Wednesday, January 29, 2025

Director : AC THRILOKCHANDHER

 Director : AC THRILOKCHANDHER

இயக்குனர்ஏ சி திருலோக சந்தர்

தமிழ்த்திரையின் முக்கிய இயக்குனர்களுள்  நன்கு அறியப்பட்டவர் , கல்விமான் அந்த நாட்களில் சினிமா துறையில் M  A பட்டம் பெற்றிருந்த 3, 4 பேரில் AC T ஒருவர். பெரும்பாலும் வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர். ஆனால் இவருக்கென்று தனி முத்திரை உண்டு. அதிலும் பாடல்காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியவர். அவரின் முயற்சிக்கு பெருமை சேர்த்த சில பாடல்களைக்காண்போம். 

1962 இல் வெளிவந்த படம் எனில் பாடல் பதிவு 1961ன் பிற்பகுதியில் நடந்திருக்கும். அப்போதே இசை அமைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அரங்கேற்றிய நளினங்கள் , வியக்கவைக்கின்றன. அவர்களின் தனிச்சிறப்பு எப்போதும் பிசிறில்லாத 'தஞ்சாவூர் வாழை இலை கட்டு' போல சீராகவும் , அமைப்பு விலகாமலும்  இயந்திரங்களில் உருவாக்கியது போல் இருக்கும்.   இதைப்புரிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆயிற்று. எப்படி எனில் எல்லா பாடல்களையும் கேட்டிருந்தாலும் வி-ரா பாடல்களில் ஒலி -ஒருங்கிணைப்பு அற்புதமாக [PLEASANT BLENDING /SEAMLESS PROGRESSION] இசைப் பண்புகள் மேலோங்கி கம்பீரம் வெளிப்படும். அன்றைய என் வயதினர் பலரும் இதே உணர்வினால் ஈர்க்கப்பட்டு மெல்லிசைக்கு வயப்பட்டனர். 1963 இல் வி-ரா மெல்லிசைமன்னர்கள் என்ற சிறப்பு  . 'பட்டம்' பெற்றனர். பாவங்கள் விலகாமல் ராகங்களை உபயோகிக்கும் கலை அறிந்திருந்தனர். எனவே பாவத்திற்கு ராகத்தின் சாயல் போதும் என்றே செயல்பட்டனர். இதனால் அவ்வப்போது ஒரே பாடலில் மாறுபட்ட ராக சாயல்களில் பாடல் வரிகள் ஒலிக்க, ஆசாரமான கர்நாடக இசை வித்வான்கள் ஐயோ, ராகம் விலகிவிட்டது [ராகத்தின் கற்பு தொலைந்துவிட்டது என்பது போல] புலம்பினர்.

பத்திரிகைகள் -குறிப்பாக திரைப்பட விமரிசகர்கள் தொடர்ந்து குறை சொல்வதே விமர்சனம் என்று இயங்கிக்கொண்டிருக்க, மறுபுறம் ஆஸ்தான இசையமைப்பாளர்கள் என்ற பந்தம் தளர்ந்து, எந்த தயாரிப்பு நிறுவனமும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஜோடி தமது படத்தில் இசை அமைக்கவேண்டும் என்று பூரணகும்பம் எடுக்கும் நிலை வந்தது.

விமரிசகன்  புலம்பி    சாதித்தது என்ன?

ரசிகர்களின் ஏகோபித்த அங்கீகாரம் இழந்து விமரிசகன் வேலையற்றவன் என்ற அபவாதம் சுமந்தது தான் கண்ட பலன். 

படத்துக்குப்படம் வி-ரா வின் விஸ்வரூப வளர்ச்சி அரங்கேறிக்கொண்டே இருந்தது.

