Wednesday, January 8, 2025

TM SOUNDARARAJAN-37

 TM SOUNDARARAJAN-37

டி எம் சௌந்தரராஜன்-37

இன்றைய பதிவில் மீண்டும் டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் தான் எனினும் அவை வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்த திரைப்படங்களில் இடம் பெற்றவை. அதில் சிறப்பு அம்சம் யாதெனில் அவ்வப்போது கவிதையின் வடிவமும், இசையின் பயணமும் வெவ்வேறு அவதாரங்கள் பூண்ட தன்மைதனை , அந்தந்த இசை அமைப்பாளர்களின் பாதையில் பயணித்து பாடல்களை வழங்கியுள்ளார்.

மேலும், இசை அமைப்பாளர்களின் தேர்வின் படியே வெவ்வேறு பாடகிகளுடன் பாடியுள்ளார் அனைத்து பாடல்களும் கேட்கவும் ரசிக்கவும் உகந்தவை. அதே சமயத்தில் தமிழ்திரைப்பாடல்கள் முற்றாக தன்மை இழந்து தரம் தாழ்ந்து , மரபொழிந்து மனம் ஒடிந்து சிதைந்து காணாம;லே போய்விடுமோ என்ற நிலை தற்போது.

. குறிப்பாக சொற்கள் அவற்றின் உச்சரிப்பில் காட்டப்படவேண்டிய கவனம் இவை வெகுவாகக்குறைந்து, வட்டார மொழி, பேச்சு வழக்கு என பன்முக அடையாளங்கள்கிட்டத்தட்ட புதையுண்டு மீள வழியின்றி அமிழ்ந்து விட்டன என்று நம்மை வாட்டும் மனோ நிலை பழையபாடல்களை அறிந்த எவருக்கும் நிகழ்வது இயல்பு.

என்ன செய்ய இயலும்? கால வெள்ளத்தில் கரைந்து போவது தானே அனைத்து பண்புகளும் பழக்க வழக்கங்களும்? எனினும் பழைய பாடல் இருக்கும் வரை மனம் சோர்வுறாமல் காப்பாற்றிக்கொள்ள உதவும் .

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு  போலே [உத்தம புத்திரன் 1958 ] மருதகாசி , ஜி ராமநாதன் ,     டி எம் எஸ்,  சுசீலா

பாடகர்களின் திறன் நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அல்ல, அது  உலகிற்கே தெரிந்த உண்மை.

பழைய பாடல் தான் எனினும், நீண்ட நாட்கள் பட்டி தொட்டி எங்கும் நாள் தவறாமல் ஒலித்த டூயட். எந்த சொல்லும் தரம் தாழ்ந்த வகையினது இல்லை என்பது திரு மருதகாசி யின் யாப்புத்திறனுக்கு சான்று. எனினும், பாடல் நெடுகிலும் காதலின் போதையும் , மனம் வென்ற இருவரின் பிணைப்பும் வெகு நேர்த்தியாக உலவக்காணலாம். அதுவும் இசை ராட்ஷசன் , ராமநாதனின் கம்பீர ஆளுமை பாடலை , ஓடும் நதியின் மீது உலவ விட அதில் பயணிக்கும் காதல், காதலர், இசையின் மேன்மை  என அடுக்கிக்கொண்டே போகலாம் . கவிதையின் சிறப்பு யாதாயினும், அதை உயரத்தில் மிதக்க விடுவதென்னவோ பாடும் முறையில் கையாளப்படும் ராக அமைப்பு , குரலின்  நேர்த்தி மற்றும் கருவிகளின் இயைந்த இணக்கமான பயணம் இவை தான். இவை அனைத்தையும் இப்பாடலில் சிறப்பாக வழங்கியுள்ளார் திரு ஜி ஆர் அவர்கள். கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=mullai+malar+mele+video+song+download&newwindow=1&sca_esv=b5b0e98525aa10be&sxsrf=ADLYWIIs7ysicn1E5slyC7s382umQ4-WJg%3A1736258232293&ei=uDJ9Z6jCEciUseMPv9rXiAg&oq=mullai+malar+mele+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiHW11bGxhaSBtYWxhciBtZWxlIHZpZGVvIHNvbmcgKgIIADIFECEYoAEyBRAhGKABMgUQIRigATIFECEYoAEyBRAhGJ8FSLSLAVAAWO1ycAF4AZABAJgBrwGgAf4aqgEENS4yNLgBAcgBAPgBAZgCHqACmx2oAhTCAgcQIxgnGOoC mullai malar mele u puthran 1958 , maruthakasi gr tms ps  

