OLD MOVIE SONGS-11
INNOVATIVE
SUBSTITUTIONS
புது வகை முயற்சிகள்
[கருவி இன்றி ஒலித்த மாற்று பொருட்கள் ]
அது என்ன புது வகை முயற்சிகள் என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா ? பாடலுக்கு கவிஞர் சொல்கொண்டு உயிர் தருகிறார் ; கருத்தை வெளியிட ராக அமைப்பில் இசை அமைப்பாளர் பாட வைக்கிறார். அப்போது பாடல் காட்சியின் தன்மை குன்றாமல் , ஒலியின்
உதவியுடன் மெருகேற்றப்படுவதைத்தான் ஆர்கெஸ்டரேஷன் என்று சொல்கிறோம். ஆந்த ஆர்கெஸ்ட்ரேஷனில் ஏதோ 10, 15 கருவிகள், 2 தாளவாத்யங்கள் உபயோகித்து ஒலி எழுப்பினால் போதுமா? அந்தஓலி குரல்களின் நடைக்கு வலு சேர்க்கவும், பல்லவிக்கு, சரணத்திற்கும் இடையே உயிரோட்டமாக ஒலி க்கவும் வேண்டும். சில தருணங்களில் இசை அமைப்பின் பாங்கிலேயே பாடலின் சூழல் பிரதிபலித்தால் பாடல் அமோக வெற்றி பெரும். அதற்கென எண்ணற்ற உத்திகளை மேற்கொண்டு வெளிவந்த பாடல்கள் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பெருமையை பன்மடங்கு உயர்த்திட வெகுவாக உதவியது. இவ்வாறு பலதரப்பட்ட ஒலிகளை இசைக்கருவிகள் அல்லாத வேறு ஏதோ பொருட்களைக்கொண்டு ஒலியெழுப்பி அவை அச்சுஅசலாக தேவைகளை பூர்த்தி செய்தன என்பதை எண்ணிப்பார்த்தால் பிரமிப்பு மேலிடுவதை தவிர்க்க இயலாது. அதுபோன்ற வித்தகங்களை செய்வதில் திரு எம் எஸ் வி அவர்களின் இசைக்குழுவில் இருந்த சதன், முருகேஷ், சாய்பாபா போன்றோர் பெரும் திறமை சாலிகள். அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. அதுபோன்ற கருவிகளாகப்பயன் பட்ட சிலி ஒலி அமைப்புகளின் உதவியுடன் உருவாக்க பாடல்களை இன்றைய பதிவில் காண்போம். .
அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை [நெஞ்சம் மறப்பதில்லை-1963] கண்ணதாசன் , வி-ரா , ஜானகி , பி பி ஸ்ரீனிவாஸ்
ஒரு அற்புதமான டூயட் முற்றிலும் போட்டியே இல்லாத அதனால் ஒப்பிடவோ, விவாதிக்கவோ வாய்ப்பு இல்லாத 60 வயது காதல் கீதம். காட்சியில் குதிரை வண்டி [ரேக்ளா]யில் காதலர்கள் ஓடிக்கொண்டே பாடிக்கொண்டே , ஒருவரையொருவர் இடித்து ஊடல்செய்வதும் , கண்ணால் வலை வீசுவதுமாக அமைந்த பாடல். குதிரையின் குளம்பொலி தான் அடிப்படை தாள நடை, பாடல் அதன்மீதே பயணிக்கிறது. இது உள்ளூர் வகை குதிரை என்பதால் கொட்டாங்குச்சி இரண்டைத்தட்டி குதிரைக்குளம்பு போல் ஒலிக்க வைத்து, கருவி இல்லா இசையை ஏற்படுத்தியுள்ளனர் . வண்டியின் போக்கிற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டே இயங்கும் கேமரா [சுந்தரம்-வின்சென்ட்] . அந்தக்காலத்தில் ஹாலிவுட் படங்கள் போல் அமைந்த ஒளிப்பதிவு , நிழல், செடிகளின் ஊடே வரும் நிழல், வெளிச்சம் என மாரி மாறி வந்தாலும், உள்ளது உள்ளபடி பதிவிடப்பட்டுள்ளதால், காட்சியில் நாமே