ANGER AND EGO- 6
கொந்தளிப்பும் அகம்பாவமும்-6
இந்நிலை மாற்றிட என்ன வழி.
? அது என்ன- அவ்வளவு எளிதா? அதன் வேர்களைப்புரிந்து கொள்வது அவசியம். அதற்கான செயல் முறைகளை, பின்னர் காண்போம்.
கோபமும் அகம்பாவமும் பின்னி ப் பிணைந்த மன நிலைப்பாட்டுக்கள். ஒன்றி லிருந்து, ஒன்று கிளைத்தெழும்; எனினும் அகம்பாவம் மிக எளிதில் கோபத்தை வேரூன்ற செய்யும் .
இவ்விரண்டும் மனம் சார்ந்தவை என்பதனால், இவற்றை மெல்ல மெல்ல வே வெளியேற்ற முடியும். உடல் உபாதைக்கு மருந்து உதவும் ; மன உபாதைக்கு, வெகு நிதானமாக 'புரியவைக்கும் முயற்சிகள்' தேவைப்படும். முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுதல் அவசியம்;
நாம் நம்மை முறையாக கட்டுப்படுத்தாமல் அகம்பாவம் கொண்டு செயல் பட்டால் ஊர் உலகம் நம்மை திருத்தும். அது பல நேரங்களில் 'நையப்புடைத்தல்" வகை ஆயுதத்தை கையில் எடுத்து பொதுவெளியில் , ஆடைகளுடன், உடலையும் கிழித்துக்குதறி வெளியில் தலைகாட்டவொண்ணாத நிலைக்கு தள்ளிவிடும்.
அகம்பாவத்தை கைக்கொள்வதை விட பேரழிவிற்கு வேறு உத்திகள் உளவா எனில் -இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.
இந்த அவலங்களை தவிர்த்தல் நலம். ஆனால் வந்த பின் நீக்குதல், என்பது மிகுந்த
போராட்டத்திற்குப்பின்னரே சாத்தியப்படும், ஏனெனில் அது மனநலம் சார்ந்த அணுகுமுறை. எனவே
இதுநாள் வரை மனம் போன படி பேசியும் செய்தும் வந்த நபர்--- கவனம், முற்றாகப்பின்பற்றும்
ஒழுங்கு நிலை வழுவாதிருத்தல் எனஇனி ஒரு குறுகிய கட்டுக்குள் இயங்குதல் அத்துணை எளிதன்று.
அவ்வப்போது, மனம் எல்லை மீறத்துடிக்கும்.
எனவே, ஒரு மனப்போராட்டத்தின் பின்னரே, மனநிலை சீரான செயல் நோக்கி தன்னை வழிநடத்தும்..
மனம் சார்ந்த எந்த உத்தியையும், நிதானமாகவே தான் மேற்கொள்ள இயலும். இதனை முற்றாக உள்வாங்கிக்கொண்டால் மட்டுமே, ஈகோ
நிலை மெல்ல நீங்கி மனம் பிறர் போல் இயங்க முயலும். இதனை மிக நன்றாகப்பதித்தல் அவசியம்.
அதன் பிறகே வெவ்வேறு படிநிலைகளாக ஈகோ அடக்குதல் [EGO BLASTING ] துவங்க முடியும். சுமார்
10 விதமான நுண்ணிய செயல் மாற்றங்கள் கொண்டு, ஈகோ வில் இருந்து வெளியே வர இயலும்.
அவை யாவை?
1 No Comparison -please :
பிறரோடு ஒப்பீடு செய்தல் தவிர்த்தல் நலம்
பிறரோடு ஒப்பீடு செய்தல் பலவித இன்னல்களைத்தோற்றுவிக்கும்
. ஒப்பீடு என்பது இரு சமநிலை அம்சங்களுக்கு மட்டுமே பொருந்தும். மனிதர்கள் இடையே நிச்சயம் மாறுபாடு இருப்பது இயற்கையின் அமைப்பு. அதை எப்படி புறக்கணிக்க இயலும்?