மோஹனப்புன்னகை  வீசிடும் [ வணங்காமுடி- 1958] மருதகாசி, ஜி ராமநாதன் , டி எம் எஸ், பி லீலா

வெகு ரம்மியமான டூயட் அந்நாளில் வெகு பிரபலம் . இரு குரல்களும் இளமையின் ஒலியாக கேட்பது பரவசம் .எப்போதும் போல் ஜி ஆரின் பேராற்றல் பளிச்சிடக்காணலாம்/பாடலின் இறுதிச்சரணங்களில் லீலாவின் நீண்ட என்ற ஆலாபனை எளிதில் வலுசேர்க்கிறது கேட்டு மகிழ இணைப்பு இதோ 

 https://www.youtube.com/watch?v=wz3GlPhjmHE thanjai r das gr tms leelaa 1957

கொக்கற  க்கொக்கறக்  கோ சேவலே [பதிபக்தி -1957] பட்டுக்கோட்டை , வி ரா டி எம் எஸ், ஜிக்கி

 ஒரு பெண் அண்டைவீட்டு ஆண் மீது வயப்பட்டு பாடுகிறாள் இடையில் கோழி . அவனுக்கு அவள் மீது ஈர்ப்பு இல்லை ;அது பாடலில் இயல்பாக வெளியிட்டுள்ள கவிதை . எளிமையான இசை அந்நாளில் பெரும் வரவேற்பு பெற்ற பாடல் . டி எம் எஸ் வகை வகையான பாடல்களை பாடுவதில் வல்லவர்.பாடலுக்கு இணைப்பு இதோ

 

pathi bhakthi 1958 kokkarakokkarakko [v r], tms jikki

 https://www.youtube.com/watch?v=vHkziljMPWo

 ஆடாத மனமும் உண்டோ [மன்னாதி மன்னன் -1960]  மருதகாசி , விஸ்வனாதன ராமமூர்த்தி, டி எம் எஸ், எம் எல் வசந்தகுமாரி

முற்றிலும் கர்னாடக[ மரபில் வடிவமைக்கப்பட்ட நாட்டியப்பாடல் வி-ராவின் இசை வெளிவந்த 1960ம் வருடத்திய பாடல். விறுவிறுப்பான நடையும் தாள ஜதிகளும் -பாடலின் நுணுக்கங்களை பிரபதிபலித்து , இசை அமைப்பில் மிகுந்த கவனத்தை ஈர்த்த பாடல்.   நுணுக்கங்களுக்காகவே எம் எல் வி பெண்குரலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது புலனாகிறது. ,

https://www.google.com/search?q=aadaadha+manamum+undo+video+song&oq=aadaadha+manamum+undo+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMjA2OTNqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:150ffe8e,vid:QKW-_g2eSvY,st:0 mannadhi mannan  maruthakasi 1960 v r  mlv tms

QFR சுபஸ்ரீ யின் விளக்கம் மற்றும் அவரது குழுவின் பாடலையும் கேட்பீர் . இணைப்பு இதோ FOR PRODUCT     QFR 147

https://www.google.com/search?q=qfr+song+aadadha+manamum+undo+video+song&oq=QFR+SONG+AADADHA+MANAMUM+UNDO+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgCECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgKGKABMgcIBBAhGI8CMgcIBRAhGI8C0gEJMzM3OTBqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:47bddbee,vid:D6aQ0qjV0_c,st:0

 

தொடரும்                                 அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...