CV RAJENDRAN -5
சி வி ராஜேந்திரன்-5
இனியவளே [சிவகாமியின் செல்வன் ] எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா , புலமைப்பித்தனின் வரிகளில் மிளிர்ந்த வெற்றிப்பாடல்.
வழக்கம் போல்சி வி ஆரின் ஆளுமை வெளிப்பட்ட படப்பிடிப்பு. மிக வலுவாக இசைக்கோலங்களை உருவாக்கவல்ல எம் எஸ் வி, மிகக்குறைந்த கருவிகளைக்கொண்டு உருவாக்கிய நேர்த்தியான பாடல். கேட்டல் என்னவோ நிறைய கருவிகள் போல் தோன்றுகிறது. கூர்ந்து கவனித்தால் தாளக்கருவிகளின் ஆதிக்கம் நம்மை வயப்படுத்துகிறது. 3 க்கு மேற்பட்ட தாளக்கருவிகள் பின்னிப்பிணைந்து தோற்றுவித்த மாயை. ,தாளங்கள் கரணம் தப்பினால் மரணம் வகை . மட்டுமல்ல இப்பாடலில் உள்ள தாளக்கட்டுகள் வெறெந்தப்பாடலிலும் காண முடியாதவை. மேலும் பாடகர்கள் குரலிலேயே ஹம்மிங்கும் இடம் பெற்று துவங்குவது மாறுபட்ட ஆக்கம். வெகு நேர்த்தியான எதிரொலியை பாடலின் துவக்கத்தில் கேட்கலாம். இணைப்பு இதோ
sivakamiyin selvan 1974 tms ps pulamaipiththan ,beats
ஆனந்தம் விளையாடும் [சந்திப்பு -1983] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், பி
வெகு நாட்கள் கழிந்தபின் தமிழ் சினிமாவில் வெளிவந்த அமைதியான குடும்பப்பெருமை ஆற்றிய பாடல். வாலியும் , சூழ்நிலைக்கேற்ப கவிதை புனைந்துள்ளார். இசையில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக மென்மையாக அரங்கேறிய பாடல் இயக்கம் சி விராஜேந்திரன் .
பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=AC1qK5qxYwo AANANDHAM VILAIYADUM VEEDU SANDHIPPU
1983 VAALI MSV TMS PS
அங்கம் புதுவிதம் [வீட்டுக்கு வீடு 1970] வாலி , எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியன், எல் ஆர் ஈஸ்வரி
ஒரு வினோத டூயட். ஆம் பெண் ஆண் நபரைப்பார்த்து வாய்யா இங்கே என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக துவங்கும் பாடல். லட்சுமி காதலை முன்னெடுக்க, ஜெய்சங்கர் பயந்து நடுங்கும் முகபாவத்துடன் பாடலின் துவக்கம் , இருவரின் முகபாவங்களையும் நன்கு கவனித்தால் நன்றாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். தவற விடாதீர்கள். இந்த மன நடுக்கத்தை உணர்த்துவது போல் டகு டகுங் டகு டகுங் என்று தாள ஒலியுடன் பாடலைத்துவக்கியுள்ளார்.எம் எஸ் வி. ஆரம்ப பயம் நீங்கியபின் ஆணின் குரல் ஓங்கி ஒலித்துப்பயணிக்கிறது.எல் ஆர் ஈஸ்வரிக்கு இது போன்ற பாடல்கள் ஹல்வா சாப்பிடுவது போல ஒரு சர்வ அலட்சியம் ' எஸ்பி பி, எல் ஆர் ஈ இருவருமே சிறப்பாகப்படியுள்ளனர். இறுதியில் ஜெய்சங்கர் சோர்ந்து உட்காருவதாக நல்ல ரொமான்டிக் வகைப் பாடல் . இணைப்பு இதோ
VEETTUKKU VEEDU 1970
ANGAM PUTHUVIDHAM SPB LRE
வசந்தத்தில் ஓர் நாள் [மூன்று தெய்வங்கள் ] கண்ணதாசன் , எம் எஸ் வி, பி சுசீலா
கண்ணதாசனின் தனிச்சிறப்பு யாதெனில் மரபு வளர்த்த மாண்பினைக்காத்து சொல் விளையாட்டில் திறன் வெளிப்படுத்துவது. நான் அறிந்த வரை வைணவ மரபில் உலவும் வைதேகி என்ற சொல்லை திரையில் பயன்படுத்தியவர் கவி அரசர். பக்தி இலக்கியம் அவர் நன்கு அறிந்த ஒன்று அதனால் எப்போது வேண்டுமானாலும் மாற்றுச்சொல்லை பயன் படுத்துவார். இப்பாடலும் அப்படி ஒன்று தான். பாடல் வெகு மங்கலமாக இசைப்பதையும் பொருத்தமான சூழலில் நாதஸ்வரம் முழங்க இடை இசை தொகுக்கப்பட்டு அந்நாளில் பலரும் விரும்பிக் கேட்ட பாடல் இணைப்பிற்கு .
MOONDRU DEIVANGAL 1971
கடைசி பாடல் வரவில்லை
ReplyDeleteNice songs from CVR / MSV team.
ReplyDelete