AC TIRULOKCHANDAR -2
இயக்குனர்ஏ சி திருலோக சந்தர்-2 
நிலவே என்னிடம் நெருங்காதே [ராமு -1966]   கண்ணதாசன் எம் எஸ் வி , பி பி எஸ் 
இன்றளவும் புகழ் மாறாப்பாடல் இது. துவக்கம் என்னவோ பெண் குரலில் ஏக்கம் நிறைந்த தொகையறா 
"நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி " என்று மூன்று முறை ஒலிக்க, மூன்றாம் முறை தோழீ என்று யாரையோ விளி த்துப்பாடினாலும் , அவள் அருகில் இருக்கும் நாயகனோ , நான் உனது மன நிலைக்குப்பொருந்தாதவன் என்னும் நிலையை விளக்கிட வெவ்வேறு காரணங்களை அடுக்குகிறான். எதுவாயினும் தொன்னைக்கு நெய் ஆதாரமா , நெய்க்கு தொன்னை ஆதாரமா எனும் தர்க்கம் போல் கவியின் சிறப்பா இசையின் சிறப்பா என்ற பட்டிமன்றப்பாடல். துவக்கமே வயிற்றைபிசையும் சித்தார் ஒலியுடன் படரும் தபலா ஒலி தரும் அதிர்வு, நிலவே என்னிடம் நெருங்காதே [உள்ளார்ந்த பொருள் நீ உயரத்தில் நான் பள்ளத்தில்] , பின்னர் நடக்க இயலாத நிகழ்வுகள் கோடையில் மழை , கோலத்தில் எழில், பாலையில் கொடி , பார்வையில் இனிமேல் சுகம் -இவை எதுவும் நிகழாது அதுபோன்றதே நீ என்னிடம் நெருங்குவது என்கிறான் ஆண்.
மேலும் துவக்கம் முதல் துயரமே எனது வாழ்வு என 'அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டான், நிம்மதி இழந்தே நான் அலைந்தேன், இந்த நிலையிலும் நீ ஏன் தூது விட்டாய் ? என்றெல்லாம் சொல்லி நீ நினைக்கும் இடத்தின் நான் இல்லை -இது பொருந்தாத இணை என்று அவன் தெளிவாக இருக்கிறான் . அவ்வளவும்      
சோகம் எனவே ஓங்கி உயர்ந்த சோகமாக ஷெனாயின் ஒலி , கலைஞன் சத்யம் அவர்களின் ஷெனாய் பேசும் ஸ்வரங்களை நொடிப்பொழுதில் தொட்டுதொடரும் அனுமந்துவின் தபலா இரண்டும் ஒளியும் நிழலும் போல பாடலை தாங்கி சுமப்பது தனக்குவமை இல்லா தனித்துவம் . பிபி எஸ் , ஏ சி திருலோகச்சந்தர் இருவரையும் நினைவுகொள்ள வைக்கும் காட்சி. கேட்டு மகிழ இணைப்பு
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ nilave ennidam 1966
thangai 1967kettavarellam paadalaam  kd msv tms 
கேட்டவரெல்லாம் பாடலாம் [தங்கை -1967 ] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் 
மிகுந்த நகைச்சுவையும் குறும்பும் பாடலின் சொல்லமைப்பு , அதற்கேற்ற இசை , மேலும் மேற்கத்திய இசை அம்சங்களான , கரஒலி , பாடிக்கொண்டே நடனம் அதிலும் டிவிஸ்ட் நடன இயக்கங்களுக்கு ஏற்ற தாளக்கூறுகள் என பலவகைகளில் அந்நாளில் இப்பாடல் பிரசித்தம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ  
ANBALIPPU 1969 VALLIMALAi maan kutti kd msv tms ps 
வள்ளி மலை மான் குட்டி [அன்பளிப்பு -1969
] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா 
சுத்தமான கிராமியப்பாடல் , வள்ளி 
