரை யின் பொற்கால பாடகர்கள் எனில் திரு டி எம் எஸ் மற்றும் திருமதி சுசீலா என்று தயங்காமல் கூறலாம் வாதிடலாம். எத்தனை பாடல்கள் , யார் யாருக்கு பாடினர் என்பதை விட யாருக்குப்பாடவில்லை என்று விடை தேடுவது கடினம். ஒன்று சொல்லலாம் "போலீஸ்காரன் மகள் "படத்தில் இருவருமே பாடவில்லை அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் இசையில் வந்த படம் தான். இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். ஆனால் இருவரும் காதல் பாடல்களை பாடும் போது  , விட்டுக்கொடுக்காமல் போட்டிபோட்டுப்பாடி யார் நிர் 1, நிர் 2 என்று சொல்லவே முடியாது. பிய்த்தெறிந்து விடுவார்கள் இருவரும். அதில் முக்கியமாக என்னவெனில் எம் எஸ் வி , கே வி எம் இருவரும் மிக நேர்த்தியான நாகாஸ் வேலை செய்து பாவத்தை வெளிக்கொணர்வர். அதில் சொதப்பினால், பாடல் அவுட். மேலும், உதவியாளர்கள் கோவர்தனம், ஹென்றி டேனியல் , ஜோசப் கிருஷ்ணா போன்ற [எம் எஸ் வி குழுவினர் , மற்றும் புகழேந்தி [கே வி எம் உதவியாளர் ] பாடல் பதிவில் கண் குத்திப்பாம்பு  போல் நிர்வகித்துக்கொண்டே இருப்பர் ; தவறு செய்தால் மீண்டும் மீண்டும் பாடவேண்டி வரும். இசைக்குழுவினரும் கூட அந்தக்கண்காணிப்பில் இருந்து தப்பிக்க இயலாது.. அதில் வெற்றி வாகை சூடியோர் 

 டி ம் எஸ் மற்றும் சுசீலா  - எவ்வளவு நேர்த்தி குரல், பாவம் சங்கதிகளை அனாயாசமாக பாடுவதில்.. அப்படிப்பட்ட அநாயாசங்கள்சில இன்றைய பதிவில்.

மீண்டும் சொல்கிறேன் , ம் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் என்று சொல்லாமல் , என்னென்ன முயற்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை புரிந்துகொள்ள வெகு கவனமாக விளக்கங்களையும் பாடலையும் நன்கு கவனியுங்கள், பாடல் கேட்பதில் என்ன ஈடுபாடு தேவை என விளங்கும் . பின்னர் புரியும்  ஏன் பழைய பாடல் களில்  மீண்டும் மீண்டும் லயிக்கிறோம் என்று தெளிவு கிடைக்கும்

அதே போல் VOICE ADAPTATION என்ற  நடிக- நடிகையின் . .குரல் ஒட்டி பாடுவதில்  இருவருமே ஜாம்பவான்கள். இதை புரிந்து கொள்ளாத சிலர் எம் ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று பேசுவது உண்டு. ஆனால் சுசீலாவோ கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுக்கும் ஏற்ப பாடுவதில் பலே கில்லாடி .

கொடி அசைந்ததும் [பார்த்தால் பசி தீரும் -1962] கண்ணதாசன் வி-ரா, டி எம் எஸ், பி சுசீலா

கனவுப்பாடல்

கண்ணதாசன் கேள்விக்குப்பதில் கேள்வியே என்ற ரீதியில் கொடுத்தபாடல்.        வி ரா இசை அமைய்ப்பில் பாடல் மிடுக்கு நடை போட, சிவாஜி ஒரு சிறிய கால் குறைபாட்டுடன் நடந்தபடி பாடுவது மேலும் அழகு. கேள்விக்கு கேள்வி      இறுதியி ல் இரு குரல் ஹம்மிங் . போகட்டும் கொடைக்கானலில் அவ்வப்போது பனி துரத்திக்கொண்டு வர குறைந்த ஒளியில் நேர்த்தியாக படப்பிடிப்பு [விட்டல்] செய்துள்ளார் . கோல்ப் மைதானம் எண்ணற்ற தமிழ் பாடல்களுக்கு ஆடுகளம் அமைத்து , கொடைக்கானலின்  அடையாளம் என்னும் அளவிற்கு பிரபலம். ரசித்து மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=paarththsaal+pasi+theerum+-+kodi+asaindhadhum+video+song+download&newwindow=1&sca_esv=03e995a0e07cb544&sxsrf=ADLYWIKnZ90SCg7FQ3P4g4snKc6b7UTtMw%3A1732061077417&ei=lSc9Z9qVGaufseMPgqLi0QM&oq=paarththsaal+pasi+theerum+-+kodi+asaindhadhum+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOXBhYXJ0aHRoc2FhbCBwYXNpIHRoZWVydW0gLSBrb2RpIG ?for ? KD MSV TKR PS TMS KDKL MIST