அதன் ஒரு அங்கம் தான் 'வீரத்திருமகன்' [AVM ] படத்தில் வி ராவின் இசை. [அதற்கு சில வாரங்கள் முன்பு AVM வழங்கிய 'பாவ மன்னிப்பு" இசை அமைப்பில் காட்டிய அமைதியான பூகம்பம் உலகே போற்றும் பாடகி லதாமங்கேஷ்கர்  . உள்ளிட்ட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது ]

இந்தப்பாடல் வெளிப்புறக்காட்சியாக நீர்நிலையில் அமைக்கப்பட்டிருந்த செட்டில்---

'நீலப்பட்டாடை கட்டி ' [வீரத்திருமகன் 1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி.

காட்சி அமைப்பைப்பார்த்தீர்களா?

இது போல் செட் அமைக்க முடியாது என்று ஆர்ட் டைரக்டர்கள் தயங்கிய போது , ஏவிஎம் செட்டியாரிடம்  இருந்த ஸ்டுடியோ தொழிலாளி ஆறுமுக ஆசாரி                    "தாமரைப்பூ, இலைகள் வட்டமா மிதக்கணும்  அவ்வளவு தானே செய்யலாங்களே , தெப்பம் மாதிரி செய்துறலாம் என்று 2, 3 நாட்களில்  செயல் படுத்தியது , மன வலிமை, ஈடுபாடு இரண்டிற்கும் எடுத்துக்காட்டு. 

அந்நாளில் பள்ளி, கல்லூரி விழாக்களில் குழு நடனம் நிகழ்ச்சியில் , இப்பாடல் பெரிதும் பயன்பட்டது. வெகு சிறப்பான இசை அமைப்பு , தாள நடை மற்றும் கோரஸ் என பன்முகம் கொண்ட பாடல் . படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒன்றுபோல் ஒன்றில்லை என்ற தனித்துவம் காட்டியவை. முதல் படம் என்பதால் ACT அவர்களின் கடும் முயற்சி பளிச்சிடுகிறது. நதி தீரத்தில் செட் அமைத்து நடன அபிநயங்களைக் கவனமாக படப்பிடிப்பு செய்தல் பெரும் முயற்சி சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்து என்று கேள்வி. இயக்குனர் சிறப்பாக படமாக்கியுள்ளார் இப்பாடலை . கூர்ந்து கவனியுங்கள் . இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=NEELAPPATTAADAI+KATTI+VIDEO+SONG&oq=NEELAPPATTAADAI+KATTI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRiPAtIBCTI1MzMwajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=  

செயலளவில் டூயட், பாடல்.  ஆனால் பாடல்ஒரு குரலில் ஒலிக்க , பெண் குரல் ஹம்மிங்காக அமைந்த பாடல்

 பாடாத பாட்டெல்லாம் [ வீரத்திருமகன்-1962] கண்ணதாசன் , வி, ரா, பிபி எஸ் , எஸ் ஜானகி .

ஜானகியை கண்டெடுத்ததாக உவகை கொள்ளும் மஹான்களே கவனியுங்கள்  , ஜானகி 1962ல் ஈவி சரோஜாவிற்காக வழங்கிய நேர்த்தியான ஹம்மிங்.. பாடல் பெரும் வெற்றி ஈட்டி நாளும் வானொலியில் ஒலித்த நினைவு மனதில் நிழலாடுகிறது. அக்கார்டியன், ஹார்மோனிகா, மாண்டொலின், கித்தார்  அனைத்து மென் ஒலிகளும் பின்னிப்பிணைந்த ரம்மியம். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=paadadha+paattellaam+video+song&oq=paadadha+paattellaam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhgeMgcIAxAAGO8FMgcIBBAAGO8FMgcIBRAAGO8FMgcIBhAAGO8F0gEJMjU5MzJqMGo3qAIIsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:44c443d3,vid:d0oE0MvPWN0,st:0 paadadha paattellaam  KD V R  PBS S J

ஏவிஎம் நிறுவனத்தில் திருலோகச்சந்தர் முக்கிய நபராக வளர்ந்துவிட்டார் - சான்று "அன்பே வா" படத்தை இயக்கும் பொறுப்பு அவருக்கே கிட்டியது. இதற்கிடையே வி-ரா பிரிந்து விட, பின்னர் பெரும் வெற்றிப்படங்கள் விஸ்வநாதனின் பராக்கிரமத்தில் விளைந்தவையே..

