Thursday, February 6, 2025

PB SRINIVAS

 PB SRINIVAS

பி பி ஸ்ரீனிவாஸ்

வாடாத புஷ்பமே [அடுத்தவீட்டுப்பெண் -1960] பாடல் தஞ்சை ராமையாதாஸ் , இசை ஆதி நாராயணராவ் , குரல் பி பி ஸ்ரீனிவாஸ்

திரையில் பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி தனது மாணவி மீது மோகம் கொண்டு பாட , பக்கத்துவீட்டு பையன்கள் அடப்பாவி என்று புலம்பாத குறையாக எட்டிப்பார்த்து , இவன் வீட்டுக்குள்ளேயே போய் காதலிக்க /பாடி க்கவரப்பார்க்கிறானே , நம்மால் முடியவில்லையே என்று பார்த்துக்கொண்டே இருக்க , உச்சகட்ட ஆலாபனையில் பாட்டுவாத்தியார் வா வா என்று பெண்ணை அழைக்க , அவர் தாயார் வந்துவிட , வா வா என்றவன் வாதாபி கணபதிம் பஜே என்று பாடி தப்பிப்பது நல்ல நகைச்சுவை., நல்ல நுணுக்கங்களும், சங்கதிகளும் பின்னி விளையாடும் பாடல் பி பி எஸ் ஜமாய்த்துள்ளனர். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=yp-vdGYRHYs VANITHA MANIYE ADV PENN AUDHI N RAO PBS

யார் யார் யார் அவள் யாரோ [பாசமலர் 1961] கண்ணதாசன், வி, ரா, பிபி எஸ், பி சுசீலா.

தமிழ்சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் இப்படம் . கதை, உணர்ச்சி நடிப்பு, பாடல் இசை காட்சி அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய 1961ம் ஆண்டின் பெருமை,. மலையாள கதா சிரியர், நடிகர் கே பி கொட்டாரக்கரா [ஸ்ரீதரன் நாயர்] வடிவமைத்த கதை.பாடலில் நளினங்கள் ஏராளம். ஆனால் நாம் மிகவும் கவனம் காட்ட வேண்டிய அம்சங்களுக்கு குறைவே இல்லை. இவ்வள வு எளிதாக  காதல் மனங்களின் ஓட்டத்தை இந்தக்கவிஞனைப்போல் போகிறபோக்கில் சொல்லமுடியுமா?

ஒன்றும் தெரியாதவன் போல் நாயகன் யார் யார் என்று துவங்க நாயகி ஊர் பேர் தான் தெரியாதோ என முறுவலிக்க , சாவித்ரியின் முகபாவம் மறக்க வொண்ணாதது , அதே போல் மீண்டும் நாயகனை சீண்டி 'மயங்க வைத்தா ளோ ? எனும்போது [நீ ஜொள்ளுடா டேய் என்பது போல் ]சாவித்ரி முகத்தை ஆட்டி நடிப்பதைப்பாருங்கள்.  பிறிதொரு சரணத்தில் அஞ்சனம் கொண்டாள் நகை  கொண்டாள் அச்சம் நாணம் மடம் கொண்டாள் என நாயகன் பாட , நாயகி      மஞ்சள்,     கு ங்குமம் மலர் கொண்டாள் , மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள் [நீ ரொம்ப நல்லவனாக்கும் என்ற கிண்டல்] தொனிக்க பாடல் செல்கிறது . முத் து மணித்திரள் ரத்தினமோ மொய் குழல் மோக சித்திரமோ என அவன் பாட , இவளோ செக்க சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ [நீ எப்படி கட்டுண்டு கிடக்கிறாய் ? ] என்று வெற்றி கொண்டதை சொல் கிறாள். சரி கவிஞனின் தமிழ் எவ்வளவு அக்மார்க் சுத்தம் ; ஆனால் காதல் உணர்வின் ஆதிக்கமோ ஆணை அதிகம் ஆக்கிரமிக்க பெண் அவ்வப்போது எளிதாக அவனை எதிர்கொள்வதகாக அமைந்த அதிகம் பார்க்க முடியாத வகை டூயட். . பாடல் பனி படர்ந்த கொடைக்கானலில் பதிவிடப்பட்டது பனி மேகங்களின் ஒளிகுறைந்த சூழலில் வெகு நிதர்சனமாக இருப்பதைப்பாருங்கள். நிழல் கூட எழமுடியாத மங்கிய ஒளி , இசை அமைப்பின் மந்தகாசத்தை அழகாக பயன்படுத்த பேருதவி செய்துள்ளது. கண்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=YAAR+YAAR+AVAL+TARO+VIDEO+SONG&oq=YAAR+YAAR+AVAL+TARO+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMjI5NjVqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:93a98e8b,vid:wudBkCHGnBU,st:0 YAAR YAAR TAAR AVAL YAARO PS PBS

காற்று வந்தால் தலை சாயும் [காத்திருந்த கண்கள் -1964] கண்ணதாசன் , வி-ரா, பி பி எஸ், பி எஸ்

