G PAY JEEVAA-2
ஜீ -பே –ஜீவா-2
ஜீவாவின் பண்பு அப்படி. இதைத்தான் நாம் இறையருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கொழுத்த பணக்காரர்களின் இல்லங்களில் இல்லாத அமைதியும், நிறைவும் ஜீவாவின் குடிசையில் இருந்தது எனில் அது இவனது பண்பிற்கு இறைவன் வழங்கிய ஆசி எனில் தவறல்ல.
அன்றாட வாழ்வியல் மாற்றங்களில் சிக்கி சிதைந்தவை தையல் தொழிலும் செருப்பு தைக்கும் தொழிலும் எனில் மிகை அல்ல. ஆனால் காலச்சக்கரம் சுழலும் போது இவை மீண்டும் உயிர்த்தெழுதல் சாத்தியமே. ஏனெனில் செருப்புகளின் விலை பன் மடங்கு உயர்ந்துள்ள இன்னாளில் , சிறு சிறு தேய்மானங்கள், ஒட்டு பிரிதல்நிகழ்வுகளுக்கு புது பொருள் வாங்குவது எளிதும் அல்ல விவேகமும் அல்ல. இப்படியெல்லாம் துயர்கள் துரத்தும்போது பாவம் . ஜீவா என்ன செய்வான், போராடிக்கொண்டிருந்தான். எட்டு ரூபாய் 7 ரூபாய் என்று கூலி கேட்டால் , சில்லறை இல்லை என்று 5/-ரூபாயைத்தந்துவிட்டு அகன்று செல்லும் நபர்கள் அதிகமாகிவிட்டனர் அன்றாட வருமானம் குறைந்தது , என்ன செய்வதென்று தெரியவில்லை.
. ஹோட்டல் முதலாளி இவன் நிலைமையை ஊகித்துவிட்டார். இங்கே வா என்றழைத்து அவனுக்கு ஒரு அறிவுரை சொன்னார். இதோ பார் காலம் மாறிக்கொண்டிருக்கிறது நீ 6 , 7 , 8 ரூபாய் கூலி கேட்டா ல் , 5 ரூபாயை க்கொடுத்து உன்னை கட்டுப்படுத்துவார்கள். அதனால் நீ கூலி யை 10/- , 20/-
30/- என்று கேள் .
அதோடு ஜீ பே அல்லது
pay tm வைத்துக்கொள் உள்ளூர் ஸ்டேட் பாங்கில் கணக்கு துவங்கி ஒரு டிஜிட்டல் வழியை ஏற்படுத்தி
QR Code அட்டையையும் வாங்கி ,
இதை கடையில் வைத்துக்கொள் , இந்த அக்கவுண்டில் தொகையை போட சொல் ,
எவனும் ஏமாற்ற முடியாது என்று அவனது நிலையை சீராக்கினார் கோவிந்த ராவ்
இப்போது 10/- 20/- என்று நிர்ணயித்ததனால், சிறிது வருமானம் கூடியது; மேலும், சில்லறை இல்லை என்ற துயர் இன்றி தொழில் மேம்பட்டது.. இந்நிலையில் ஒருநாள் காலை ஒரு படாடோபமான ஆள் புத்தம் புதிய ஷூ அடிப்பகுதி முதலை வாய் போல் பிளந்து சுமார்
17 அங்குல சுற்றில் கால் வெளியே தெரிய , நடக்கவே இயலாது என்ற நிலையில் ஜீவாவின் கடையில் நின்று கொண்டு ரிப்பேர் செய்து தருவீர்களா என்று கேட்டுக்க்கொண்டிருந்தார் ஜீவாவின் தங்கையிடம்; கொஞ்சம் இருங்க இப்ப அண்ணன் வந்துரும் , அதுக்கு தான் வேலை தெரியும் என்றாள் அவள். அடுத்த 3
நிமிடத்தில் ஜீவா வந்தான் . செருப்பைப்பார்த்ததும் இது முக்கால் மணி நேரம் வேலை வாங்கும் என புரிந்து கொண்டான். கூலியாக
75 ரூபாய் கேட்டான். அந்த படாடோபம் என்னப்பா செருப்புவிலையே கேக்குற -ரொம்ப அநியாயமா இருக்குது என்றார்.
தொடரும்
No comments:
Post a Comment