LET US PERCEIVE THE SONG -7
PAALIRUKKUM PAZHAMIRUKKUM -2
பாலிருக்கும் பழமிருக்கும் -2
சரணத்தில் ,
கட்டவிழ்ந்த கண் இரண்டும்
உங்களைத் தேடும் ,
பாதி கனவு வந்து மறுபடியும்
கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்,
கொண்ட பள்ளியறை பெண் மனதினுள் போர்க்களம் ஆகும் என்று 'ஆணை நினைத்து [காதல் கொண்டவள்] அல்லது ஆணின் பிடியில் [மணம் முடித்து முதன் முதலில் ஆண் அருகில் இருப்பவள்] என 'கொண்ட பள்ளியறை' என்று, சொல்லி அது போர்க்களம் என்று உவமை காண்கிறார். போர்க்களத்தில் எதிர் பார்ப்பும், படபடப்பும்[ஆசையும்,
அச்சமும் ஒன்றை ஒன்று முந்தும்] என்றே பொருள் காண்க.
அடுத்த சரணத்தில்
காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே [காதல் மொழி universal language என்ற உணர்த்தல்] வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே , அது வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே [காதலின் வீரியம் சிக்கியவனை சும்மா விடாது என்கிறார் கவிஞர்]
ஆனால் அன்றைய சென்சார் பொங்கி எழுந்து பாடலை வெட்டு என்றனர். படக்குழு வரியை மாற்றுகிறோம் என்று வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே என்ற சொல் வரிசையை வெகு அனுசரணையாக காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே என்று ஒரு நீண்ட வடிவில் பாடி நிறுத்தி பின்னர் டக் டக்
என்று தட்டி [காதல் மொழி universal
language என்ற அமைதியான உணர்த்தல்]
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே அது
மேகம் செய்த உருவைப்போல மாற வில்லையே என்று மீண்டும் படப்பிடிப்புக்கு வேலையில்லாமல் தப்பிவிட்டு, பின்னர் ரீரெக்கார்டிங்கில் புதிய சொற்களை பழைய மெட்டில் பாடி படத்தை நிறைவேற்றினர்.
பழைய சொல்வரிசையின் தீர்க்கமான நிறுவுதல் புதிய சொல் வரிசையில் இல்லை.
ஆனால்
இன்று சென்சார் எங்கே? என்று தேட வேண்டும். குழாயடியில் பேசும் வசைச்சொற்கள் படம் நெடுகிலும் விரவிக்கிடக்க யதார்த்தம் என்று பூசி மெழுகுவதையும் பார்க்கிறோம்.
இசை அமைப்பின் பங்களிப்பு
இப்பாடலின் ஜீவனை பரிமளிக்க வைத்த விந்தை, இசை அமைப்பில் கிடைத்த பொக்கிஷம் எனில் மிகை அல்ல. ஹம்மிங் இன்றி இப்பாடல் இந்த அளவு சோபிக்குமா? --கேள்விக்குறியே.
இசைக்கருவிகள் மிகுந்த அடக்கமாக ஒலித்த , சில பாடல்களில் இதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.
.NOTICE THE HUMMING
STRUCTURE IN MSV’s PRESENTATION
எம் எஸ் வி வழங்கிய ஹம்மிங்கில் மாறுபட்ட உருஅமைப்பை கவனியுங்கள்
பல்லவி
பாலிரு க்கும், பழமிருக்கும் ம் ஹு ஹூ ஹு ம் பசி இருக்காது ஒ ஹோ
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது [இப்போது ஹம்மிங் இல்லை ] ஆனால் தூக்கம் வராது என்ற பகுதியை தூக்கம்வராது என விரைந்து பாடுவது ஒரு பெண் உணர்வின் வெளிப்பாடாக அமைக்கைக்கப்பட்டுள்ளது பல்லவியின் முக்கிய பகுதிகளிலும் , இறுதியிலும் , தேவிகா அகல விரிந்த கண்களின் கூரிய உணர்வுகாட்டி, சிவாஜியை ஓரக்கண்களால் அளப்பதையும், அவ்வப்போது சிவாஜி கண்களால் மெலிய உணர்வு காட்டுவதையும் காமெரா வெகு நேர்த்தியாக படம் பிடித்துள்ளது. அவற்றை, தவறவிடாமல் கவனித்துப்பாருங்கள்.