அபூர்வ வகை டூயட் இது. ஆம் ஒவ்வொரு வரியையும் ஒருவர் துவக்க அடுத்தவர் 1 / 2 சொல்லில் நிரப்ப,    பாடல் பயணிக்கிறது/. ஒருவரை ஒருவர் தொடாமலே ஓடி ஆடி நடிப்பு. பாடலை பியானோவில் தூக்கிநிறுத்திய வித்தகன் விஸ்வநாதன்.  பல தருணங்களை,தாளமே இல்லாமல் பியானோவின் தும் தும் என்ற அதிர்விலேயே கொண்டு செலுத்திய நேர்த்தி அலாதியானது. கருப்பு வெள்ளை படம் என்ற உணர்வே இல்லாத படி அமைந்த காட்சி. ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=KAATRU+VANDHAL+THALAI+SAAYUNM+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=015d55c2845e03e2&sxsrf=AHTn8zpaFX1paYKMw2aO74uL3K_XSUcChQ%3A1738321509089&ei=Za6cZ-qTBdXR1e8PruPQkAU&ved=0ahUKEwiq2reg6J-LAxXVaPUHHa4xFFIQ4dUDCBA&oq=KAATRU+VANDHAL+THALAI+SAAYUNM+VIDEO+SONG+&gs_lp= KATRU VANDHAAL PBS PS

பூவரையும் பூங்கொடியே [இதயத்தில் நீ] 1963 , வாலி, வி-ரா, பி பி எஸ்

காதல் காட்சி -ஆண் மட்டுமே பாடும் பாடல், உன்னத சொல்லாட்சி, கம்பீர நளினம் குரலில். தேவிகா ஆடி ஓடி முகபாவம் காட்டிய பாடல். இது போன்ற கௌரவ  காட்சிகள் அருகி வருவது  நமது துயர நிலை. விறுவிறுப்பான இசை பாடல் விரைந்து முடிந்து விட்டதாக தோன்றுகிறது. மெலடி இன்னமும் வசீகரம் மிகுந்த பாடல் இது.

கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=POOVARAIYUM+POONGODIYE++VIDEO+SONG&newwindow=1&sca_esv=015d55c2845e03e2&sxsrf=AHTn8zotG9eN4H9k17-r0R2DPjuUNhlmjA%3A1738321830751&ei=pq-cZ7nGLaLb1e8P6POBkAw&ved=0ahUKEwi5sei56Z-LAxWibfUHHeh5AMIQ4dUDCBA&oq=POOVARAIYUM+POONGODIYE++VIDEO+SONG&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIlBPT1ZBUkFJWVVNIF IDHAYATHTHIL NEE POOVARAIYUM PBS

பொன்னென்பேன் சிறு பூவென்பேன் [போலீஸ்காரன் மகள் 1963] கண்ணதாசன் ,   வி ரா , பி பி எஸ் , ஜானகி

மிகவும் மென்மையான பாடல் .பிரத்தியேக உவமைகள் இப்பாடலில்.  தம்பூரா மீட்டுவதுபோல் இருக்கவேண்டும் என்று ஸ்ரீதர் கே ட்டாராம் , எனவே அவ்வளவு மென்மைக்கு குரலும் ட்யூனும் அமைத்து, இடை இசையில் கொத்தாக வயலின், குழல், மற்றும் மாண்டொலி ன் வெடித்துக்கிளம்பி நேர்த்தியாக ஒலிக்க , இதற்கு இணை இது ஒன்றே எனும் வகைப்பாடல். ஜானகியை கண்டு பிடித்தவர்கள் உலகின் கண்களுக்கு புலப்படும் முன்பே ஜானகியின் புகழ் உச்சிதொ ட்ட பாடல் இது . கேட்டு மகிழ

https://www.google.com/search?q=PONNENBEN+SIRU+POOVENBEN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=015d55c2845e03e2&sxsrf=AHTn8zrTaI__fPCwdvADBCFgwYTzDkDSMg%3A1738322153634&ei=6bCcZ-e2JsS3vr0PvsEu&ved=0ahUKEwinz-PT6p-LAxXEm68BHb6gCwAQ4dUDCBA&oq=PONNENBEN+SIRU+POOVENBEN+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJFBPTk5FTkJFTiBTSVJVIFBPT1ZFTkJFTiBWSURFTyBTT05HIDIFECEYoAEyBRAhGKABMgUQIRigAUiRoQFQAFi5hAFwAXgAkAEAmAGWAqAB5yeqAQYyLjMxLjO4AQzIAQ PONNENBEN PBS S J POLICEKAARAN MAGAL

QFR 191https://www.facebook.com/watch/?v=3014052285482330 FOR PONNENBEN 

 

2 comments:

WHAT OF THESE “GET-TOGETHERs?

  WHAT OF THESE “GET-TOGETHERs?                             [ My Blog Posting No.1259 ] Quite some opinion may emerge seeing the very titl...