TEACHER BEYOND YOUR IMAGE-23
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-23
அன்பர்களே
இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந்த அனுபகுமுறைகள் யாவை என்பனவற்றை நேரடி அனுபவத்தின் வழியே செயல் முறைப்படுத்தி, எவை எவை ஆசிரியரின் பிம்பத்தை மேம்படுத்தும் மற்றும் நெடுங்கால பெருமைக்கு உதவும் என்பன பல கட்டங்களில், பல சூழல்களை க்கருத்தில் கொண்டு தெரிவித்திருந்தேன்.
அவை அனைத்தும், பாடங்களை கற்பிப்பிப்பதில் முன்னெடுக்க வேண்டிய செயல் முறைகள். உடனே சிலர் கொந்தளிக்கலாம். எல்லாமே நீ சொல்வதுபோல் தான் செய்ய வேண்டுமா ?நான் ஒரு வழிமுறையை . மேற்கொள்ளக்கூடாதா? எனலாம். செயல் முறைகள் அவரவர்க்கு உகந்த முறையில் இருப்பதில் தவறில்லை; ஆனால், இலக்கும் இறுதி வெற்றியும் அனைவர்க்கும் ஒன்று தான்.
"நான் நல்லாசிரியர் "என்ற போற்றுதலைப்பெருவேன் என்பதில், எவரும் வேறுபடுவதில்லை. ஆனால் வேற்றுமைகள் நமது செயல் முறையில் புகுந்து விட நாம் பிறரை அடையாளப்படுத்தி செயல் முறையில் தவறுகளை தொடர்ந்து செய்துவிட பயில்வோர் நம்மையும் பத்தோடு பதினொன்றாக பார்க்கத்தலைப்படுகின்றனர். அந்த அவப்பெயர், உருவாகாமல் தற்காப்பது அல்லது அதை முற்றாக களைவதற்கான செயல்வடிவங்களை மாற்றி அமைத்துக்கொள்ளுதல், நல்ல பலன் தரும். ஆம் பயில்வோரைப்பொறுத்தவரை, நீங்கள் ஆசிரியராக, அவர்களுக்கு அளித்த பயிற்சியும், . அதனால் அவர்கள் பெற்ற நற்பலன் களும் தான் அவர்கள் மனங்களில் முன்னிலை கொள்ளும்.
மாறாக நீங்கள் நகைச்சுவையாக பேசுவதெல்லாம் அவர்களை ஈர்த்து இருத்திக்கொள்ள உதவாது. எனவே, உங்களின் கற்பிக்கும் திறனும் அணுகுமுறையும் தான் உங்களை நல்லாசிரியராக இனம் காட்டும். நல்லாசிரியர் என்பவர் போதித்தலில் மட்டும் இல்லாமல்,பிற ஆளுமைப்பண்புகளை படிப்படியாக செவ்வனே நிறைவேற்ற, யாரும் உங்களின் பங்களிப்பினை மறுக்க இயலாது. எனவே ஒவ்வொரு தேவைக்கும் உங்களின் செயல் --கருத்து விளக்கம் பயனுள்ள அணுகுமுறை, இரண்டையும் கொண்டிருந்தால் , காலப்போக்கில் நீங்கள் விலக்கவொண்ணாத -முக்கிய நபர் ஆவது உறுதி, அதுவும் ஒரு ஆசிரியரின் பிம்பத்திற்கு மிக இன்றியமையாத்தேவை. இது உங்களின் சமுதாய அங்கீகாரத்தை வலுப்படுத்தும்.
அவற்றிற்கான சில விவரங்களை பார்ப்போம்.
ஆசிரியரின் பேதமில்லா நிலைப்பாடு
பயில்வோர் அனைவரையும் ஒரே மாதிரி கையாளுவது ஆசிரியரின் சார்பு/ பேதம் இல்லாத தன்மைக்கு செயல் உத்திரவாதம் ஆகும். அதாவது எனக்கு தெரிந்தவன், வேண்டியவன், உறவினன், ஊர்க்காரன் எந்த அடையாளமும் குறிப்பிட்ட ஆசிரியர் -பயில்வோர் இடையே ஏற்படாமல் இயங்குதல் ஆசிரிய பிம்பத்தை சிறப்பாக வலுப்படுத்தும். இது உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து பார்க்கும் பயில்வோரினால் மிக எளிதில் கண்காணிக்கப்படும். நீங்கள் சொல்வதும் செய்வதும் முரண்படுமாயின் , உங்கள் உருவம் போலியானது என்று எளிதில் நிர்ணயிக்கப்பட்டு , ஊர் உலகமெங்கும் விரைவாகபரப்பப்படும். அதன் பின்னர், உங்களது வகுப்பில் நீங்கள் யாரிடம் பாசப்பார்வை செலுத்துகிறீர்கள் என்பது இருபாலர் அமைப்பிலும் ஊன்றிகவனிக்கப்படும். இதனால், நீங்கள் நம்பகத்தன்மை அற்ற வேடதாரி என்றே புரிந்துகொள்ளப்படுவீர்கள்.