 லவ் பேர்ட்ஸ்லவ் பேர்ட்ஸ் [அன்பே வா 1966] வாலி, எம் எஸ் வி, பி சுசீலா

 வெகுநேரம் முயன்றும் வாலிக்கு சரியான பல்லவி பிடிபடவே இல்லை. AVM  குமரன் , எம் எஸ் வி இருவரும் மெல்ல பொறுமை குறைய, யோவ் நீர் தான் வெத்திலை போடுவீரே வெத்திலையைப்போடும் , ஏதாவது உதிக்கும் என்றார் எம் எஸ் வி, ஆமாம் சார் என்றார் குமரன். வாலி- நெனச்சேன் , ஆனால் மாடியிலிருந்து துப்பினா யார் மீதாவது படுமேனு பாக்கிறேன். உடனே குமரன் சார் இந்த ஜன்னல் துப்பலாம் கீழே யாரும் வர மாட்டாங்க என்று ஒரு இடத்தைக்காட்டினார். அவ்வளவு  தான் 10-12 வெற்றிலையை மென்று குதப்பியாயிற்று , வாய் கொள்ளாமல் வெற்றிலை குழைவு , சிவப்பு எச்சில் , இழுங்க [இருங்க] வழென்[வரேன் ] என்று வாலி ஜன்னலில் போய் கிர் கிர் என்று வாய் கொப்பளித்த நிலையில் வெளியில் குருவிகளின் இரைச்சல், வாலி ஜன்னலில் இருந்தே கேட்டார் -தமிழ்லதான் பாட்டெழுதணுமா,? ஐயா எதுலயாவது [தெலுங்குல கூட] எழுதுய்யா வேற ஒரு கம்போசிங் இருக்கய்யா எனக்கு என்று எம் எஸ் வி அலற. வாலிக்கு  பொறி தட்டிவிட்டது.குருவிகளின் கீச் கீச் ஒலியில் இருந்து LOVE BIRDS LOVE BIRDS என்று ஆங்கிலச்சொல்லில் துவங்கி மள      என்று 7 நிமிடத்தில் எழுதிவிட்டார் , கூடவே இன்னொரு 6 நிமிடத்தில் மொத்த ட்யூனும் ரெடி. அடுத்ததா நாள் பாட்டு ரெடி . வெகு ரம்மியமான பாடல் , அவ்வப்போது நடன அசைவுகளுக்கேற்ற சித்தார், மாண்டலின் இழைவுகள். அதில் தான் இசைக்கேற்ப காட்சியில் கண்ணாடியில் எம் ஜியார் அபிநயிப்பதை காட்டியுள்ளனர். நேர்த்தியான கம்பீரம், பிரம்மாண்ட காட்சி [ஊட்டி அரண் மூர் பேலஸ் ]       சி இடங்களில் மேக் அப் .அப்பிக்கொண்டிருப்பது [சரோஜாதேவிக்கு] அன்றைய வண்ண ஒளிப்பதிவில் அனுபவ பற்றாக்குறையை உணர்த்துகிறது. நன்கு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=love+birds+love+birds+video+song+&newwindow=1&sca_esv=75d2da38486ca9c2&sxsrf=AHTn8zoQm7_hstdLb3h7NUr17669u23d_A%3A1738060342329&ei=NrKYZ8XpE-mX4-EPtceviAI&ved=0ahUKEwjF3LWqm5iLAxXpyzgGHbXjCyEQ4dUDCBA&oq=love+birds+love+birds+video+song+&gs_lp=Egxnd3Mtd love birds anbe vaa vaali msv ps

தொடரும்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

Oh Language – a changing Scenario -3

  Oh Language – a changing Scenario -3 Before getting into scenario-3, I am obliged to respond to questions raised   in connection with Oh...