இந்த 'அவனைப்பார்' அவளைப்பார்' என குழந்தைகளை அறிவுறுத்த முயலும் பெற்றோரே --இதே'அவனைப்பார்' அவளைப்பார்' ஒப்பீடு உங்களையும் வேறொரு குழந்தையின் பெற்றோரோடு செய்ய முயன்றால் நீங்கள் மகிழ்வீர்களா? உடனே அவர்களுக்கு உயர் பதவி, வீட்டுக்கு வேலை க்கு ஆள், சொந்த வீடு ஊரில் நிலம், நீச்சு இருக்கு நமக்கு என்ன இருக்கு? என இருசாராரும் தத்தம் மாமனாரை வில்லனாகப்பார்க்கிறீர்கள்;
ஆனால் குழந்தைகள் மட்டும் போட்டியில் வெல்ல வேண்டும்.
யோசியுங்கள் உலகின் வெற்றியாளர்கள் பலரும் பின்னாள் மலர்வுகள் \ late blooms
-என்று புரிந்துகொள்ளுங்கள். அறிவு வளர அருகில் இருந்து கற்றுக்கொடுங்கள் , ட்யூஷன் எனும் மாயையை தவிர்ப்பீர்
இப்படி சொல்லிப்பாருங்களேன்.."எல்லோரும் உன்னைப்பார்க்கும் படி நன்றாகப்படி , ஒழுக்கமாய் இரு , நீ முன்னேறலாம்" இதை ஏன் சொல்லக் கூடாது ? நமக்கு மனோதிடம் இல்லை . நிலவைக்காட்டி சோறு ஊட்டுவது வேறு , பிறரைக்காட்டி படிக்க தூண்டுவது வேறு.. .பின்னது-- தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடும்.
தாழ்வு மனப்பான்மைக்கு சாமரம் வீசி, பீடத்தில் அமர்த்திவிட்டு பின்னாளில் புலம்பாதீர்கள். ஒப்பீடுகள் தேவை இல்லை. ஒவ்வொருவருக்கும் திறமை வெவ்வேறு வகைகளில் இருக்கிறது. அதை ஊக்குவிக்க வழி தேடுங்கள். நாமே ஏன் முன்னோடியாக இருக்கக்கூடாது என யோசியுங்கள், முறையான ஊக்குவிப்பு தெரியாவிடில் பேசாமலா வது இருங்கள். தவறான ஒப்பீடு தான் ஊக்கு வித்தல் என்று ஏமாந்து வாழ்வை சீர் குலைக்காதீர்க.ள். உங்கள் ஊக்குவிப்பு பின்னாளில் பஸ் ஸ்டாண்டில் ஊக்கு விக்க அதாவது safety pin விற்க வேண்டிய நிலைக்கு தள்ளும் .
தவறான ஊக்குவிப்பு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவிக்கும். அதனால் குழந்தை தோற்று வைக்கும் ; உடனே விசிறி க்கட்டை / விளக்குமாறு அடி என்று தாக்குதல் துவங்காதீர்கள் .
பாடத்தை விளங்குமாறு விளக்கும் மாறு கேட்டால் உங்களால் செய்ய முடியுமா? நம்மால் இயலாத ஒன்றை சிறுவனோ சிறுமியோ உடனே 100/100 செய்ய வேண்டும்.
ஆசா துக்கஸ்ய காரணம் [ஆசையே துக்கத்திற்கு காரணம்] என்ற புத்தரின் அருள்வாக்கு நம்மை வழிநடத்தினால் ஆசைக்குரிய தகுதியைப் பெறுதல் பற்றி நம்மை சிந்திக்க தூண்டும். முடவன் கொம்புத்தேன் போன்றதே தகுதியின்றி முன்னேற யத்தனித்தல். இவைகுறித்த தெளிவு வரும்போது ஈகோ, தானே விலகும் .
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment