Thursday, December 26, 2024

CV RAJENDRAN -3

 CV RAJENDRAN -3

சி வி ராஜேந்திரன்-3

ஜில்லென்று காற்று வந்ததோ [நில் கவனி காதலி -1969] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

 நீச்சல் குள ப்பாடல்களில் தனி முத்திரை     பதித்த ஒளிப்பதிவு, இயக்கம் இசை கவிதை என பன்முகம் கொண்ட பாடல். இசையில் அன்றைய புதுமை பல்லவி முடியும் ஒவ்வொரு முறையும் பப்பர பர பர என நளினமாக சிணுங்கும் அக்கார்டியன் ஒலி, உடனே உயிர்த்தெழும் செலோ, ஆங்காங்கே ஒலிக்கும் சரோட் இன் குழைவு. அவ்வப்போது குதூகலத்தில் டான் டா டா டா என ஆண்  குரல் ஆர்ப்பரிக்க காட்சி  விறுவிறுப்பு கொள்வது தனி சிறப்பு. இவ்வனைத்தையும் தாண்டி under water cinematography எனும் நீரின் அடியில் இயங்கும் காமரா இல்லாமலேயே காமரா நீரில் மூழ்கி இருந்து படம் பிடித்தது உள்ளூர் திறமையின் வெளிப்பாடு. பெரிய கண்ணாடிப்பேழையில் கேமராவுடன் சுந்தரம் இறங்கி படம் பிடிக்க, நீர் அழுத்தம் தாங்காமல் பேழை சிதறி கண்ணாடித்துண்டுகள் சுந்தரம் அவர்களின் காலை வெகுவாக கிழித்து , 3 மாதம் ஓய்வும் வைத்தியமும் பெற்ற பின்னரே மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இரண்டாம் முறை கண்ணாடிக்கு பதில் perspex எனும் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பொருள் கூடாரத்தினும் இருந்து நீர்ப்பரப்பும் நீரின் உள்பரப்பும் நீந்தும் நங்கையரையும் பாடல் காட்சியில் முதன் முதலில் படமாக்கினர்.    -சி வி ராஜேந்திரன் குழுவினர் . பின்னர் இதே உத்தியை ஸ்ரீதர் சி வி ஆரின் அனுமதியுடன் தன படங்களில் மேற்கொண்டார் என்பது சரித்திரப்பதிவு.. பாடல் இசை நடிப்பு [ஜெய்சங்கர்-பாரதி ]துணை நடிகர்கள் என ஒரே நேரத்தில் நீரின் மேற்பரப்புக்கு இணையாக  உள்  பரப்பையும் ஒளிப்பதிவிட்ட சுந்தரம் ஒரு பெரும் வித்தகன் எனில் மிகை அல்ல. காட்சிக்கு இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=u-fdak01sn4

jil enru 1969 ng k vaali  msv tms ps bharathi jeysankar PN Sundaram

பொ ட்டு வைத்த முகமோ     [சுமதி என் சுந்தரி -1971] கவி அரசர், எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியன்,B  வசந்தா

சி வி ஆரின் பாடல் காட்சியை பதிவிடும் திறமைக்கு கட்டியங்க்கூறும்

பொ ட்டு வைத்த முகமோ     [சுமதி என் சுந்தரி -1971] கவி அரசர், எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியன், B . வசந்தா [ஹம்மிங் குரல்] அதிலும் கவர்ந்திழுத்த லா லா என்ற வினோத அமைப்பு. பாடல் இளமையின் பெட்டகம் என குரல்கள், பாடலின் `இடையில்  பல்லவியில்   சற்றே பொட் .......டு வைத்த முகமோ, ஆஅ கட்டி வைத்த குழலோ என்று சில 'மாத்திரைகள் ' கூடுதலாக ப்பாடி பாடலில் ரொமான்ஸ் மேலிட ஒலிக்கும் வித்தையும் இப்பாடலில் உண்டு. இசை, சொல்லாடல் உச்சஸ்தாயியில் தரையோடு வானம் என்று கம்பீர பாராட்டு மற்றும் நிழல் போல் மறைந்தாள் எனும் வருடும் குரல் . அவற்றுடன் போட்டியிட்ட ஒஹ் ஒஹ் ஒஹோ என்ற பெண் ஹம்மிங்கும் கூடவே சித்தார் , குழல், அக்கார்டியன்டட் டுங்    டட் டுங்     என்ற காங்கோ, ஒலியும் பிணைந்து வழங்கும் ரம்மியத்துடன் மலைத்தோட்டப்பூவில் என்ற உயர் மட்ட ஒலி உச்சரிப்பு , மற்றும் கலைத்தோட்ட ராணி [ரா ணி ] என நீட்டி பாடி தோற்றுவிக்கும் நளினம் மற்றும் காட்சி அமைப்பு என மனதை கொள்ளை கொள்ளும் அமைப்பு, இப்பாடல். சித்தார் , குழல், அக்கார்டியன் அவ்வப்போது வெளிப்பட்டு பாடலின் உள்ளார்ந்த உணர்வை மேம்படுத்திய இசை அமைப்பு. எம் எஸ் வியின் முற்றிலும் வேறு பட்ட ஒரு பரிமாணம்.  வேறொரு படத்தில் வேண்டாம் என ஸ்ரீதர் நிராகரித்ததை,    சி வி ஆர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். காட்சியை  ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=TBqcPA0pNv8

pottu vaitha mugamo su en su kd msv spb vasantha brilliant dance /humming  

QFR      இப்பாடல் பற்றி சுபஸ்ரீ அவர்களின் விளக்கமும் அவரது குழுவினரின் பாடலும் கேட்டு மேலும் விவரங்களைப்பெற இணைப்பு இதோ

https://www.google.com/search?q=QFR+POTU+VAITHA+MUGAMO&oq=QFR+POTU+VAITHA+MUGAMO+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8CMgcIBhAhGI8C0gEJMTc4MzBqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:e4c3cb32,vid:udGN35AK4Ug,st:0

தொடரும்

 அன்பன் ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...