Thursday, December 12, 2024

ANGER AND EGO -4

 

ANGER  AND  EGO -4                              

கொந்தளிப்பும் அகம்பாவமும்-4

அகம்பாவம்தோன்றுவது , வீட்டுச்சூழல் வளர்ப்பு பிழைகள், பெற்றோர் ஒழுங்கீனம், தவறுகளை நியாயப்படுத்தும் விவாதங்கள், அர்த்தமற்ற ஒப்பீடுகள் போன்ற பல காரணங்களால் என்று உணரலாம். சிறுவயதில் , என் குழந்தை என்ற ஒரே அன்பின் பிடியில் கட்டுண்டு சிறுவர் சிறுமியர் தவறுகளை கண்டிக்காமல் , குழந்தைதானே என்று தேவையற்றை அனுசரண ன்பை காட்டுதல் இதன் ஆரம்ப கட்டங்களுக்கு உரமிட்டு வேரூன்றச்செய்யும் இதை உணர நியாய /அநியாய நிலைகள் குறித்த தார்மீக பார்வை அவசியம் .

இதனை புரிந்து கொள்ளாமல் அல்லது கவலைப்படாமல் மென்மேலும் கட்டுப்பாடின்றி அரவணைப்பும் செல்லமும் குழந்தைகளை விரைவில் கெடுக்கும் என்று உணர்தல் நலம் . மேலும் யாருக்கும் கட்டுப்படாமல் வளரும் தன்மையை வேரூன்றச்செய்வது பின்னாளில் திருத்தவோ, மாற்றவோ இயலாயமல் யார்க்கும் பயனற்ற வாழ்வுமுறைகளில் ஈடுபாடு கொண்டு , அதே பெற்றோரை வேதனையிலும் கோபத்திலும் தள்ளிவிடும்.

எனவே தான் சுமார் 3 வயது கடந்த நிலையில் இருந்து மெல்ல மெல்ல கட்டுப்பாடுகளை பின்பற்ற சிறார்களை வழி நடத்துங்கள். உங்களிடம் பொருளாதார ஆதாரம் வலுவாகஇருப்பதனால் கேட்பதை எல்லாம் கொடுப்பது படாடோபமாக வாழ்வதை போன்ற செயல்பாடுகளை தவிருங்கள்.

இவைதான் 'நான்' பிறரை விட மேலானவன் என்ற எண்ணத்தை தவிர்க்க உதவும். ஈகோ எனும் அகம்பாவம் படிப்படியாக கோபம் எனும் வெறுப்பு பேச்சு நிறைந்த சொல்லாடல், எடுத்தெறிந்து பேசுதல் போன்ற பிறரை மதிக்காத மனோபாவம்தன்னை நிலைபெறச்செய்யும் . அதுபோன்ற இளம் வயதினருக்கு பணமும் பகட்டும் பெரிதெனவும், கல்வியும் பண்பும் ஏதோ தனக்கு அடிமைப்பட்டவை என்பது போன்றும், பேதைமை கொள்ள செய்யும்.

இவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கல்வி நிலையை தாண்டி முன்னேறுதல் வெகு அரிது. கல்வியை மதியாதார் , கல்வியாளர்களும் , திறமைசாலிகளை யம் கூட துச்சமென நினைப்பர். .

 எனவே இளம் வயதில் விதைக்கப்படும் பண்பு சார்ந்த ஒழுக்கம் தவிர வேறெதுவும் எந்த நிலையிலும் பயன் தராது.

குறையினை வளரவிட்டுவிட்டு திருத்துதல் எளிதன்று. ஆரம்பகால கவனம் நன்மை தரும்

மேலும் தேவைகளை பின்னர் காண்போம் .

அன்பன் ராமன்      .

1 comment:

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...