பயணிப்பது போன்ற உணர்வு, இதை நன்கு கவனியுங்கள், ஒளிப்பதிவின் தத்ரூபம் எவ்வளவு உழைப்பை வாங்கி இருக்கும். ஒரு போதும் ஊடலை தவற விடாமல் ஓடும் வண்டியின் வேகத்திலேயே தொடர்வது மேலும் சிறப்பு. காதலர்கள் உற்சாக விளிம்பில் அவ்வப்போது ஹோ ஹோ ஹோய் [டிபிகல் எம் எஸ் வி ]என்று பாடுவது பாடலுக்கு மெருகேற்றியுள்ளது. அனைத்தையும் தவறாமல் கவனியுங்கள் இப்பாடலின் மேன்மை புலப்படும் . இணைப்பு இதோ
ராஜாவின் பார்வை
[அன்பே
வா
-1966] வாலி,
எம்
எஸ்
வி,
பி
சுசீலா,
டி
எம்
எஸ்
மற்றுமோர் குதிரை
வண்டி
ப்பாடல்
, ஆனால்
செல்வந்தர்
குதிரை
, அலங்காரம்,
கம்பீரம்
என
அனைத்திலும்
முதன்மை
.என
ஒரு
கனவுப்பாடல்
. அதனால்
, ஓஹோ
ஓஹோ
என
பெண்
குரல்
ஒலியுடன்
, ஏஞ்சல்களின்
பூத்தூவி
வரவேற்பு
என
குதிரை
தலை
அசைத்துக்கிளம்ப,
ஒய்ங்
, ப்ளங்ச்சிக்
ப்ளங்ச்சிக்
என்ற
கருவிகளின்
கூட்டு
ஒலி
உடனே ணங் என்ற ஒலி கேட்கிறதே,
அது வெண்கலப்பானையில் , கரண்டியால் தட்டி மணி போல் ஒலிப்பது செய்யப்பட்டது என்று அந்தக்காலத்திலேயே
கருத்து உலவியது. உடனே, குளம்பொலி கிளம்ப
பாடல்
வேகம்
எடுத்து
உயரப்பறக்கிறது.
பணக்காரக்குதிரை,
எனவே
கொட்டாங்குச்சி
இல்லை;
நன்கு
விளைந்த
மூங்கில்
குழல்கள்
சிறிதும்
பெரிதுமாக
இரண்டினை
மாறி
மாறி
சலவைக்கல்லின்
மீது
தக்
டக் தக் டக்
என்று
தட்ட
குதிரையே வெட்கப்படும் வண்ணம் எழுந்த
ஒலி
பாடலின்
முத்திரை
1966ல்.
திரை அரங்கில்
விசில்
பறக்கும்;
அத்துணை
அலங்காரங்களுக்கும்
ஈடான
பெரும்
இசைக்கோர்வை,
கற்பனைக்கு
எட்டாத
பின்னிப்பிணைந்த
இசைக்கோர்வை.
இப்போது
மூங்கில்
குழல்
குதிரையை
நினைவூட்டிய
உத்தி
இப்பாடலின்
மகத்தான
வெற்றிக்கு
ஒரு
காரணம்.
கனவு காட்சியை
தேவலோகமாக ஜொலிக்கச்செய்ய இசையில்
கோரஸ்
உதவியது
, காட்சியில்
பின்
புலத்தில்
2,3 அடுக்குகளில்
வெவ்வேறு
வண்ண
செல்லோபென்
பேப்பர்கள்
குறுக்கிலும்
நெடுக்கிலும் நகர்த்தப்பட்டு, அவற்றின்
ஊடே
பாய்ச்சிய
ஒளியில்
, விண்
மீன்கள்
போல
மெல்ல
இயங்குவது
ஆர்ட்
டைரக்டர்,
ஒளிப்பதிவாளர்
[மாருதி
ராவ்]
வெளிப்படுத்திய
தொழில்
நுணுக்கம்.
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் [ராமன் எத்தனை ராமனடி]
] கண்ணதாசன், எம் எஸ் வி, பிசுசீலா .
இது பழைய பாடல் தான். ஆனால், புதுமைகள் நிறைந்த பாடல்.
கவிதைக்கு உயிர் கருத்து எனில், அதற்கு வடிவம் பாடும் முறை மற்றும் துணை இசை இவற்றின்
ஒன்றிணைந்த உருவம், எனவே இடை இசை மற்றும் துணை இசை இரண்டின் பங்களிப்பு கவிதையை மேலும்
உயர்த்தி அதன் ஆயுளை நீட்டிக்கிறது. ஆதனால் தான் 60 வயதைக்கடந்த இளமைகள் உலாவர, 30
வயது முடியும் முன் கிழண்டு, துவண்டுபோன பாடல்கள் கேட்பாரற்று போன நிலையை காண்கிறோம்.
