Tuesday, December 24, 2024

LET US PERCEIVE THE SONG -2

 LET US PERCEIVE THE SONG -2

பாடலை உணர்வோம்  -2

ANBU MALAR AASAI MALAR  -2

அன்பு மலர் ஆசை மலர்-2

அன்பு மலர் ஆசை மலர் பாடலை ஏன் துவக்கத்தில் கொண்டுவருகிறேன் . நியாயாமாக சொல்லுங்கள் இப்பாடலை நீங்கள் இதற்கு முன் யோசித்தது உண்டா? அநேகமாக இருக்காது ஏனெனில் பாடல் நடிகர்களின் பங்களிப்பில் வரவில்லை. மேலும் அசரீரிக்குரலாக டைட்டில் இசைதுவங்க கதையின் உயிர்நாடியை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=Z3LVzhtrAS4

ஆனால் இது ஏதோ டைட்டிலில் தோன்றும் ஒலி, என்று விட்டேத்தியாய் அகன்றிட சாதாரண நிகழ்வு அல்ல, மாறாக படத்தின் சாரத்தையே உணர்ச்சிப்பிழம்பாக ஊனை உருக்கும் திறனுடன் படம் துவங்கியதும் ஓங்கி உயர்ந்து ஒலித்து அரங்கத்தை ஆட்கொள்ளும் ஆளுமை வெளிப்பட்ட அமைப்பு.

கவியின் திறன்

கண்ணதாசன் பலவகை மனித உணர்வுகளை, மலர்களாக  உருவகம் செய்து அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் என்று பட்டியலிட்டு , அதிலும் அருளோடு மலர்வது தான் பாச மலர் என்று 'பாச மலர்' குறித்து விளக்குகிறார். பின்னர் தங்கையின் உணர்வுகளுக்கு உதவும் தனயனையும் தங்கையுடன் ஒன்றிவிட்ட பாசநிலையையும் காட்டி உயிர்களின் பிணைப்பு உணர்வின் வெளிப்பாடு என விளக்கிட, சேய் பறவை தாய் பறவை உணர்வுகள், கன்று பசு என்று பந்தங்களின் பட்டியல் ஒரு புறம், தான் ஆடா விட்டாலும் தசை ஆடும் என்ற உறவின் வீரியத்தையும் இடையில் பிணைத்துள்ளார் கவிஞர் தா .

சரி, இது கவிஞர் கதைக்கருவை டைட்டில் எனும் முகப்பிலேயே அறிவிக்கிறார்என்ற அளவில் சரி..

நான் பல முறை தெரிவித்துள்ளது போல் கவியின் சொல்லுக்கு இசை தரும் வடிவமே உடலும் பல தருணங்களில் ஆன்மா எனும் ஜீவன் என்பதும், இப்பாடலில் வெகு நேர்த்தியாக நிறுவப்பட்டுள்ளது..

இதை வடிவமைத்த இசை அமைப்பாளர்களை நினைவுகொள்ளுதல் தார்மீக கடமை எனில் மிகை அல்ல.  அவர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி "பாச மலர்" 1961]

எவனாவது டைட்டில் சாங் குறித்து பேசுவானா? என்கிறோர் ஒன்றை புரிந்து கொள்வீர். பாடலின் நயம் குறித்த தேடுதல் செய்யும் எவரு[னு]ம் நடிகனையோ நடிகையையோ முன்னிலைப்படுத்த மாட்டார் [ன்].  அவர்களுக்கு நன்றாகவே தெரியும் உண்மை படைப்பாளிகள் கவிஞனும் இசை அமைப்பாளனும் தான் பாடலின் பெற்றோர்.

திரையில் தோன்றும் உருவங்கள் புகழுக்கு சொந்தம் கொண்டாடும் பங்காளிகள் என்பது.  

எம் எஸ் விஸ்வநாதன் குரலில் பாடலாக ஒலித்த முதல் பதிவே "அன்பு மலர் ஆசை மலர்" தான் [தாழையாம் முடிச்சு 1959 இல் அவர் குரலில் ஹம்மிங் மட்டுமே ஒலித்தது. இப்போதோ முழுப்பாடலே ஒலித்துள்ளது.ஆனால் டைட்டிலில் அவர் பெயர் பாடகர்கள் பட்டியலில் இல்லை.தொழிலைமட்டுமே கவனித்த அன்றைய தலை முறை அல்லவா?

 இசை அமைப்பாளர் எனும் இடத்தில் வி, ரா பெயர்கள் உள்ளன. இதுவும் கருத்தில் கொள்ளவேண்டிய அந்நாளைய உரிமை கொண்டாடாத   தன்னடக்க செயல் பாடு.

அவை ஒரு புறமிருக்க பாடலுக்கு வாருங்கள்

முழுப்பாடலையும் தொகையறா போல் கையாண்டு பாடியுள்ளார். ஆம் தாளக்கருவிகளின் சிணுங்கல் கூட இல்லாத அமைப்பு இப்பாடலின் சிறப்பு

மேலும் பல்லவி சரணங்கள் என்ற அமைப்புகளை விலக்கி விட்டு, பாடல் வரிகள் ஒன்றன் பின் ஒன்றாக முன்னேறி பாடலை நிறைவு செய்கின்றன. இதுவும் கூட- தொகையறா வின் இலக்கணம் அன்றோ?

