Sunday, December 22, 2024

SHARMA –AGAIN

 SHARMA –AGAIN

மீண்டும் சர்மா                       

சர்மாவை நினைவிருக்கிறதா.? வேறு யார் நாக்பூர்  ஆசாமி தான். சிதம்பரநாதன் செட்டியாரின் வாரிசுகளை நேரில் பார்த்து இழந்த தொகையில் பாதியையாவது மீட்க முடியுமாமுடியுமா என்று சோர்ந்து போய் மீண்டும் காரைக்குடி யில் சிதம்பரநாதன் இல்லம் நோக்கி வர , வாசலில் குத்துக்கல்  போல சீனா நா னா என்ற சிதம்பரநாதன் அமர்ந்திருக்க, செட்டியார்ஜீ என்றுஅலறிக்கொண்டு "I AM  VERY HAPPY -THAT YOU ARE  SAFE and Alive என்று கை கூப்பினார் . செட்டியாருக்கு புரியவில்லை- Why ?என்றார்

மஹாலிங்.  said you are "yamaha"dhahan " killed in fire on yamahaa bike”.     Who?  என்றார் செட்டியார் . Yes , your PA -மஹாலிங்.

செட்டியார் கொதித்துக்கொண்டிருக்கிறார்வரட்டும் அவன்”.  

செட்டியார் வெயிட் என்று உள்ளே சென்று 2 லட்சம் ரூபாயை ஒரு பொட்டலமாக கொடுத்து , ஜீ—Business is VERY GOOD . AFTER 3 MONTHS AGAIN 3 LAKHS -I WILL GIVE. NOW EAT 'ஆப்பம்" [AAPPAM] WITH  ME   என்று அழைத்து சென்று சூடாக ஆப்பம் சாப்பிட்டனர். சர்மா ஆப்பத்தில் திளைத்தார் , மஹாலிங் ஆபத்தில் சிக்கிவிட்டார்..

சர்மாவுக்கு எப்படியாவது ஆப்பம் ரெசிபியை மனைவி மோனா வுக்கு    கொடுத்து திகைக்கவைக்க வேண்டுமென்று துடிப்பு. செட்டியாரிடம் கேட்க டேய் வள்ளியப்பா வாய்யா இங்கிட்டு என்று செட்டியார் அலற , வள்ளியப்பன் வாயை மூடியபடி வந்து அய்யா கூப்பிட்டீங்களா என்றார்.

ஆமாஇந்த சாருக்கு, ஆப்பம்  எப்பிடி  செய்யோணும் னு கேக்கராஹ , கொஞ்சம் சொல்லென்என்றார் . எனக்கு இங்கிலீஸ் வராதுங்களே என்று கையை பிசைந்தார் வள்ளியப்பன்.. நீ சொல்லு நான் இங்கிலீஸ்ல எளுதி கொடுத்துடறேன். ஆனா ஒண்ணு ஒவ்வொரு பொருளும் 3, 4 எடுத்துக்கிட்டு வா நான் பேரெழுதிட்டு அதைஅங்கங்க ஒட்டிருவோம் . அரிசி, உளுந்து , மிளகா , மல்லி , சீரகம் இப்பிடி சாமான்களை ஒட்டிட்டு அவர்கிட்ட குடுத்து அனுப்பிட்டு ஊர்ல போய் பாத்துக்குவாரு என்றார் செட்டியார்.

வள்ளியப்பன் சொல்லச்சொல்ல செட்டியார் எழுதி ஆங்காங்கே அரிசி, பருப்பு , ஜீரகம் , என்று சிறு குவியல்களாக அதே பேப்பர்மேல் ஒட்டி  , காயவைத்துக்கொண்டிருக்க , மகாலிங் திடீரென்று தோன்றி , சர்மாவைப்பார்த்து ஒய் [WHY ? INSIDE ONE MONTH REPEAT COME? [ஏன் ஒரு மாசத்துக்குள் திரும்ப வந்தீர்கள் என்பதற்கு மஹாலிங் தொகுத்த ஆங்கிலம்].

ஆத்திரம் வந்த செட்டியார் கதவின் பின் இருந்த விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு, அடேய் கேனப்பயலே , உயிரோடு இருக்கிற முதலாளியை தீப்பிடிச்சு இறந்துட்டார் னு சொல்லியிருக்கியே , உன்னைய கொல்லாம விடமாட்டேன் என்று அவன் சட்டையை பிடித்துக்கொண்டு விளக்குமாற்று கைப்பிடியால் மடேர் மடேர் எறு முதுகில் சாத்தினார்

களுதப்பயலே உனக்கு இங்ங வேலை இல்லை போடா வெளியே என்று அலறினார். மஹாலின் ஓடி பின் புறம் செல்ல, செட்டியாருக்கு கோபம் அதிகமாயிற்று ,

 பெரிய மூங்கில் குச்சி யை எடுத்துக்கொண்டு பின் புறம் ஓடி மகாலிங்க த்தின் தோள்பட்டையில் வீறினர். ஐயோ என்று மகாலிங் தெருவில் ஓட , “நீ இங்ஙன வராதேவந்த--- போலீசு தேன் உனக்கு என்றார் செட்டியார்

பெட்டியை எடுத்துக்கிட்டு போயிர்றேன்என்றார் மஹாலிங் . “அதெல்லாம் நீ வீட்டுக்குள்ள போகக்கூடாது , உன் பெட்டியைதூக்கி ரோட்டுல வீசிர்றேன் தூக்கிக்கிட்டு ஓடுஎன்று கர்ஜித்தார். செட்டியார்.

 பெட்டியைதூக்கி வீட்டின் வெளியே வீச, 5, 6 துணி மணி    களையும் சுருட்டி ஏறிய , 2 சிறுவர்கள் தகப்பன்களுடன் [கதிரேசன் , வள்ளியப்பன் + தகப்பன்மார்] வர, இவர்தான் என்று சிறுவர்கள் மகாலிங்கை  கை காட்ட , அவர்கள் உரத்த குரலில் என்னடா நெனச்சுக்கிட்டிருக்க ? என்று அலற செட்டியார் வெளியே வந்தார்.

பாருங்க சார் ஸ்கூல் பயங்களுக்கு இங்கிலீசு தப்புத்தப்பா சொல்லிகுடுத்து வாத்தியார் அவனுங்களை அடி  பிச்சுட்டார்.    என்னய்யா நீ பெரிய இங்கிலீஸ்காரனா நீ என்று மஹாலிங் முகத்தில்  முட்டியால் இடித்தனர்.  . அவனை விடாதீங்க கொல்லுங்க என்றார் செட்டியார் ,

அவ்வளவு தான் அவர்கள் மாறி மாறி மகாலிங்கத்தை புரட்டி எடுத்தனர், சட்டை கிழிந்து, தலை கலைந்து, மஹாலிங்,  கை கூப்பிவிட்டு , வேஷ்டி கிழிசலை மறைத்துக்கட்டிக்கொண்டு , ஊருக்கு பஸ் பிடிக்க ஓடினார். செட்டியாரின் ஆத்திரம் மஹாலிங்  ன் வேலைக்கு உலை வைத்துவிட்டது.

சர்மாவை, பணம் மற்றும் ரெசிப்பியுடன் கௌரவமாக அனுப்பி வைத்தார் சிதம்பரநாதன் செட்டியார். 

நன்றி

அன்பன் ராமன்            *******

1 comment:

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...