Wednesday, November 13, 2024

MUSIC DIRECTOR R. DEVARAJAN

 MUSIC DIRECTOR  .  DEVARAJAN

இசை அமைப்பாளர்   தேவராஜன்

திரு ஆர் தேவராஜன் அவர்கள் கேரள மாநிலத்தவர் . ஆரம்ப காலத்தில் தென்னிந் திய மொழிப்படங்கள் அனைத்துமே சென்னையில் தயாரித்து வெளிவந்தன.எனவே மொழி வேறுபாடு இன்றி கலைஞர்கள் வெவ்வேறு மொழிப்படங்களில் பணி புரிந்துவந்தனர். அது ஓர்  நற்காலம் . அப்படித்தான் வேற்று மொழியினர் தமிழில் இசை அமைத்த வரலாறு உண்டு. அதில் ஒருவர் தான் தேவராஜன். அவரின் சில தமிழ் ஆக்கங்களை  காண்போம்

நீலக்கடலின் ஓரத்தில் [அன்னை வேளாங்கண்ணி ]1971 , பாடல் அய்யாசாமி, இசை தேவராஜன் குரல்கள் டி எம் எஸ் மற்றும் மாதுரி*

இப்பாடலும் காட்சியும் வெகு அமைதியான அமைப்பில் கேட்கக்கேட்க ரசனை மேம்படும் . தேவராஜன்  கை தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை ராக அமைப்பிலும் குரல் நிர்வாகத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். இது எந்த நடிகரின் முகமும் இல்லாத         னால் வெற்றிப்பாடல் , வானொலியில் அநேக நாட்கள் ஒலித்த பாடல் பாடலின் மையப்புள்ளி வேளாங்கண்ணி என்ற ஊர் குறித்தது . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

Neelakkadalin Oratthil - Annai Velankanni neelakkadalin  g devarajan tms madhuri 

வானமெனும் வீ தியிலே [அன்னை வேளாங்கண்ணி]1971`  பாடல் வாலி         இசை தேவராஜன், குரல் கேஜே ஜேசுதாஸ் , மாதுரி *

மீண்டும் ஒரு அற்புதமான பாடல், இதில் காதல் உணர்வுகள் இருப்பினும் ஆங்காங்கே மதம் சார்ந்த தேவ கருத்துகளும் ஊடாடி வருவதால் மாறுபட்ட கவிதை இசை, குரல் நடிப்பு [ஜெமினி, ஜெயலலிதா ] என          எல்லா ப்பரிமாணங்களும் கொண்ட ஒரு நிறைவான பாடல். காட்சி அமைப்பும் சிறப்பாகவே உள்ளது. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ:

Vaanamennum Veedhiyile Song HD | Annai Velankanni - YouTube vanamenum veedhiyile g devarajan  kj j madhuri

வாடி தோழி [துலாபாரம், 1969] கண்ணதாசன்  தேவராஜன் குரல் கள் பி சுசீலா B .வசந்தா

அந்நாளைய மரபில் தோழியர் குதூகலிக்கும் /கிண்டல் பேசும் பாடல். நல்ல இசை அமைய்ப்பும் குரல் தேர்வும் பாடலுக்கு வலு சேர்த்தன, எப்போது கேட்டாலும் இளமை மாறாத நயம் கொண்ட இசை அமைப்பு. பாடல் இருவரின் நெருக்கம் [அன்னியோன்யம்] வெளிப்படும் சொல்லாடல் , இசை நளினம் கொண்ட பாடல் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=vaadi+thozhi+kathanayagi+video+song+for+thulabaram+tamil&newwindow=1&sca_esv=9c429154c95b1c4b&sxsrf=ADLYWILGWtuv4Mj0DGOFDkmMhnArsmgdtA%3A1730956037479&ei=BUssZ4fvHO2Ug8UPqp_muAc&oq=vaadi+thozhi+kadhaanaayagi+video+song+fro+thulabaram+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiNXZhYWRpIHRob3poaSBrYWRoYWFuYWF5YWdpIHZpZGVvIHNvbmcgZnJvIHRodWxhYmFyYW0gKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCki2ggJQAFi35wFwAngBkAEAmAHOAaABxziqAQYxLjUyLjG4AQHIAQD vadi thozhi  thula baram\1969 kd , g devarajan , pd, b vasantha

சங்கம் வளர்த்த தமிழ் [ துலாபாரம் 1969] கண்ணதாசன் , தேவராஜன், குரல்கள் டி எம் எஸ், பி சுசீலா

வெகு கவனமாக வடிவமைக்கப்பெற்றுள்ள பாடல் , தேவைக்கேற்ப ட்யூன் மாறுவது இசை அமைப்பின் மேன்மை மற்றும் திறமை பளிச்சிடும் தருணங்கள்காட்சியில் முத்துராமன், காஞ்சனா, சாரதா உற்ற நடிப்புவழங்கியுள்ளனர். அந்நாளில் பிரபலமான பாடல் ,கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=sangam+valarththa+thamizh++video+song+for+thulabaram+tamil&newwindow=1&sca_esv=9c429154c95b1c4b&sxsrf=ADLYWIJla99hhaLchLbzEz1IJ7Uf9nGDHg%3A1730956213417&ei=tUssZ5aSGZaa4-EP9PS0iA0&ved=0ahUKEwjWwOOxusmJAxUWzTgGHXQ6DdEQ4dUDCA8&oq=sangam+valarththa+thamizh++video sangam valarththa thamizh kd g decvarajan, tms ps

* இன்றைய பதிவில், மாதுரி என்னும் பாடகியின் குரலில் வெளிவந்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன. யார் இவர்?. மாதுரி தமிழ்நாட்டவர் [திருச்சி ], தாய் மொழி தமிழ். , அந்தண பிரிவினர்.. இசை அமைப்பாளர்-- தேவராஜனால் அடையாளம் காணப்பட்டவர். மலையாள திரையில் எண்ணற்ற பாடல்களை தேவராஜன் மாஸ்டர் இசையில் பாடியுள்ளார். அவருக்காக தமிழில் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.

தொடரும்

நன்றி                            அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...