Tuesday, November 5, 2024

OLD MOVIE SONGS -9

 OLD  MOVIE SONGS -9

PIANO FOR IMPACT +SINGING STYLES -2

பியானோ ஒரு இசைக்கருவியா /போர்க்கருவியா?

இதென்ன கேள்வி என்கிறீர்களா? எம் எஸ் விஸ்வநாதனைப்பொறுத்தவரை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, புல் , புல்லாங்குழல், மூங்கில் , மரம் அறுக்கும் ரம்பம், உப்புக்காகிதம் [உப்புத்தாள் /sandpaper ] கொட்டாங்கச்சி [தேங்காய் ஓடு ] தீபாவளி கேப் , வாய், விரல், உள்ளங்கை [முத்தம் ] என எண்ணிலடங்கா பொருட் கள் அன்றாட வாழ்வில் நாம் உதாசீனம் செய்பவை என அனைத்திற்கும் இசையில் பங்களிக்கும் வல்லமை உண்டு என தொடர்ந்து நிரூபித்தவர். ஆனால் இன்றைய பதிவு இன்னமும் பியானோவைச்சுற்றியே வருகிறது; ஆனாலும் ஒரு பாடல் போல் இன்னொன்று இல்லை , உணர்விலோ , சூழலிலோ சிறிதும் ஒற்றுமை இல்லை எனினும் ஒவ்வொரு நிலையிலும் கேட்பதற்கு மிகவும் நளினம் -அதிலும் பியானோ வை மிகச்சிறந்த கருவியாக பலமுறை காட்சிப்படுத்தியுள்ளார் எம் எஸ் வி.   

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் [சுமைதாங்கி -1962] கண்ணதாசன் , வி, ரா , பி பி ஸ்ரீனிவாஸ்

அதியற்புதமான தியாகி , மனிதன் தியாகம் செய்யவே அவதரித்துள்ளான் என்று சொல்லாமல் சொல்லும் காட்சி. தியாக உருவமாக அண்ணல் காந்தி மெரினா கடற்கரையில், பாடல் துவங்க, பாடல் எங்கே துவங்குகிறது? பியானோ தான் டண்டணன் டண்டண டண்டணஎன்று களம் அமைக்க மனிதன் என்பவன் என்று அமைதியாக துவங்கி தெய்வமாகலாம் என்று சொல்லி ம்ஹும் ம்ஹும் ம் ஹுஹு என்று விரக்தி சிரிப்புடன் கிளம்ப கருவிகள் ஒவ்வொன்றாக சேர்ந்துகொள்ள மனதில் இறுக்கமும் உணர்வில் இளக்கமும் பின்ன பல்லவி தாளம் இன்றியே பயணித்து பின்னர் சரணத்தில் தபலா ஒலிக்க , த்யாகமானம் பேசுவதை உணர்கிறோம் காட்சியில் 8 கார்கள் அவற்றில் 7 கவி அரசருக்கு சொந்தம். அப்படி கோலோச்சியும் பாடல் த்யாகத்தின் பரிணாமங்களை பறை சாற்ற -மிகவும் ஆறுதல் வழங்கும் பாடல் 

"மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழி இருந்தால் கடுகுக்குள்ளே .மலையைக்காணலாம் , துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தங்கலாம்" என்று தன்னையே தேற்றிக்கொண்டு  தியாகத்தின் மேன்மையை  பட்டியலிட்ட நாயகன். இரவு காட்சி -உண்மையிலேயே இரவு படப்பிடிப்பு அன்றைய அமைதிப்பீடம் மெரினா. பாடல் நெடுகிலும் பியானோ பயணிக்கிறது ஒரு மனம் கனத்த மனிதனின் குரலுடன். கேட்கக்கேட்க நமது மனம் அமைதி கொள்ளும் வகை இசை தொகுப்பு, பியானோ வயோலா ஒலிக்கலவையில் . என்றும் மன வளம் நல்கும் இசை/கவிதை. கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=manidhan+enbavan+video+song&oq=manidhan+enbavan+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIKCAEQABgIGA0YHjIKCAIQABiABBiiBNIBCTE3NTU0ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:adc4aa59,vid:6Eg20JQwGYY,st:0 sumai thangi kd v r pbs

மற்றுமோர் பியானோ ஆதிக்கம் -மார்க்கண்டேய வகை இசை அமைப்பு- சலிப்பு என்பதே தோன்றாத நளினம் இந்த 66 வயது ப்பாடலுக்கு.

ஆம், இது போல் பாடல்கள் நம் மனங்களில் நிழலாட, காலம் தள்ள வேண்டியது தான்.

