Monday, November 18, 2024

PATTU IYENGAR –THE LYRICIST-3

 PATTU IYENGAR –THE LYRICIST-3

பாட்டு எழுத வந்த  பட்டு ஐயங்கார் -3

கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை  டேபிளில் அமர வைத்து காட்சியை விளக்கி, ஒரு ஆண் தூக்கம் வராமல் தவிக்க , அவனது காதலி பாடுவதாக காட்சி. அதுக்கு கண்ணதாசன் ஒரு பாட்டு எளுதி இருந்தாரு 'பாதகாணிக்கை" படத்துல. அந்த மாடல் ஒரு பாட்டு நம்ம படத்துக்கு வேணும்.

சரி சாமி ஜூஸ் குடிக்கிறீங்களா?

வேணாம் , தீர்த்தம் கிடைக்குமா என்றார் அய்யங்கார்

திருப்பதி “சாமீ -என்று பிளந்த வாயின் மேல் 3 விரலை வைத்து , நீங்க தண்ணி போடுவீங்களா” [மனசுக்குள் காலம் ரொம்பகெட்டுப்போச்சு ]

அய்யங்கார் :அதான்ப்பா தீர்த்தம் -  

திருப்பதி “சாமி  கம்பெனி பாட்டிலா , லோக்கல் போதுமா”?

ஐயங்கார் "லோக்கல் உடம்புக்கு ஆகாது"[மனதில் எதிர்பார்ப்பு பிஸிலேரி /டாடா ] கம்பெனியே தேவலை   

 திருப்பதி -  டாஸ்மாக் தீர்த்தம் தானே? 

ஐயங்கார்: “கடன்காரா அபிஷ்ட்டூ , வாய அலம்பிண்டு வா , டாஸ்மாக்குங்கறியே -பாவி என்று கூச்சல் போட்டு,  திருப்பதி அதிர்ந்தார்.

ஒரு வழியாக கம்பெனி பையன்  சூச்சு எனும் சுதர்சன் ஒரு மினெரல் வாட்டர்  பாட்டில் கொண்டு வந்தான் [சூச்சு ஐயர் -ஐயங்கார் ஹைபிரிட் ] அவனுக்கு பட்டு ஐயங்கார் கேட்பது புரிந்து விட்டது.

தாக சாந்தி ஆனதும் ஐயங்கார் கொதிநிலையில் இருந்து ரூம் டெம்பரேச்சர் க்கு வந்தார்.

வீரபத்திரன் ஒரு காகிதத்தில்-- கண்ணதாசனின் பாடலை  எழுதியிருந்ததை கொடுத்தார் .

கையில் இருந்த காகிதத்தை படித்தார்

மனதினுள் –“சாஹித்யம் நன்னாருக்கு ஆனா வார்த்தை தான் சித்த சரியில்லைஎன்று கண்ணதாசனின் தமிழை தனது சமஸ்க்ரித ஞானம் கொண்டு உள்ளூர விமரிசித்தார் .

அங்கங்கே இடைச்செருகலாக திருத்தங்களை செய்தார்.

பாடல்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

சாந்தி உன் நெஞ்சில் நிலவட்டுமே

:அந்த தூக்கமும்  சாந்தியும்

 

நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன்

என்றும் கூடவே யிருப்பேன்

 

 

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

சாந்தி உன் நெஞ்சில் நிலவட்டுமே

 

காலையில் நான் ஓர் கனவு[or சொப்பனம் ]  கண்டேன்

அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்

கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே

கண்களிலே... கண்களிலே

 

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

சாந்தி உன் நெஞ்சில் நிலவட்டுமே

 

மனமென்னும் திரு மாளிகை திறந்திருக்க

மைஇழுதின  கண்கள் சிவந்திருக்க

இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி

யாஜகம் கேட்டேன் உன்னிடமே நான் உன்னிடமே

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

குழந்தை போலே

தவழ்ந்து வந்தேன் நான் யாஜகம் கேட்டேன் உன்னிடமே

நான் யாஜகம் கேட்டேன் உன்னிடமே நான் உன்னிடமே

 

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

சாந்தி உன் நெஞ்சில் நிலவட்டுமே

:அந்த தூக்கமும் சாந்தியும்

நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன்

என்றும் கூடவே இருப்பேன்

[துணை இருப்பேன் என்பதை மாற்றிவிட்டார்]

 

 

ஆஹஹா ஹா ஹாஹா ஆஹஹா ஹா...

