ANGER AND EGO -9
கொந்தளிப்பும் அகம்பாவமும்-9
கோபத்தின் விளைவாக கொந்தளிப்பும், பிறரை குறைத்து மதிப்பிடுவதால் தோன்றும்
[ஈகோ] அகம்பாவமும் இணைந்தே தோன்றும் நோய்கள். பொதுவாக நோய்கள் ஒரு குறிப்பிட்ட வயது
கடந்தோர்க்கு தோன்றுதல் உடல் ரீதியான விளைவு; ஆனால் மன ரீதியான ஈகோ எப்படி அறியாப்பருவத்திலேயே
துளிர்த்து வளருகிறது?
இன்னதுதான் காரணம் என்று அறுதியிட்டு, உறுதியாகப் பேசமுடியடவில்லை என்பதே ஈகோவின்
அலங்கோல மன ஆதிக்கத்திற்கு சான்று. எனினும், மனித மன நலம் குறித்த அச்சமும் தேவையும்
அனைவர்க்கும் இருக்கவேண்டிய ஒரு தெளிவு. அது தேவை இல்லை என்று நினைப்போர், பேரபாத்தை
வரவேற்பதை தவிர்க்க இயலாத சூழலை எதிர்கொள்வர்.
ஒன்றை நம்மால், புரிந்துகொள்ள இயலும்.
சிறு குழந்தைகள் அகம்பாவம் பற்றுதல், குடும்பச்சூழலால் தோன்றி பின்னர் விஸ்வரூபம்
கொள்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏதேதோ காரணங்களால் பதவியும் வசதியும் வந்துவிட,
மக்களுக்கு அறிவின்பால் நாட்டம் குறைந்து, நினைத்ததை நிறைவேற்ற பணமும் பதவியும் போதும்
என்றே 'மாயையில்' வீ [வா]'ழ்கின்றனர். வீட்டிலும்
அது போன்ற அகம்பாவ உரையாடல்கள் அரங்கேற, குழந்தைகளுக்கும் இந்த மனோவியாதி பாரம்பரிய [hereditary
affliction] பீடிப்பாக உருப்பெற்று, விரைவில் உரமிட்ட செடியாக
நிலை பெறுகிறது. இதனால் சொல் / செயல் இரண்டிலும் வரம்பின்றி பிறரை இழிவு செய்யும் நிகழ்வு
ஏதோ தனது திறமையை பறைசாற்றுவதான செயல் என்று மயங்கி, பின்னாளில் 'உதவாக்கரை' என்ற ஊராரின்
மதிப்பீடு கிடைக்கப்பெற்று , திரும்ப இயலாத புள்ளிக்கு [point of 'no return'] நடு வாழ்வில் [mid
-life] தத்தளிக்கும் நிலையில், பெற்றோரும் உதவிட இயலாத
'கையறு நிலை'யை அடையும்போது எவரால் என்ன செய்ய இயலும்? .
இது நிச்சயம் ஈகோ தரும், [எவரும்] விரும்பாத வெகுமதி என்பதே எனது சிற்றறிவு
உணர்த்தும் 'எச்சரிக்கை'.
எனவே ஈகோ வை அடக்குவதை அறிந்தால், அதன் தீமைகளிலிருந்து பெரிதும் விடுபடலாம்.
அவற்றிற்கான எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதாக உளவியல் அறிவுரைகள் உள்ளன. சிலவற்றை இது
வரை பார்த்துள்ளோம் எஞ்சியவற்றில், சில இன்றைய
பதிவில்
PRIORITIZE LEARNING
அறிதலை [கற்றலை] முன்னிலைப்படுத்துக
எந்த வயதிலும், கேட்டு அறியும் [கற்கும் மனநிலையை பின்- பற்றத்துவங்கினால்,
குறைந்த
பட்சம்
, பிறர்
நம்மைவிட
உயர்
நிலையில்
[அறிவுசார்
பண்புகளில்]
இருக்கின்றனர்
என்பது
புலனாகும்
. அப்போது
ஆ
, அவனு[ளு ]க்கென்ன தெரியும், இவனு[ளு] க்கென்ன தெரியும் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசாமல் மனம் சற்று அமைதி கொண்டு யோசிக்கத்துவங்கும்.
கருத்தாய்வு
[யோசித்தல்]
துவங்கிவிட்டால், செவிமடுத்துக்கற்க வேண்டியன பல தருணங்கள் வாழ்வெங்கணும் , தோன்றிக்கொண்டே இருப்பதை நன்கு உணரலாம். இதுதான் மனித மன சஞ்சலங்களை கட்டுக்குள் வைத்து அடங்கி ஒடுங்கி செவிப்புலன் வழியே . ஏற்று புரிதலை செம்மைப்படுத்தும்.
