Thursday, December 5, 2024

TR RAMANNA -3

 TR RAMANNA -3

VELLIKKIZHAMAI  [NEE- 1965] VAALI MSV, PS 

வெள்ளிக்கிழமை [நீ -1965]                                                          வாலி, எம் எஸ் விஸ்வநாதன் , பி சுசீலா

ஏன் எம் எஸ் வி பெயரை முழுமையாக எழுதி உள்ளேன் ? காரணம் உண்டு, வி -ரா பிளவுபட்டு , ஒரு தொய்வுக்குப்பின் எம் எஸ் வி இசை அமைத்த முதல் படம் அதன் பின்னரே அவரது இனிஷியல் எம் எஸ் என்று தெரிய ஆரம்பித்தது. அப்போது நீண்ட நட்பில் விழுந்த முறிவினால் எம் எஸ் வி சோர்ந்திருந்தார் என்று சொல்வர். அதைக்கண்ட வாலி , பாடல் எழுத வந்தவர் ராமண்ணாவிடம் இன்னிக்கு என்ன கிழமைய்யா என்று கேட்டு 'வெள்ளி" என்று ராமனா சொல்ல, எம் எஸ் வியை உற்சாகப்படுத்த எண்ணிய வாலி, சார் நல்ல வெள்ளிக்கிழமைல வேலைக்கு வந்திருக்கோம் நல்ல உற்சாகமா வேலையைப்பார்ப்போம் என்று சொல்லி "வெள்ளிக்கிழமை விடியும் வேளை "   என்று மங்கள துவக்கம் தர, பின்னர் எம் எஸ் வி திரை இசையில் செலுத்திய கவனமும் ஆதிக்கமும் இன்றும் உலவிடும் மகோன்னதங்கங்கள். பாடலுக்கேற்ற ராகமும் இசையும் இப்படத்தின் அனைத்து பாடல்களுமே புகழின் உச்சியை எட்டியவை. சுசீலா வின் குரலில் மிகவும் வரவேற்பு பெற்ற பாடல் , ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=tamil+movie+nee+1965+vellikizhamai+video+song+download&newwindow=1&sca_esv=332c1457e26e21ac&sxsrf=ADLYWIIMsZLQAB0bbRrsfBobmDEKaFzZRA%3A1732255746775&ei=AiBAZ7aDL8mO4-EPpZOO0AQ&oq=tamil+movie++NEE+1965+VELLIKIZHAMAI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiL3RhbWlsIG1vdmllICBORUUgMTk2NSBWR

VARUSHATHTHAPAARU 66, [KUMARIPPEN, 1966] KD MSV LR E

வருஷத்தப்பாரு 66 [குமரிப்பெண் -1966] கண்ணதாசன் எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி குழுவினர்.