Old
is gold என்ற வாசகம் universal
truth என்றே உணரலாம்.
சரி பாடல் ஒரு ரயிலில் நிகழ்வதை இசை எவ்வளவு எளிதாக ட்ரம்,
மற்றும் தாளம் கொண்டு உணர்த்த, உப்புக்காகிதத்தை உரசி நீராவி எஞ்சின் புறப்படுவதை உணர்த்தியுள்ளார்
எம்எஸ் வி, உடனே குழலின் ஒலி அன்றைய நீராவி எஞ்சினின் தொனியாக கிளம்ப, காட்சியுடன்
வெகு நேர்த்தியாக பொருந்துகிறது. அவ்வப்போது பாடலில் வரும்- குழல், எஞ்சினை நினைவு
படுத்துவதும் சிறப்பு. பாடலின் வரிகள் தெளிவாக ஒலிக்கிறது அதிலும் 'சொர்க்கமோ நீயும்
நானும் போகுமிடம்'என்ற வரியில் 'சொர்க்கமோ' என்று நீட்டிப்பா –டுவது, அந்த சொல்லுக்குரிய
இடம் எங்கோ இருக்கிறது என்று 'பாவம்' காட்டுகிறது. அதே போல வாழ்வே மலராதோ என்ற வரியின்
துவக்கத்தில் மங்கையெந்தன் பேரும் உன்னுடன் சேர்ந்தால் என்று திருமண பந்தத்தைக்குறிக்கும்
சொல்லாடல் [மணமான பெண்கள் கணவனின் பெயரை இணைத்து அடையாளப்படுத்திக்கொள்வதை கவிஞர் உணர்த்தியுள்ளார்].
பாடல் நெடுகிலும் சீரான பயணம், தெளிந்த பாவம் மிக்க பயணம், சுகமான இசை என்று ஒலிகள்
வழங்கிய ஒரு பாடல் . கே ஆர் விஜயா சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு சுகமான அனுபவம் . இணைப்பு
இதோ
பாட்டுக்குப்பாட்டெடுத்துhttp
பாடலின் சூழல் மற்றும் உணர்வுக்கேற்ற ஒலி அமைப்பதில்
எம் எஸ் வி எட்டிய உயரம் மிக அதிகம் . எனவே தான் எம் எஸ் வி அவர்களின் பழைய
பாடல்களில் உணர்வு மிக்க கருவி ஒலிகள் , வெவ்வேறு பொருள்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்றவை.
இப்போது சோகம் சுமந்த பிரிவாற்றாமையின் ஓலம் பாடலின்
துவக்கத்திலேயே ஒலிக்கிறதே . ஆம் இது இசைக்கருவியல்ல ; மரம் அறுக்க உதவும் ரம்பம்.
என்னது ரம்பமா? ஆம், ரம்பம் வயலின் போல்
, வாசிக்கப்பெற்று உ உ உ ங்கொய் ங்கொய் என்று அழுவது, சோகத்தின் முன்னுரை , பின்னர்
சரணங்களிலும் இதே தொய்ந்த சோகம் ரம்பத்தின் தொனியினால் வெளிப்பட கேட்பவரை துயர் கொள்ளச்செய்யும். அதே சமயம்
சோகம் மேலோங்க வேண்டிய களம் என்பதால், நிதானமாகப்பாடுவதையும் காணலாம் ; குறிப்பாக
மின்னலாய் வகிடெடுத்து
, மேகமாய் சடைபோட்டு மற்றும் மை எழுதும் கண்ணாலே
பொய் எழுதி போனாளே என்று பாடுவதும் [கவிஞர் வாலி காட்டிய சொல் சிலம்பம் ], மேலும் பெண்
பாடும் வாழைப்பூ திரியெடுத்து , வெண்ணெயிலிலே
நெய் எடுத்து ஏழை மனக்குடிசையிலே ஏத்தி வெச்சான்
ஒரு விளக்கு ஏத்தி வெச்ச கை களிலே என் மனச
நான் கொடுத்தே ன் ,தீராத ஆசை யிலே என் மனசை ஆட
விட்டான் ஆடவிட்டு போன மச்சான் ,ஓடம் விட்டு போனேனே , ஓடம்
...................விட்டு போனானே , ஓடம்விட்டு----------போனானே ஹொய்ஹோய் ஹோய் என்று ஏங்கி ப்பாடுவதும் , நெஞ்சு மட்டும் அங்கிருக்க
நான் மட்டும் --------இங்கிருக்க என்ற இடங்களில்
குரல்கள் காட்டும் பாவம் பாடலின் ஜீவ நாடி
"இது குறித்து திரு லட்சுமணன் செட்டியார் ஒரு முறை சொன்னார்இந்தப்பாடல்
ரெக்கார்டிங் செய்யும்முன் எம் எஸ் வி பாடும்
போது அவரே யாரையோ இழந்தது போல் அவ்வளவு பாவம்
காட்டி ப்பாடுவார் -ரொம்ப வேதனை வெளிப்படும் " .அவ்வளவு உணர்ச்சிகளின் தாக்கத்தை
ரம்பத்தின் ஒலி யினால் வலுப்படுத்தி உள்ளனர் அந்த நாளில் .