கற்றலின் கேட்டல் நன்று எனும் முதுமொழி தெரிவிக்கும் கருத்தும் இதுவே. தெரிந்து கொள்ள முயலும் எவர் மனத்திலும் 'தான்' என்ற அகம்பாவம் குறையத்துவங்கும்,
மறையத்துவங்காது. ஏனெனில் சிறிது கற்றவு டன் , வேறு வகை அகம்பாவம் துவங்கப்பார்க்கும் –
அது-- எனக்கு 'அது ' தெரியும், 'இது' தெரியும்-- போன்ற ஒரு ஆதிக்க உணர்வு. அதனை, உடைத்துத்தகர்த்தல்
மிக
எளிது.
அதாவது, உனக்கெப்படித்தெரியும்?
அவர் /
இவர்
சொல்லித்தானே
தெரியும்,
எனில்
சொன்னவர்
நம்மிலும்
உயர்ந்தவர்
அன்றோ
என
நினைவுபடுத்திக்கொண்டால் ஈகோ மெல்லப் பின்வாங்கும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் இதை சொன்னவர் யார்? அவர் சொன்னது என்ன? என்றெல்லாம் 'அசை' போடத்துவங்கினால் ஈகோ, மெல்ல அடங்கி ஒடுங்கத்துவங்கும். எனவே கற்றலை]முன்னிலைப்படுத்த [prioritize செய்ய], ஈகோ விலகத்துவங்கும்
. எனவே
ஈகோ
வை
ஒடுக்க,
தற்பெருமை
நினையாமல்
, அறிவு
மேம்பாட்டிற்கான 'கற்றல் 'முயற்சிகளை முன்னெடுத்தல் சிறந்த பலன் [ஈகோ குறைந்த, அறிவு தெளிந்த நிலை ] தரும்.
TIGHT FOCUS ON EFFORT
பிடி தளராத முயற்சியை கைக்கொள்ளுதல்
.
தமிழில் 'மயான வைராக்கியம்' , 'பிரசவ வைராக்கியம்' என்ற சிலதாற்காலிக வைராக்கி
யங்கள் அவ்வப்போது பேசப்படும் . அவை, அப்போது மட்டும் பயன்தரும் [ஊக்கம் தரும்] சூளுரைகள்
.அவற்றால் பயன் இல்லை. மாறாக சில 'அசைக்கவொண்ணா வைராக்யங்கள் ' தனி மனித மேம்பாட்டிற்கு
மிகவும் அவசியம்.
அது யாதெனில் --'நான் முறையான முன்னேற்றம் காண்பேன் ' நியாயமாக போட்டியில் வெல்வேன்'
போன்ற சில தன்னம்பிக்கை நிலைப்பாடுகள்.
இவ்விரண்டு சூளுரைகளுக்கும் அடிப்படை தகுதி -- 'விடா முயற்சி' [relentless effort or pursuit]. அதாவது 'எனது தேவை சுயசார்பும், பெருமித வெற்றியும் ' -அவற்றை நான் , தளரா உறுதியுடன் வென்றெடுப்பேன் என்ற நிலைப்பாடு
மட்டுமே வெகுவாக உதவி செய்யும் . ஆங்கிலத்தில் STEADFAST ADHERENCE என்ற ஒரு
அழகான சொல் அமைப்பு தரும் உந்துதல் -விடாப்பிடியான பற்றுதல் [தளரா முயற்சி] என்பதாகும்.
தளரா முயற்சி நம்மை முறையான வெற்றிப்பாதையில் கம்பீரமாக வழி நடத்தும். அதன் முடிவில்
நாம் ஈட்டும் வெற்றி, உண்மை யிலேயே, நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் . அவ்வகைப்பெருமிதம்
இறுதி வெற்றி தரும் பெருமை [ஈகோ] அல்ல, மாறாக அது நமது உழைப்பின் மகத்துவம் தரும் மன
நிறைவினால் தோன்றும் கௌரவம் குன்றாத பெருமிதம்..
அது ஈகோ விற்கு எதிரான வலுவான எதிரி என்பதால் அது முயற்சியின் அங்கீகாரம் என்ற பெருமிதம்,
குறுக்குவழியில் ஈட்டிய வெற்றி தரும் [நான் ஜெயித்துவிட்டேன் என்ற] ஈகோ அல்ல.. எனவே
இடையறா முறையான வெற்றி நேர்மையின் வழியில் அமைவதால் ஈகோ என்ற மன நோய் கடந்த, உள்ளம்
கவரும் வெற்றி.
ஆகவே உழைப்பினால் ஈட்டும் பெருமை நீடித்து நிலைத்த பேராற்றலின் அடையாளம்
பிற பண்புகள் குறித்து பின்னர் பார்ப்போம்
நன்றி
அன்பன் ராமன்
Very profound article. I wish you send it to dhinamani. RK
ReplyDelete