 இந்தப்பாடல் அடைந்த வெற்றி மகத்தானது. அதிலும் ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  மிகவும் புரட்சி வகை. தயாரிப்பாளர் ஒருவர் கண்ணதாசனிடம் சார் ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  ஸ்டைல் ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க என்று கேட்க அது என்னய்யா என்றாராம் கண்ணதாசன் . சார் உங்க பாட்டு தான் சார் என்று வந்தவர் சொல்ல, யோவ் ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  னு எல்லாம் நான் எழுதினதே இல்லை    போ ய்யா என்று விரட்ட , வந்தவர் சார் எம் எஸ் வி கிட்ட கேளுங்க சார் குமரிப்பெண் படத்துல நீங்க தான் பாடலாசிரியர் என்று விடாமல் துரத்த, ஸ்டூடியோவில் எம் எஸ் வியிடம் கண்ணதாசனுடன் போய் கேட்க, ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  பற்றி கண்ணதாசன் "என்னடா இது -என்னமோ ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  னு நான் எழுதினேன் னு என்னை தினமும் தொந்தரவு பண்றார். , எப்படா நான் ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  னு எழுதினேன் ? . எம் எஸ் வி தொண்டையை கனைத்துக்கொண்டு, அண்ணே ராமண்ணா சார்  " விசு காலேஜ் பொண்ணுங்க கூத்தடிக்கிறாங்க அதுக்கேத்தமாதிரி ஏதாவது செய்யுங்க“ன்னார்; நான் தான் ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாக்கடி  ஜிஞ்சின்னாக்கடி, ஜிஞ்சின்னாஒரு கோரஸ் வெச்சேன் , வேற ஒன்னும் இல்லை அண்ணே என்றார். பாவி நீ எதையாவது பண்ணிடற , அது மாதிரி பாட்டு வேணும் னு கேட்டா எனக்கு ஒன்னும் புரியலடா என்று அன்பாக கடிந்து கொண்டாராம் . ரயிலில் பயணிக்கும் பெண்கள் ரவிச்சந்திரனை கிண்டல் செய்து பாடி ஆடும் காட்சி. ரயிலின் போக்குக்கேற்ற இசை, கும்மாளம் என பெரும் வெற்றி ஈட்டிய பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=KUMARIPPEN+MOVIE+%27VARUSHATHTHAPPAARU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=c744cb070de47b7e&sxsrf=ADLYWIJgc-335ySTjhTRL7-fGVDrHMI9wg%3A1732527000247&ei=mENEZ_7WDv-_4-EPi-T5qAM&ved=0ahUKEwj-gqeDlveJAxX_3zgGHQtyHjUQ4dUDCBA&oq=KUMARIPPEN+MOVIE+%27VARUSHATHTHAPPAARU+VIDEO+SONG+&g RHYTHM, TUNE TRAIN SYNCHRONY

 

VANDHAL ENNODU [NAAN-1967] KD TK R L R E

வந்தால் என்னோடு [நான் -1967] கண்ணதாசன் , டி கே ராமமூர்த்தி .    பி சுசீலா

நான் படத்தின் இசை டி கே ஆர் வழங்கியது. மேற்கத்திய ஸ்டைல் இல் பாடல் வேண்டி எதுப்பட்ட பாடல் தான் இது. பெரும் வெற்றி அடையாத பாடல் இது, எனினும் இதன் தாய் ஒரு ஆங்கிலப்பாடல். ஆங்கில மெட்டிற்கு சொல் அமைத்த கண்ணதாசன் , இசை அமைத்த டி கே ஆர் அப்படியே ஆங்கிலமெட்டை அடியொற்றியுள்ளார்.  தமிழில் சுசீலா பாடியுள்ளார் இணைப்பு இதோ

https://www.google.com/search?q=naan+1967+tamil+movie+vandhaal+ennodu+video+song+download&newwindow=1&sca_esv=332c1457e26e21ac&sxsrf=ADLYWIJS24zY1aD67-mB-1nw44hNVfsnnQ%3A1732257309691&ei=HSZAZ7v4KaiT4-EPgIP94Ao&oq=naan+1967+tamil+movie+VANDHAAL+ENNODU+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMW5hYW4gMTk2NyB0YW1pbCBtb3ZpZSBWQU5ESEFBTCBFTk5PRFU

சரி 'தாய் ' இசைகம் செப்டம்பர் ஆங்கில படத்தில் மேற்கத்திய இசை வல்லுநர் பில்லி வான் [Billi  vaughan ]வழங்கிய இசை அந்நாளில் உலகளாவிய வெற்றி ப்பாடல்.[BERLIN MELODY] கேட்டு ரசியுங்கள் பீலி வான் குழுவினரின் இசை அட்டகாசம்   தன்னை. இணைப்பு இதோ 

COME SEPTEMBER –‘BERLIN MELODY’  BILLYVAUGHN ORCHESTRA

https://www.youtube.com/watch?v=eocjex-Kffs

பின்னர் சந்திப்போம்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...