Tuesday, November 26, 2024

OLD MOVIE SONGS-12

 OLD  MOVIE SONGS-12                              

INNOVATIVE SUBSTITUTIONS-2

புது வகை முயற்சிகள்-2

MIMICRY SONGS

மிமிக்ரி என்னும் பிற குரல் ஒலி யில் பாடல்கள்

இன்றைய பதிவில் மிமிக்ரி எனும் வேற்று குரல் ஒலிகளை மனிதர்கள் வெளிப்படுத்தி அவற்றை திரைப்பாடல்களில் அமைத்து உருவான பாடல்கள் பற்றி ப்பார்ப்போம் . அவற்றை ஏன் உபயோகிக்கிறார்கள் எனில், தேவையான இடங்களில் தேவையான அளவில், மற்றும் சுருதியில் மிருகங்கங்களை க்கொண்டு குரல் பதிவேற்றுதல் சாத்தியமில்லை. எனவே அந்த திறமை உள்ள மனிதர்களைக்கொண்டு வேண்டிய இடத்தில் ஒலிக்கச்செய்து வெகு நேர்த்தியாக பதிவிடலாம். அந்த வகையில் மாபெரும் ஆளுமை மறைந்த திரு சதன் என்று பலரும் அறிவர்.அதைப்போல வே திரு மீசை முருகேஷ் /திரு சாய்பாபா போன்றோரும் வேறு வகை திறன் படைத்தவர்கள். அவர்களை சிறப்பாக பயன்படுத்தியோரில் முதன்மையானவர் திரு எம் எஸ் விஸ்வநாதன். அவர் குழுவினரின் சில்பாடல்கள் இப்போது .

 

எங்கிருந்தாலும் வாழ்க[ நெஞ்சில் ஓர் ஆலயம் -1962] கண்ணதாசன் . வி-ரா, எல் ராகவன் [+சதன்]   இப்பாடல் தனது கையில் பழைய போட்டோவை வைத்துக்கொண்டு முன்னாள் காதலியை வாழ்த்தி இரவில் பனிச்சூழலில் டாக்டர் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல். இரவின் அமைதியில் தவளை ஒன்று குரல் எழுப்பும் ஒலி சேர்க்கப்பட்டுள்ளது. அது பாடல் துவக்கம் மற்றும் இறுதியில் ஒலிக்க காட்சியை நாமே நேரில் கண்டது போன்ற எண்ணத்தை விதைப்பதையும், திரு எல் ராகவன் அவர்களின் முழு அர்ப்பணிப்பும் கவிஞரின் சொல்லாடலும் , வி ராவின் இசைத்தொகுப்புகளும் இன்று கேட்டாலும் மனதை ஆக்கிரமிக்க உணரலாம்

ENGIRUNDHAALUM VAAZHGA

https://www.google.com/search?q=ENGIRUNTHAALUM+VAZHGA+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWILteKiH9au7SyqVr5Jd9rrYXh_NDw%3A1732420447775&ei=X6NCZ7WIL6aLnesPgsPs4Qk&ved=0ahUKEwj1s5CLifSJAxWmRWcHHYIhO5wQ4dUDCA8&oq=ENGIRUNTHAALUM+VAZHGA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIUVOR0lSVU5USEFBTFVNIFZBWkhHQSBWSURFTyBTT05HIDIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkiw4wFQAFjzYXABeAGQAQCYAYsBoAGfGqoBBTEzLj

மற்றுமோர் மிமிக்ரி பாடல்

 போனால் போகட்டும் போடா [பாலும் பழமும் ]கண்ணதாசன் , வி, ரா டி எம் எஸ் [+சதன் ]

இதுவும் ஒரு டாக்டர் பாடல். இறந்து பட்ட மனைவியின் சடங்குகளை முடித்தவன் தான் ஒரு டாக்டர் ஆனாலும் மனைவின் மரணத்தை தடுக்க இயலவில்லை என்ற ஆற்றாமையை எண்ணி இதயம் கனக்க அரற்றுகிறான் . சோகத்தின் சாயலை ஒஹ் என்று ஓலமிட்டு ப்பாடி எம் எஸ் வி பாடலை துவக்க கூடவே பல ஒலிகள் ஆம் மயான பூமி அல்லவா, நாய், ஓநாய் , நரி இவை குரைத்து ஊளையிடுவது சதன் குரலில் .அவ்வப்போது ஆந்தை கூகை, பருந்து என மயான பூமியின் அடையாளங்கள் அனைத்தும் வரிசையாக பாடல் நெடுகிலும் இடையிசையில் பின்னிக்கலந்து ஒலித்த அந்நாளைய வலுவான கற்பனை. சதனின் பங்களிப்பு அசாதாரணமானது. டி எம் எஸ் பாவம் சொட்டச்சொட்ட பாடியுள்ளார். பாடல் நிறைவுறும் போது எம் எஸ் வி குரலும். சதனின்   பறவைக்குரலும் பாடலின் அடையாளங்கள் . கேட்டு உணர இணைப்பு இதோ