இப்பாடல் ஒரு தகவல் சுரங்கம் மட்டும் அல்ல, அன்றைய கலைஞர்களின் அயராத உழைப்பிற்கு சான்று 

மதியம்  1.00 மணிக்கு துவங்கிய பாடல்  , நிறைவுறும் போது இரவு மணி 2.30. அவ்வளவு நேரமா இழுத்துக்கொண்டிருந்தார்கள்? இரவு 8.00 மணி அளவில் பாடல் பதிவின் போது இயக்குனர் ஸ்ரீதரைக்காண வில்லை. . எம் எஸ் விக்கு புரிந்து விட்டது- ஏதோ விபரீதமென்று.

ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு தேடிப்பார்த்தால் ஒரு மரத்தடியில் நகத்தைக்கடித்துக்கொண்டு ஸ்ரீதர்..   [ ஸ்ரீதருக்கு நகைச்சுவை , நகச்சுவை இரண்டும் அதிகம்].

என்ன ஸ்ரீ இங்க நிக்கிறீங்க,என்றார் எம் எஸ் வி. எனக்கு பாட்டு பிடிக்கலை நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ பண்ணிக்கிட்டிருக்கீங்க என்று ஒதுங்கிக்கொண்டு பேசினார் ஸ்ரீ .

சரி என்ன புடிக்கல? எம் எஸ் வி

எதுவுமே -ட்யூன் /ஆர்கஸ்ட்ரேஷன் எதுவும் எனக்கு புடிக்கல  -ஸ்ரீதர்.

இவ்வளவு தானே வாங்க மாத்திருவோம் என்று எம் எஸ் வி   ஸ்ரீ யை இழுத்துக்கொண்டு ஓடி , "சுசீலா   கொஞ்சம் உக்காருங்க வேற ட்யூன் ஆர்கஸ்ட்ரேஷன் எல்லாம் மாத்தித்தறேன் . என்றார் . சுசீலா மயக்கம் போடாத குறை ,

1.00 மணியில் இருந்து பயிற்சி செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு , புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு இந்த நிசியில் பாடவேண்டுமா? எம் எஸ் வி ஒரு விடாக்கண்டன் , பாட்டை முடிக்காமல் கிளம்ப மாட்டார் .

 எம் எஸ் வி க்கு ப்புரிந்து விட்டது ஸ்ரீதருக்கு பாட்டில் கும்மாளம் கொப்பளிக்க வேண்டும் சரி, பியானோவை செட் பண்ணி வைத்துவிட்டு இடை இசையில் பியானோ புகுந்து விளையாட, ட்ரம்,  போங்கோ, குழல் என அதி நவீன ரிதம்   உருவாக்கி சிருங்கார ரசம் கொப்பளிக்க ஒரு ட்யூனைப்பிடித்தார் . 20 நிமிடங்களில் பாடகர்/ ஆர்கெஸ்ட்ரா எல்லாம் ரெடி.

சுசீலா பின்னி எடுத்துவிட்டார் அவ்வளவு பாவம் , குழைவு மற்றும் குதூகலம் எல்லாம் காட்டி மிரட்ட இசைக்குழுவும் வெகு சிறப்பாக பங்களிக்க , ஒரு பாடல் உருவாக்க எவ்வளவு உழைப்பு அதுவும் நள்ளிரவு வரை. இது போன்ற விவரங்களை கேட்டு ரசிக்க 

தேடினேன் வந்தது [ஊட்டி வரை உறவு -1967] கண்ணதாசன்             எம் எஸ் வி, பி சுசீலா

 மேற்கத்திய வகை அமைப்பு பாடல் புடவை அணிந்த நாயகி கே ஆர் விஜயா . அந்த நாளில் இந்த புடவை பம்பாயில் இருந்து வாங்கினராம்விலை ரூ 2000/- என்று பெரிதும் பேசப்பட்டது . மேக் அப் தலை அலங்காரம் எல்லாம் கச்சிதமாக டிபிக்கல் ஸ்ரீதர் ஆதிக்கம். கவர்ச்சிக்கு குட்டைப்பாவாடை தேவை இல்லை என பாடல் , உடை , நடனம் அசைவு அனைத்திலும் சவால் விட்ட பாடல் கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=thedinen+vandhadhu+video+song&oq=thedinen+vandhadhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRifBdIBCTE4NzIwajBqNKgCALACAQ&so bongo piano drum, flute

அதே பாடல் " தேடினேன் வந்தது [ஊட்டி வரை  உறவு -1967]