KODI ASAINDHADHUM

கனவுப்பாடல்

முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை 1967] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ்

வெகு நேர்த்தியான கண்ணாவுப்பாடல், காலத்தை விஞ்சி நிற்கும் இசை பிரம்மாண்டம், பாவத்திற்கென்றே எழுந்த ராக அமைப்பு, பாடலின் சிறப்பு , கவிஞர் தமிழில் விளையாடி உள்ளார். புது வகை கற்பனை கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட . விருந்து விரைந்து, சந்தித்த , சிந்திக்க, தந்து விட்டேன் என்னை என்று சிறு சொற்களில் பெரும் உணர்வுகள் ஒப்பனை இல்லா நடிப்பு, மங்கிய ஒளியின் பார்வையிட்டில் பாடல் [ஒளிப்பதிவு என் பாலகிருஷ்ணன்]. வெகு நேர்த்தியான தாளக்கட்டுகள் கேட்டு மகிழ இணைப்பு இதோ l

https://www.google.com/search?q=MUTHUKKALO+KANGAL++video+song+download&newwindow=1&sca_esv=03e995a0e07cb544&sxsrf=ADLYWIKsgXPQAq80Gjv3-kcbrHMYoGGa_g%3A1732061166808&ei=7ic9Z8-MMcyhseMPvKimgAE&ved=0ahUKEwjPu87UzumJAxXMUGwGHTyUCRAQ4dUDCA8&oq=MUTHUKKALO+KANGAL++video+song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJk1VVEhVS0tBTE8gS0FOR0FMICB2aWRlbyBzb25nIGRvd25sb2FkMggQABiABBiiBEi0Y1AAWKdJcAF4AJABAJgBlAGgAcIQqgEFMTAuMTC4AQzIAQD4AQGYAg-gAt4MwgIGEAAYBxgewgIJEAAYBxjHBRgewgIKEAAYgAQYxwUYDcICCBAAGAUYBxgewgIIEAAYCBgNGB6YAwDiAwUSATEgQJIHBDMuMTKgB880&sclient=gws-wiz-serp#fpstate=ive&vld=cid:cc2b3e0c,vid:H-Pw9ZDhcMw,st:0  NO RAGAM INTERPRETS

 

MUTHUKKALO KANGAL

இதே பாடலின் பிற பண்புகளை வெகு நேர்த்தியாக சுபஸ்ரீ விளக்குகிறார். அவர் குழுவினர் இப்பாடலை வழங்க, மேலும் பல விவரங்கள் தெளிவாகிறது. கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=MUTHUKKALO+KANGAL-QFR++video+song+download&newwindow=1&sca_esv=03e995a0e07cb544&sxsrf=ADLYWIJpbxqbvfn3YXTBJbmib8MHBjZJgQ%3A1732061752801&ei=OCo9Z-XTMPGbseMPmOWWkQE&ved=0ahUKEwjlz4Ts0OmJAxXxTWwGHZiyJRIQ4dUDCA8&oq=MUTHUKKALO+KANGAL-QFR++video+song+dow QFR 367  WATCH BONGO BEATS

POO MAALAIYIL

பூமாலையில் ஓர் மல்லிகை [ஊட்டி வரை உறவு 1967] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

அதியற்புதமான டூயட். பல ஆண்டுகளானாலும் சுவை குன்றாத அமைப்பு, குரல் நேர்த்தி பாவம், வண்ணக்காட்சிகள், தாள நடை யின் மகோன்னதம் என பல பெருமைகள் கொண்ட பாடல். வெகு நேர்த்தியான ஆலாபனை , மற்றும் தாள நடை இவற்றை ஊன்றி கவனியுங்கள் இனிமேல் இது போன்ற பாடல்களை புதிய படங்களில் காணும் வாய்ப்பே இல்லை. பழைய பாடலை கேட்டு மகிழ இணைப்பு இதோ 

 https://www.youtube.com/watch?v=N4F0poJiGok

பூமாலையில் ஓர் மல்லிகை

இப்பாடல் குறித்த விளக்கம் சுபஸ்ரீ. அவரது குழுவினர் வழங்கிய பாடல் அனைத்து நுணுக்கங்களையும் அரங்கேற்றி பெருமைகொண்ட பாடல். கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=YmnLJF4L60s QFR 518

தெவிட்டாத சுவை வளரும்

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. அருமையான பாடல்களுக்கு மிக அருமையான விளக்கங்கள்!!

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...