PONAL POGATTUM PODA

https://www.google.com/search?q=ponal+pogattum+poda+video+song+download&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWIIPISKxiqj6si4IInL_Aet2BkBHbw%3A1732422032922&ei=kKlCZ-WFOKea4-EPmMHOsQE&oq=PONAAL+POGATTTUM+PODA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIVBPTkFBTCBQT0dBVFRUVU0gUE9EQSBWSURFTyBTT05HICoCCAAyChAAGI

PARAKKUM PANDHUPARAKKUM

பறக்கும் பந்து பறக்கும் [பணக்கார குடும்பம் ]கண்ணதாசன் , வி ரா, டி எம் எஸ் சுசீலா [+சதன் ]

இது ஒரு மிமிக்ரிப்பாடல் ஆனால் குரல் அல்ல விரல் . என்ன விரலா என்கிறீர்களா ஆம் விரலே தான் . சதன் பந்து போல் ஒலி எழுப்ப, வாய்க்குள் நடு விரலை வைத்து வாயை இறுக மூடிக்கொண்டு , உள் கன்னத்தில் விரலை அழுத்தி வெளியே இழுக்க டொப் என்று பந்து போல் ஒலிக்கிறது . பாடல் முழுவதிலும் சரியான தருணங்களில் பந்தின் ஒலி வெளிப்பட பாடல் பெரும் பிரமிப்பை ஏற்படுத்த நமது வியப்பு அதிகரிக்கிறது.. பாடலின் இசை-குறிப்பாக ராக ஓட்டம்,  மற்றும் இசைக்கருவிகளின் தேர்ந்த வாசிப்பு  சதன் வழங்கிய தத்ரூப ஒலி என      

 அனைத்ததும்  ஒருங்கிணைந்த விந்தை இப்பாடல் 1963 இல் . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=PARAKKUM+PANDHU+PARAKKUM++video+song+download&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWIKdHG1527aXHYVndQX9bHWvaly7gg%3A1732422714078&ei=OqxCZ8XABOSO4-EP85yjgA0&ved=0ahUKEwjFxeTDkfSJAxVkxzgGHXPOCNAQ4dUDCA8&oq=PARAKKUM+PANDHU+PARAKKUM++video+song+download&gs_lp=Egxnd3M

இதோ இன்னுமோர் வியப்பு -சதனின் முழு பங்களிப்பில் மிளிர்ந்த பாடல்

தத்தை நெஞ்சம் [சர்வர் சுந்தரம்- 1965] கண்ணதாசன் வி-ரா, பி சுசீலா, [+சதன்]

பாடல் கிளியின் குதூகலத்தில் துவங்குவதை நன்கு ரசியுங்கள்

நாயகி தனது உணர்வுகளை கிளியுடன் பாடிப்பகிர்ந்து கொள்வதாக அமைந்த பாடல் இது. இப்பாடலின் முதுகெ லும்பே கிளியின் விடையிறு க்கும் அல்லது மீண்டும் ஒலிக்கும் சொல்திறன் தான் எனில் மிகை அல்ல.

ஒவ்வொரு இறுதிச்சொல்லையும் கிளி திரும்பி பேச , மிகவும் ஈர்ப்பு உருவாக்குவதை உணரலாம்.மேலும்கொத்தும் கிளிஎன்றதும் கிளி மகிழ்ச்சியுடன் ஒலியெழுப்பி கேட்போரை பரவசம் கொள்ள செய்வது சிறப்பு. தேவையான போதெல்லாம் சரியான அளவில் கிளி [சதன்] பதில் சொல்வது இன்று வரை  வேறு எவரும் செய்யத்துணியாத உன்னத முயற்சி. கேட்டு மகிழுங்கள் இணைப்பு இதோ

THATHTHAI NENJAM

https://www.google.com/search?q=THATHTHAI+NENJAM+QFR+SONG&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWILUOVO-oYJ4YU9j1272MplgpvoUmQ%3A1732426410379&ei=qrpCZ-

தொடரும்

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

GOOD- BUT LESS KNOWN -12

  GOOD- BUT LESS KNOWN -12 நல்ல ஆனால் அறியப்படாதவை-12                         I do not wish to say anything . Please listen and drawyo...