இது
போன்ற விமரிசனங்கள் எழாமல் காத்துக்கொள்ளுதல் நன்று, ஏனெனில் பின்னர் அதை சரி செய்தல் எளிதன்று. அதனால் தான் ஆங்கில வாசகம் "The first impression is the best
impression" ஆச்சிரியர்களுக்கு பலமாகப்பொருந்தும்.
அதனால் தான் முதல் வகுப்பிலேயே தொய்வில்லாமல் பாடப்பகுதியை விரிவாக விளக்குதல் உங்கள் மீது பெரும் கவனமும் , ஈர்ப்பும் எழ உதவும். ஆனால் இந்த அணுகுமுறை new broom
sweeps well போல அமைந்திட [அதாவது புதிய துடைப்பம் [விளக்குமார்] நன்கு சுத்தம் செய்யும் ]என்பது போல் மெல்ல மெல்ல வலுவிழந்து 'இவரும் அப்படித்தான்' என்ற நிலைக்கு பயில்வோர் வந்து விடாமல் கட்டிக்காக்க உங்கள் கவனம் முற்றாக போதித்தலில் சீராக இருத்தல் உங்களைப்பற்றிய நல்லெண்ணத்தை வலுவாக கட்டமைக்கும் .
இதை மேலும் செவ்வனே நிறுவிட , விடைத்தாள் மதிப்பீடு உண்மையிலேயே உங்களின் சார்பற்ற நிலைப்பாட்டினை பறைசாற்ற உதவும் . ஆம் தேவையில்லாமல் முழு மதிப்பெண் வழங்குதல் , ஆசிரியர் விடைகளை படிப்பதில்லை அல்லது அவருக்கே விடை தெரியாது ,எனக்கும் அவனுக்கும் ஒரே மதிப்பீடு செய்துள்ளார் [அதாவது மறைமுகமாக ஒருவனுக்கு உதவி செய்கிறார் அல்லது என்னை வஞ்சித்துவிட்டார் அவளுக்கு கோயில் பிரசாதம் போல அள்ளி வழங்குகிறார் , பெண்களைக்கண்டால் ஜொள்ளு விடுகிறார் என்ற கடும் விமரிசனங்களை தவிர்க்கவோ, தகர்க்கவோ இயலாமல் சூழ்நிலைக்கைதி ஆகி விடுவது சர்வ நிச்சயம். பல ஆசிரியர்கள் பாரி வள்ளலென மார்க்குகளை வாரி வழங்கிவிட்டால் மாணவர்களிடம் நன் மதிப்பு பெறலாம் என மனப்பால் குடிப்பது நம்மை விட பயில்வோருக்கு நன்றாகவே தெரியும். அப்போது பயில்வோர் பேசுவது என்ன தெரியுமா , நான் ஒவ்வொரு டெஸ்டிலும் முதல் மதிப்பெண் வாங்கியுள்ளேன், இப்போது வகுப்புக்கும் டெஸ்டுக்கும் வாராத அந்த 3 பேருக்கும் எனக்கும் ஒரே மார்க் , இவர் ஒழுங்காக விடைத்தாள்களை படிப்பது கிடையாது எனவே எதற்கு உட்கார்ந்து முட்டிமோதிப்படிக்கவேண்டும்
? ஹி
ஹி
ஹி
என்று கூழைக்கும்பிடு போட்டால் போதும் போலும் என்று சற்று முயன்று பயின்றிட முயன்றோரை ஒரே இரவில் உங்களை வெறுக்கத்தக்க மனிதராக மாற்றி ய /மாற்றும் பெருமை பாரிவள்ளல்களையே சாரும். அதன் பின்னர் உங்களிடம் பயில்வதைவிட, மெயில் தொடர்பு கொள்ளுதல் பரவலாகும், அதோடு BLACK MAIL உத்திகள் வெகு சிறப்பாக அரங்கேற்றப்படும். அதனால் தான் எந்த நிலையிலும் நடுநிலை விலகாமல், போதிப்பதை கடமையென முற்றாக செய்தால் நீங்கள் பெரும் மரியாதையுடன் கம்பீரமாக உலாவலாம்.
பிற விளக்கங்கள் -பின்னர்.
நன்றி
அன்பன் ராமன் .
No comments:
Post a Comment