இந்த[[பாடலை QFR குழுவினர் வழங்கியுள்ளனர் .மேலும் பல விளக்கங்களை சுபஸ்ரீ அவர்கள் தருகிறார். கூர்ந்துகவனியுங்கள் பல நல்ல தகவல்கள் அடங்கியுள்ளன. கேட்டு மகிழுங்கள் . இணைப்பு இதோ

https://www.google.com/search?q=thedinen+vandhadhu+qfr+video+song&newwindow=1&sca_esv=439ed1f28d78315f&sxsrf=ADLYWIK44Rc9147P4kQCCDQlVict26L82A%3A1730335431813&ei=x9IiZ_eoMYuY4-EPkPu5mQc&ved=0ahUKEwi3qIXmsbeJAxULzDgGHZB9LnMQ4dUDCA8&oq=t qfr

பாட்டொன்று தருவார் பாடடியம்மா [சர்வர் சுந்தரம் -1965] கண்ணதாசன் , வி ரா , சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

அன்றைய தமிழ் சினிமாவில் இது போன்ற தோழியர் கும்மாளம் ஏராளம். அது கூட ஒரு சமுதாயப்பிரதிபலிப்பு என்றே புரிந்து கொள்ளலாம். அன்றைய பணக்காரப்பெண்ணுக்கு எண்ணற்ற தோழிகள் இருப்பர்; இன்றும் உண்டு அனால் அன்று அவர்கள் முக்கியப்பெண்ணின் வீட்டில் கூடி குதூகலிப்பர் இப்போது போல் திரை அரங்குகள் ஆண்  நட்பு [boy friend ] இதெல்லாம் இருக்காது அப்படியே இருந்தாலும் பிறர் அறிய முடியாதவாறு பரம ரகசியமாக இருக்கும் [அதைத்தான் சமுதாயப்பிரதிபலிப்பு என்கிறேன்]  திருமணம் நடக்க இருப்பதனால் தோழிகள் தங்களின் தலைவியை கிண்டல் செய்து பாடுவதாகக்காட்சி. 

இதெல்லாம் கவிஞர் கண்ணதாசனுக்கு குளிர்ந்தநீர் குடிப்பது போல் எளிது, மனிதர் எவ்வளவு கருத்துகளை கௌரவமாக பேசுகிறார். புதுமணப்பெண் பகலில் உறங்குவாள் [பல அர்த்தம் பொதிந்த சொல்லாடல்வாசகம் "பகல் நேரத்திலே அரைத்தூக்கத்திலே] இது போல் பல இடங்கள் பாடலில் சிதறிக்கிடக்க, எம் எஸ் வி சும்மா விடுவாரா.

குதூகலம் தானே-- என்று பியானோவில் பாடலுக்கான பாவத்தை செதுக்கி யுள்ளார். பாடலின் இடை இசையில் மூட் [ mood ]என்னும் மனோநிலைக்கேற்ப பியானோ ஒலிக்க,  கேட்பவரையும் குதூகலம் தொற்றிக்கொள்ளும் , 

நடன நாரீமணிகள் பலரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான நடனக்கலைஞர்கள், சாந்தா நடன இயக்குனர் தங்கப்பனின் உதவியாளர் வேறு கேட்க வேண்டுமா? , ஒருகட்டத்தில் தலைவியின் புபடவையையே தோழிகள்  உருவிவிட, அவள் வேறு புடவை சுற்றிக்கொண்டு வருவது விரசமில்லாமால் படமாக்கியுள்ளனர் கிருஷ்ணன் பஞ்சு; அனைத்துமாக பாடலை நன்கு ரசிக்க முடிகிறது. பாடலுக்குக் கவிஞர் தாய் எனில் இசை அமைப்பாளர் தந்தை எனலாம் . 

இப்பாடல் பல மென்மையான உணர்வுகளை பியானோ மற்றும் தாளத்தின் மேன்மையால் உணர்த்துவதையும் நிறைவுப்பகுதியிலும் அவ்வப்போதும் வரும் ஹம்மிங்கும் கேட்பது தனி சுகம்.

கேட்டு மகிழ இணைப்பு  

https://www.google.com/search?q=paattonru+tharuvaar+padai+amma+video+song&oq=paattonru+tharuvaar+padai+amma+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigAdIBCTIxMjE0ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:def89a2c,vid:BUIPDCpV92o,st:0

வரும் பதிவுகளில் மேலும் விவரங்கள் தொடரும்

நன்றி   அன்பன் ராமன்

                                         ******************

 

1 comment:

  1. கண்ணதாசனைப் போல் பாடல்கள், முக்கியமாக தத்துவப் பாடல்கள், எழுதியவர்கள் உண்டா?
    எம். எஸ். வி போல் இத்தனை இசைக்கருவிகளை, அதிலும் மேற்கத்திய இசைக்கருவிகளை, லாவகமாக கையாண்டவர்களாஉண்டா?
    இவ்விருவர்களின் திறமைகளையும் எங்களுக்கு உணர்த்திய ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...