மலை மான் குட்டி, தனக்கே உரிய உயர் ஸ்தாயியில் டி எம் எஸ் ரேக்ளா வண்டியில் அதகளம் பண்ணும் சிவாஜிக்கு குரல் கொடுக்க, தலையில் வாழைக்காய் சீப்புடன் வளைந்து நெளிந்து செல்லும் சரோஜா தேவியை குபீல் என்று தூக்கி வண்டியினுள் போட்டுக்கொண்டு பாட பதில் சொல்ல சுசீலா பாட, டுர்ர்ர்ர் என்று கத்திக்கொண்டு மாட்டினை துரிதப்படுத்த [இவ்வளவு குட்டையான மாடு அலட்சியமாக வண்டி இழுக்க [புங்கனூர் குட்டையன்- வகை மாடு போலும்.] இயல்பான கிராமீயக்காதல் எப்போதோ திரையில் வந்துள்ளது. கிராம இசையை தமிழ்த்திரை அவ்வப்போது பயன்படுத்திதான் வந்துள்ளது. பாடலை கேட்டு மகிழ இணைப்பு இதோ      
https://www.dailymotion.com/video/x1757ja 
ENGA MAAMA 1970 PAAVAI PAAVAAI THAAN VAALI MSV PS 
சோகமும் , குடும்ப நடனமும் கிராமீயமும் மட்டும் அல்ல, க்ளப் வகை இசையையும் திருலோகச்சந்தர் காட்சிப்பபடுத்திய
படம் 
எங்க மாமா [1970] 
 பாவை பாவை தான் [எங்கமாமா ] கண்ணதாசன் எம் எஸ் வி பி சுசீலா. 
70 களில் உடலை உலுக்கி நடனம் ஆடுவது புதிய நடன வகையாக பயன் படுத்தப்பட்டது. சரியான நடனப்பயிற்சி இல்லாதவர்கள் மிகவும் தயங்கும் வகை நடன அசைவுகள். எனவே பாடலும், இசையும் கருவிகளும் அதீத  வேகம் காட்டி இயங்க தாளம் ஒருபுறம் உசுப்பேற்ற, பாடலும் காட்சியும் வரவேற்பு பெறும். காட்சியில் ஜெயலலிதா வெகுவாக பரிமளிக்க, வழக்கம் போல் ஜொள் விட்டுக்கொண்டு பாலாஜி என்று அந்நாளில் பாடல் பிரபலம்  . கேட்டு ரசிக்க இணைப்பு 
பின் 60 களில் கூட்டமான பெண்களிடம் பையன் சிக்கிக்கொண்டு தவிப்பதும் [ஜிஞ்சின்னாக்கடி வகை] கூட்டமான பையன்களிடம் பெண் சிக்கிக்கொண்டு தவிப்பதும் [ என்ன வேகம் நில்லு பாமா வகை] , கூட்டமாக ஆண்களும் கூட்டமாக பெண்களும் ஒருவரை ஒருவர் வம்பிழுப்பதும் [கல்லூரி ராணிகாள் வகை] தமிழ்திரையில் வித விதமான பாடல்களுக்கு வழி வகுத்தது. ஆனால் இது வேறு வகை பல பெண்களை நாயகன் பாடி வளைத்து கும்பலையே கைப்பற்ற தலைவி மட்டும் பிடி கொடுக்காமல் இயங்குவதாக காட்சி. 
சொல்லப்போனால் சில பெண்கள் ஜொள் விடுவது இப்பாடலின் மாறுபட்ட அமைப்பு . 
காதல் மலர் கூட்டம் ஒன்று [தெய்வ மகன் -1969 ] கண்ணதாசன் , எம் எஸ் வி , டி எம் எஸ் 
ஒவ்வொருத்தியாக , வக்கீலாத்து வசந்தா, ஜப்பான் ரிட்டண்ட் ஜயந்தி, மீனா என்று பெயர் சொன்னதும் தனித்தனியே நாயகனுடன் ஒட்டிக்கொண்டு ஓடுவது நடிகர் திலகம் காதல்மன்னனாக மாறிய சூழல் , ஜெயலலிதா அசைந்து கொடுக்காமல் செல்வதாக          காட்சி [அதாவது பின்னர் தனியே வளைக்கப்படுவார் ]
காட்சிக்கு இணைப்பு இதோ   
DEIVA MAGAN=-1969 
KAADHAL MALAR KD MSV TMS
தொடரும் 
அன்பன் ராமன்
No comments:
Post a Comment