இதையெல்லாம் கடந்து இசை அமைப்பில் செலுத்திய அதே அளவு ஈடுபாட்டினை பாடுவதிலும் வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார் எம் எஸ் வி அன்றைய வளர்ந்துவந்த  நிலையில். ஆம், ஆங்கிலத்தில் ட்ரீட் மென்ட் என்ற ஒற்றை சொல்லில் பல பண்புகளை குறிப்பிடுவர். அவ்வகையில் எம் எஸ் வி இப்பாடலின் உயிர் புள்ளிகள் அனைத்தையும் தனித்தனியே ட்ரீட்மென்டிற்கு உட்படுத்தியிருக்கிறார் எனில் இம்மியளவும் பிழையல்ல. 

பாடலை பலமுறை கேளுங்கள் நான் சொல்வதில் உள்ள நுணுக்கம் புரியும்.  

என்று அடி  வயிற்றின் வேதனையுடன் துவங்கி பாடும் எம் எஸ் வி  அந்த ';' என்ற ஒலி யை  எட்டு விதமாகப்பாடியுள்ளார் -கவனித்துப்பாருங்கள் உணர்ச்சிக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரியும்

ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே பாடியுள்ளார். அதிலும்ஆசை மலர்என்ற சொல்லை ஆ-- சை மலர், என்று எவ்வளவு அழுத்தம்? அதே போலஅருளோடுஎன்ற சொல்லை ருளோடு என்றுஉயர்த்தி, ஒரு இறைக்கண் இருப்பதை அமைதியாகத்தொட்டுக்காட்டுவதை கவனியுங்கள். அதே போலபாசமலர்என்ற சொல் பா- மலர் என்றொலிக்கப்பாடுகிறார்.

அன்னைக்கு--   அன்னையாய் ,      தந்தைக்கு --      தந்தையாய் என்று ஒவ்வொரு சொல்லையும் நல்ல இடை வெளி    விட்டு ப்பாடி வெவ்வேறு அழுத்த நிலைகளில் உள்ளார்ந்த உணர்ச்சியை தவழவிடுகிறார்.

இப்படி பாடி ஒரு நிலை வந்ததும் வயலின் கூட்டம் உயிர்த்தெழுந்து இழைந்து குழைந்து அடங்கிப்போக

தானாடா விட்டாலும் - தசை ஆடும் என்பார் என்ற அன்பின் பண்பை இயல்பு நிலையில் பாடி அதற்கென உணர்ச்சியை திணிக்காமல் பாடிய பின்

சேய் பறவை குரல்  கேட்டு தாய் பறவை    வாடுமே  என்று விரைந்து உச்சஸ்தாயியை பிடித்து தாயின் வாடும் தன்மையை நேர்த்தியாக நிறுவி  பின்னர்

கன்றழைக்கும் குரல் கேட்டு--  தாய்ப்பசுவும் ஓடுமே……  என்று உயரம்  தொடாமலேயே உணர்ச்சியின் தாக்கத்தை ஓடுமே என்று நீட்டிப்பாடி  [பறக்கும் பறவைக்கு உயரம் தொட்டவர், நிலத்தில் பசுவுக்கு சமதரையிலேயே] ஏக்கம் கொள்ளும் பண்பினை நேர்த்தியாக உயர்த்தி உணர்த்தி விட்டு  காண வரும் பிற துணைகள்தாய் ஆகுமா என்ற வினாவுடன் எம் எஸ் வி விலகிக்கொள்ள மீண்டும் வயலின்கள் கொத்தாக இசை முழங்கி அமைதியுற

 டைட்டிலில் பிற பகுதிகள் தாள ஒலிகளுடன் தொடர்ந்து பயணிக்கின்றன.

ஒரு டைட்டில் பாடலில் இவ்வளவு கூறுகளை விதைப்பவர் எவ்வளவு சிந்தித்திருப்பார் பாடலை வடிவமைக்க?

யோசியுங்கள் அன்பர்களே,  பாடலை உணர்தல் என்பது நமது புலன்களை கூர்மைகொள்ளச்செய்யும் .

வேறு பாடலுடன் பின்னர்

அன்பன் ராமன்

1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு. படத்தின் டைட்டில் சாங்கே படத்தின் கருவை அழகாக வெளிப்படுத்தி இருப்பதை இந்த கட்டுரையின் மூலம் உணர்ந்து ரசித்து யோசிக்கும் படியாக செய்தது.

    மேலும் கண்ணதாசனின் கவிதை திறன் அந்த பாடலுக்கு ஏற்ற வகையில் இசை அமைப்பு மிகவும் அற்புதம்.

    எம். எஸ். வி குரலில் காட்டும் உணர்ச்சிகள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இவ்வளவு அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர் நிறைய திரைப்பட பாடல்கள் பாடாததுது ஏனோ? தெரியவில்லை.

    திரைவானில் பாடப்படும் பாடலின் பின்புலத்தில் உள்ள அத்தனை அம்சங்களையும் எவ்வாறு நோக்குவது மற்றும் அந்த பாடலில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களை யும் எவ்விதம் உணர்ந்து பாடலில் கிறங்குவது என்பதை கட்டுரையாளர் சி. ராமன் அவர்கள் மிக அழகாக புரியும்படி விளக்கியுள்ளது வைரத்தை பட்டை தீட்டி அதன் பிரகாசத்தை விளங்க வைத்தது போல் உள்ளது.

    அவரது இந்த பெரு முயற்சி தொடரவும் நாமும் அவரது முயற்சியில் தோன்றிய முத்துக்களைப் பார்த்து ரசித்து தொடர்ந்து பரவசமாகுவோம்.

    நன்றி
    லக்ஷ்மணன்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...