Tuesday, November 5, 2024

TM SOUNDARARAJAN –28

 TM SOUNDARARAJAN –28

டி எம் சௌந்தரராஜன்-28

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் [பிராப்தம் -1971] கண்ணதாசன்                   எம் எஸ் வி , டி எம் எஸ், பி எஸ்

வெகு நேர்த்தியான மென்மையான சூழலில் அமைந்த இயல்பான பாடல். ட்யூன் எனப்படும் பாடப்படும் முறையில் எத்துணையோ வகைகள் தான் எம் எஸ் வி களப் படுத்தியுள்ளார்  . அது அவ்வப்போது ஒரு சொல்லுக்காக வளைத்து நெளித்துப்பாடும் போ மேலும் அழகு பெறுவது அது இப்பாடலின் தனிச்சிறப்பு. பாடல் நிறைவுறும்போது இரு குரல்களும் ஹம்மிங்கில் ஜோடியாக பயணித்த அழகு அந்நாளைய புதுமை. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=DJgfD_sGCog PRAPTHAM [1971] SONTHAM EPPOTHUM  KD MSV TMS PS

நான் ஒரு மேடைப்பாடகன் [நாளை நமதே- 1975] வாலி , எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியன், டி எம் எஸ்       எல் ஆர் ஈஸ்வரி 

இது துடுக்கும் துடிப்பும் நிறைந்த க்ளப் வகைப்பாடல். பாடகர்களின் குரல் சாம்ராஜ்யம் ஒரு புறம்,. எம் எஸ் வியின் இசைக்கருவிகளின் வெகு துடிப்பான மிரட்டல் ஒரு புறம்.

இது போன்ற இசை குவியல்கள் இனி கேட்க வாய்ப்பில்லை. அதற்கேற்ற கவிதையில் வாலியின் குறும்பு விளையாட்டு ஒரு புரேம் என நல்ல துடிப்பான பாடல் , கேட்டு மகிழ இணைப்பு 

https://www.google.com/search?q=NAAN+ORU+MEDAI+PPAADAGAN+VIDEO&oq=NAAN+ORU+MEDAI+PPAADAGAN+VIDEO+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKAB0gEJMjQ0OTd NALAI NAMADHE VALI MSV SPB TMS LRE

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் [ நம்  நாடு -1969] வாலி எம் எஸ் வி, டி எம் எஸ்,                 

 எல் ஆர் ஈஸ்வரி

இது அச்சு அசல் எம் ஜியார் வகை பிரகடனப்பாடல். அதற்கேற்ற சொல்கோர்வை , அசுரர் இசை கிட்டார் ,    ட்ரம் பெட், போங்கோ ட்ரம் என அசுரக்கூட்டம் , தலைமை அசுரன் எம் ஸ் வி யின் ஆதிக்கம் பாடல் முழுவதிலும், . வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஈஸ்வரியின் பளீர் ஒலியும் , டி எம் எஸ்ஸின் கம்பீர மொழியும் , பாடல் வந்த அன்று காட்டிய போர் குணம் மங்காமல் இன்றும் மின்னும் 55 வயது அற்புதம் இப்பாடல் . கேட்டு பிரமிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=NINAITHTHADHAI+NADATHTHIYE+VIDEO+SONG&oq=NINAITHTHADHAI+NADATHTHIYE+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKAB0g NAM NADU 1969 VALI MSV TMS LRE

துள்ளுவதோ இளமை[ குடியிருந்த கோயில்- 1968] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ்  எல் ஆர் ஈஸ்வரி

 கம்பீரமும்  எதற்கும் துணி ந்த வகைப்பெண்ணின் அலட்சியமும் கொப்பளிக்க பாடுவதில் இன்றளவும் எல் ஆர் ஈஸ்வரிக்கு நிகர் வேறு எவர்? அதிலும் அந்த பின் அறுபதுகளில், மேற்கத்திய இசையின் அனைத்து திவ்ய ஜாலங்களும் தமிழ் திரையில் மின்ன விட்ட பெரும் ஆளுமைகளின் ஆதிக்கக்கூடாரமன்றோஅன்றைய  தமிழ் சினிமா?

அவ்வகை இசை அமைப்பின் ஒரு சிறிய விளிம்பைக்கூட எட்டி தொடமுடியாமல் திக்கித்திணறும் இன்றைய நிலை பற்றி பேசாமல் விடுதல் நம் உடல் நலத்திற்கு உகந்தது.. இப்பாடலில் எண்ணற்ற ஒலி க்கலவைகள், கருவிகளின் நுண்ணிய கம்பீரம் , எண்ணியபடியெல்லாம் பாடும் குரல்கள் என அபைத்தும் ஒரே பாடலில் சங்கமித்தால் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும்  , ஏன் ரசிகர்களுக்கும் கூட கொண்டாட்டம் தான். அப்படியோர் கொண்டாட்டம் இதோ

https://www.google.com/search?q=thulluvadho+ilamai+1968+video+songs+download&newwindow=1&sca_esv=439ed1f28d78315f&sxsrf=ADLYWIKvttQZqh1bFs_7EQw3zJ5ZhSRXlQ%3A1730344523552&ei=S_YiZ--vIY2D4-EP4KLCsAI&oq=thulluvadho+ilam

மிரளும் பல அதிர்வுகளை, மேலும் நினைவு கொண்டு மகிழ்வோம்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...