CV RAJENDRAN
C V RAJENDRAN
சி வி ராஜேந்திரன்
சித்தாமூர், விஜயராகவலு ராஜேந்திரன் . இயக்குனர் ஸ்ரீதரின் மாமன் மகன். ஸ்ரீதரிடம் பல நுணுக்கங்களைக்கற்றுக்கொண்டு வெகு சிறப்பாக இயக்கும் வலிமை பெற்றவர். பாடல் காட்சிகளை கையாள்வதில் மிகுந்த திறன் கொண்டவர். சொல்லப்போனால் அவர் போல் பாடல்காட்சிகளை விறுவிறுப்பாகியவர்கள் வெகு சிலரே. மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு இனியவர் நல்ல திறமைசாலி ;பிறரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற இங்கிதம் அறிந்தவர். இவை அனைத்தையும் கடந்து எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்; நான் /நாம் ஏதாவது தெரிவித்தால் குழந்தைபோல் கேட்டுக்கொள்வார் ,சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர். அவரும் திரு கோபு அவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற உரையாடல்களை கூர்ந்து கவனியுங்கள். திரு சி வி ஆர் அவர்களின் பாடல் காட்சி அமைப்புகளை பின்னர் பார்ப்போம் காட்சியில் திரு கோபு, நடுவில் திரு சம்பத் ஒலிப்பதிவு என்ஜினீயர் மற்றும் வலப்புறம் திரு சி வி ஆர் இருப்பதைக்காணலாம்
1 https://www.google.com/search?q=mmfa+you+tube+cv+rajendran+on+galatta+kalyanam+movie&newwindow=1&sca_esv=66697bfd130ff546&sxsrf=ADLYWIKspDL469xoKdnEDsrpqImCl6iqEQ%3A1733452095196&ei=P2FSZ77PC6GQseMPosHcqAk&oq=mmfa+you+tube+cv+rajendran+on+gal
2
https://www.youtube.com/watch?v=1mMEjqroWAo on kaalikka neramillai , s, sundhari
cvr gopu
Anubavam pudhumai [1967] kannadasan , MSV, PBS PS
சுமார் 6 ஆண்டுகள் ஸ்ரீதருடன் இணை இயக்குனராக பயணித்த ராஜேந்திரன் முதலில் இயக்கிய படம் "அனுபவம் புதுமை [1967]. அப்போதே மாறுபட்ட காட்சி அமைப்பு , பாடல் தொகுப்பு என்று கவனம் செலுத்தியவர் ஒரு கனவு போல் அமைந்த பாடல் கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் ; அப்போதே SLOW MOTION அமைப்பில் நடக்கும் பாடல். விதம் விதமாக மிதக்கும் நடிக நடிகையர், என்று அசத்திய படப்பிடிப்பு [ஒளிப்பதிவு பி என் சுந்தரம்] பி பி ஸ்ரீனிவாஸ் சுசீலா குரல்களில் எம் எஸ் வி இசையில் மலர்ந்த பாடல் . ரசிக்க இணைப்பு இதோ
Anubavam pudhumai [1967] kannadasan ,
அதே படத்தில் அமைந்த நகைச்சுவை பாடல் கண்ணதாசன், எம் எஸ் வி, குரல் மனோரமா
ஞ்சில் ஓர் ஆலயம் பட பாணியில் அமைந்த நகைச்சுவை -டி ஆர் ராமச்சந்திரன், மனோரமா பங்குபெற்ற காட்சி. பாடலை நன்கு உள்வாங்கி காணுங்கள் . ரசனை மிக்க அமைப்பில் பாடல் . ரசிக்க இணைப்பு இதோ
தொடரும்
No comments:
Post a Comment