Thursday, November 7, 2024

MUSIC DIRECTOR T R PAAPPA -2

 MUSIC DIRECTOR T R PAAPPA -2

இசை அமைப்பாளர்  டி ஆர் பாப்பா -2

சூடிக்கொடுத்தவள் நான் தோழி [டீச்சரம்மா 1968] கண்ணதாசன் டி ஆர் பாப்பா , குரல் பி சுசீலா

இது போன்ற சூழ்நிலைப்பாடல்கள் பழைய படங்களில் ஏராளம் ; இப்பொப்படல் இரு தோழியர்களில் ஒருத்தி விட்டுக்கொடுத்த காதல் குறித்தது என புரிகிறது. கண்ணதாசனின் ஆண்டாள் , மீரா குறித்த பூடக வர்ணனை உணர்த்த  வந்ததை தெளிவாகச்சொல்ல, மிக மென்மையான இசை கொண்டு திரு பாப்பா அவர்கள் நல்ல பாவங்களுடன் பாட வைத்துள்ளார். கேட்டு ரசிக்க இணைப்பு, இதோ

https://www.google.com/search?q=tamil+movie++TEACHERAMMA+SOODIKKODUTHTHAVAL+NAAN+THOZHI++VFIDEO+SONG+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWIKefdataQ4o9cJOrLkL-y0HZxFKeQ%3A1729737060810&

மற்றுமோர் சிறப்பான தத்துவப்பாடல்

இறைவன் என்றொரு கவிஞன் [ ஏன் -1970]  கண்ணதாசன் , டி ஆர் பாப்பா குரல் எஸ் பி பாலசுப்ரமணியன்

இன்னமும் தெலுங்கு வாடை முற்றாக விலகாத நிலையில் எஸ் பி பி பாடியது இறைவன் என்ற சொல்லை உச்சரிக்கும் போது லேசாக காட்டிக்கொடுக்கிறது அவரது தெலுங்கு பின்னணி.. மற்றபடி குறை சொல்ல இடம் இல்லை. பாவங்களும் ஓங்கி உயர்ந்த ஒலி யில் பாடியிருப்பதும்   நல்ல அம்சங்கள். மீண்டும் டீ ஆர் பாப்பா அழகாக உருவாக்கியுள்ளதை ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=IRAIVAN+ENDRORU+KAVIGNAN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWILPvjdr9NmMYjP2Tbvlegr6xjsAHw%3A1729739279818&ei=D7oZZ66_Me-N4-EP8qGF6AU&ved=0ahUKEwjugs_6hKaJAxX YEN 1970  KD TRP SPB

வெண்ணிலா நேரத்திலே [அவசர கல்யாணம் - 19 72 ] கண்ணதாசன் டி ஆர் பாப்பா , பி சுசீலா

கண்ணதாசனின் வினோத கானம் , கண்ணன் கருப்பொருள் /கருப்புப்பொருள் என்று அவ்வப்போது உருமாறும் வினோதம் பாடல் , இறுதிவரை விலகியே நின்று பாடும் காதலி ; முடிவில் வீழ்ந்தது பறவை எனும் நிலை. நல்ல ரம்யமான குழைவான இசை , பாப்பாவின் கற்பனையில் . கேட்டு மகிழ இணைப்பு இதோ https://www.google.com/search?q=VENNILA+NERATHTHILE+VENU+GAANAM++VIDEO+SONG&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWIKrN1DjuoGC0RM03i0OW0Ow5-bqQQ%3A1729739539032&ei=E7sZZ9XSAfO74-EP_L--oQU&ved=0ahUKEwiVqJz2haaJAxXz3TgGHfyfL1QQ4dUDCA8&oq=VEN

மற்றுமோர் சுவையான பாடல்

ஏடி பூங்கொடி [மறு பிறவி -1971 ] கண்ணதாசன் டி ஆர் பாப்பா , குரல் எம் ஆர் விஜயா

ஆம் மிகவும் நளினமான பாடல் ரேடியோவில் நாளும் முழங்கிய பாடல் எம் ஆர் விஜயா அவர்களின் குரலில் ; வெகு நேர்த்தியான ராக அமைப்பு , காட்சி , நடிப்பு என பல்வேறு ஈர்ப்புகள் கொண்ட பாடல். இளம் பெண் மஞ்சுளா , கண்ணியவான் முத்துராமன் அவரின் நாடக ஆசான் எஸ் வி சஹஸ்ரநாமம் என்று தேர்ந்த கலைஞர்கள் மத்தியில் மேடைப்பாடலாக ஒலித்து வசீகரிக்கும் பாடல் . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=AEDI+POONGODI+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWII5GTDdPG81wvHx5SwUB6-fFKc4xA%3A1729740279891&ei=970ZZ4SJNvuL4-EPqaeq6Ak&ved=0ahUKEwjE4L7XiKaJAxX7xTgGH MARU PIRAVI AEDI POONGODI KD TR P MR VIJAYA MUTHURAMAN’S GESTURE /SAHASRANAAMAM

இரு மாங்கனி போல் [ வைரம் -1974]கண்ணதாசன் , டி ஆர் பாப்பா  எஸ் பி பாலசுப்ரமணியன் , ஜெயலலிதா

மாறுபட்ட இசைக்கோலம் வழங்கியுள்ளார் திரு பாப்பா அவர்கள் . பொதுவான அமைப்பில் இந்திப்பாடல் போல் தோன்றினாலும் இது இரவல் அல்ல. இசை அமைப்பாளரின் கற்பனை மேலிடுகிறது எஸ் பி பி மற்றும் ஜெயலலிதா [ஆம் நடிகை JJ தான்] வெகு சிறப்பாக பாவங்களுடன் பாடிய ஒரு ரொமான்டிக் வியப்பு. அருமையான தாளக்கட்டுகள் , குழல் இசை என பல பரிமாணங்களின் தொகுப்பு இது. கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=tamil+movie+vAIRamiru+mangani+pol+vdeo+song+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWIKmx0P0omSfagpSJXRe5fVnjp188A%3A1729736640863&ei=wK8ZZ7uxNOGI4-EP8t-xiAc&ved=0ahUKEwi7  vairam 1974    KD trp spb jayalalitha

சிறந்த இசை அமைப்பாளர்கள் வரிசையில் நிச்சயம் பாப்பாவும் ஒருவர்

 

நன்றி 

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...