பாடலுக்கு இணைப்பு
தேனாற்றின் கரை
தனிலே
இது ஒரு விவகாரமான பாடல் காட்சி. புத்தி சரியில்லாத பெண்,
[ரமாப்ரபா ] நாகேஷை நீதான் முற்பிறவி யில் என் கணவன் என்று வாட்டி வதைக்க நாகேஷ் அலறிக்கொண்டு
ஓடுவது படமெங்கும் நிகழ, நள்ளிரவில் அந்தப்பெண் நாகேஷை தேடிக்கொண்டு மோஹினி போல் வர
-- இதுவே காட்சி
கண்ணதாசன் தன பங்குக்கு மிரட்டுகிறார் -- ஆவணி -ரோஹிணி
அஷ்டமி நேரத்தில் என்று க்ரிஷ்ணபரமாத்மாவின் ஜெயந்தி நேரத்தை சொல்லி பெண் பாட நாகேஷ் என்ன அனைவரும் அலற அமைந்த பாடல்
எம் எஸ் வி இசையால் மிரட்டிய பாடல்
தேனாற்றங்கரைதனிலே , தேய் பிறையின் [உத்தரவின்றி உள்ளே
வா] கண்ணதாசன் , எம் எஸ் வி, குரல் எல் ஆர் ஈஸ்வரி . நள்ளிரவுப்பாடல், திகில்காட்ட,
குறைந்த ஒளியில் ஒளிப்பதிவு, முற்றிலும் வெண்
உடை , சலங்கை அணிந்து நள்ளிரவில் ஜல்
ஜல் என்று வர அடிவயிற்றைக்கிளறு ம் ங்கொய் ங்கொய் என்ற ஒலி ஓங்கி ஒலிக்க , தியேட்டரில்
திகில் நிலவிய காட்சி . திகில் ஒலி எழுப்பியது ரம்பம் தான். ஆம் ரம்பட்ர்ஹத்தை வயலின்
போல் இசைக்காமல் , இரு ஓரங்களையும் பிடித்துக்கொண்டு உதறும் பொழுது லிளம்பும் ங்கொய்
ய் ய் , மைக்கின் வழியே வரும்போது பயங்கர திகிலைக்கிளப்பி ஓலமிடும்.
அதை உரிய இடங்களில் பாடலில் வாசித்து மிகப்பெரும் அச்சம்
ஊட்டிய பாடல், மேலும் நள்ளிரவில் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்
ஹ ஹ எல்லார் ஈஸ்வரி வேறு பேய்போல் சிரிக்க,
மீசை முருகேஷ் அவ்வப்போது உறுமி [உடுக்கை] யில் தாளம் கிளப்ப பாடல் முற்றிலும் வேறு உயரம் தொட்டு, தனி இடம் பெற்றது
கேட்டு நடுங்க இணைப்பு இதோ
ஏதேதோ பொருட்களை
இசைக்கருவிபோல்
இயக்கி
வெற்றி
கண்ட
விற்பன்னர்களை [வி-ரா] குழுவினர்
நினைவு கொள்வோம்
நன்றி
அன்பன் ராமன்
Excellent write up on MSV'S creativity.
ReplyDelete