ஆஹாஹஹா ஹாஹா ஆஹஹா ஹா...

 

அய்யங்கார் மனம் குளிர தனக்கே உரிய பாரம்பரிய சொல்லாடலில் பாடலில் ஆங்காங்கே மாறுதல்களை செய்தார் , அவை வேறு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன,

வீரபத்திரன் கோபம் கொண்டார் பாட்டு எளுதாம , திருத்திக்கிட்டு இருக்காரே என்று திருப்பதிக்கு ஏகத்தாறாக வசவு, என்னமோ வாலி சுக்ரீவன்னு ஏதோ சொன்னியே , இது பெரிய அனுமாரை போல் இஷ்டத்துக்கு வேலை பண்ணுது. போதும் போகச்சொல்லு உங்க ஆளை  என்று அலறினார்.தெம்பை வரவழைத்துக்கொண்ட திருப்பதி, நைசாக அய்யங்காரை காரில் ஏற்றி டிரைவரிடம் வீட்டில் விட சொல்லி அனுப்பிவிட்டார்.

காரில்ஏறிய ஐயங்கார் : “நேக்கு payment” ? 

திருப்பதி –“இப்ப ஏதாவது கேட்டா எனக்கு pavement வாழ்க்கைதான்,  பின்னால ஏற்பாடு பண்றேன்”. என்று கம்பெனிக்குள் ஓடி, மீண்டும் வீரபத்ரன் வசை மாறி பொழிந்து திருப்பதியை வெண்ணை காய்ச்சுவது போல் காய்ச்சிவிட்டார்.

சுரத்தில்லாமல் வீடு திரும்பிய பட்டு ஐயங்காரின் முகத்தைப்பார்த்த வஞ்சுளம் குஷியானாள் . நான் சொன்னேனே அஷ்டமத்து சமாச்சாரம் னு , இப்ப ஒரு மாதிரி துவண்டு இருக்காப்ல தெரியறதே ? எங்க உங்க சினிமா டைரக்டர் -திருப்பதி , திருத்தணி இவங்கெல்லாம் ?                                           அவருக்கு ஏக வேலை அதுனால என்ன கார்ல அனுப்பிவிட்டுட்டார்.

சரி ஒரு பாட்டுல;யே  6 மாசம் னு ஏதோ காதுல விழுந்ததே ?  முகத்தைப்பார்த்தா 6 மாசம் இல்ல நிறை மாசமா துவண்டு இருக்கே..

வாத்யார் வேலை பாத்து என்ன பலன்; சினிமா டிராமாவெல்லாம் போய் பாத்துட்டு வரலாமே தவிர , “பாட்டு எழுதறேன், கதை எழுதறேன், அதை எழுதறேன், இதை எழுதறேன் னு கிளம்பினா பாட்டு வாங்கிக்கட்டிண்டு வரவேண்டியது தான்.         உங்களுக்கு தமிழே தடுமாறும் இதுல எங்கேந்து பாட்டு?. நம்ம தமிழை வெச்சுண்டு இப்ப இருக்கற தையா தக்கா பாட்டு கூட எழுத வராது.. 

“வஞ்சுளமே வஞ்சுளமேக்கெல்லாம் காலணா கூட எவனும் தரமாட்டான். போய் தீர்த்தமாடிட்டு ரெஸ்ட் எடுங்கோ 3.30 மணிக்கு காபி தரேன் என்று வஞ்சுளம் வஞ்சம் தீர்த்தாள்.

ஐயங்காருக்கு குப் என்று வியர்த்து , கண்டிப்பாக தீர்த்தமாட வேண்டிய நிலையே. குறையின்றி வேறில்லை கோவிந்தா என்று குளியறையில் தஞ்சம் புகுந்தார் பட்டாபி, BSc .BT .                                                        PS எனும் பின் குறிப்பு : ஐயங்கார் பேசிய அனைத்தையும் மூக்கினால் பேசிப்பாருங்கள் அந்த கதாபாத்திரம் [character] நன்கு வெளிப்படும்.                  நிறைவு                    நன்றி       ராமன்                                                       

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...