[உங்கள் கண்களை மூடிக்கொண்டு பாடலுடன் நீங்களும் பாடாதீர்கள். இப்படி பாடி ப் பாடித்தான், பாடல்களின் மேன்மை மென்மை நளினம் அனைத்தையும் தொலைத்துவிட்டு எல்லாப்பாடலும் தெரியும் என்று சமாதானம் கொள்கிறோம்]
[இவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ள யதார்த்தம்]
பெண் சொல்லும் கிளி யின் நிலை அந்தப்பெண்ணின் நிலையே அதனால் தான் பசி இருக்காது , தூக்கம் வராது போன்ற பெண்ணிய பிடிப்புகளை கிளியின் மீது சுமர்த்தி பேசுகிறாள்.
சரணம் -1
நாலு வகை குணம் இருக்கும் ஆசை விடாது ஹூ ஹு ஹு ம் ஹூ ஹு ஹு ம் ஆசை விடாது [ஹம்மிங்] இரண்டாம் முறை
ஹம்மிங் இல்லை ]
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
[பல்லவி]
சரணம்-2
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத்தேடும் , பாதிக்கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
ஹூ ஹு ஹூ ஹும் ஹூ ஹு ஹூ ஹும் . ஹூ ஹு ஹூ ஹூம் என்று தீராத வியப்பாக ஹம்மிங்.
இப்போது வெளியில் பாலையா அதிர்ந்து விசனம் -காட்சியில்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும், கொண்ட பள்ளியறை பெண் மனதில் போர்க்களமாகும் [பெண் மன குழப்பம் படபடப்பு [போர்க்களம் ]
அப்படியோ? என்பதாக ம்ம் ஹு ஹூ ஹூம் என்று ஆண் ஹம்மிங்.
[பல்லவி]
சரணம் -3
காதலுக்கு ஜாதி இல்லை மதமுமில்லையே, கண்கள் பேசும் வார்த்தையிலே பேதம் இல்லையே ஏ ஏ என்று மெல்ல
அடங்கி பின்னர் வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே.
அது வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே [ஒரிஜினல் சொல்வரிசை]
தணிக்கை குழு [சென்சார்] நிர்ப்பந்தம் காரணமாக மாற்றப்பட்டு , அது மேகம் செய்த உருவைப்போல மாறவில்லையே என்று ரீ-ரெக்கார்டிங் சமயத்தில் படத்தில் ஏற்றப்பட்டது.
அதனால்-- இசைத்தட்டு ப்பாடல் வேறு, திரையில் வந்த பாடல் வேறு.
மீண்டும் [பல்லவி] இறுதியாக மனக்குரல்களாக எம் எஸ்வி நிதானமாக ஆனால் சற்று தூக்கலாக ஒலிக்க, சுசீலா சற்று அடங்கி ஒலிக்க, திரையில் இருவரும் கண்ணீர் மல்க, நாயகி நாயகன் கையில் முகம் புதைத்து சோகம் பிழிய கேட்பவரை துயர்கொள்ளும் வகையில் அசைப்பது எப்போதோ, [64 ஆண்டுகள் முன்] நடந்தேறிய தமிழ் திரையின் வரலாற்றில் ஒரு மைல் கல்.
வெறும் கண்களின் மொழியால் பாடலை அப்படியே பிரதிபலிக்க இயலும் என்ற நடிப்பிலக்கணத்தின் அடையாளம் இப்பாடல் எனில் மிகை அல்ல. அதனாலேயே இசை ஒலிகள் மிகவும் மென்மையாகப்பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.
பூர்வ வடிவம்
https://www.google.com/search?q=paalirukkum+pazhamirukkum+video+song&oq=paalirukkum+pazhamirukkum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRiPAtIBCTMzNDAyajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:fcb04c94,vid:OpWdnA5uI0k,st:0
PAALIRUKKUM [INTACT ORIGINAL –COMPLETE]
கத்தரியால் சிதைந்த
வடிவம்
https://www.youtube.com/watch?v=vOm1VbH843A POST CENSOR FORM
QFR சுபஸ்ரீ
அவர்களின்
விளக்கமும்
குழுவினரின்
பாடலும்
, நன்கு
கவனியுங்கள்.
நன்றி அன்பன் ராமன்
Thanks. Beautiful analysis
ReplyDelete