Sunday, February 2, 2025

ANGER AND EGO -10

 ANGER AND EGO -10

கொந்தளிப்பும் அகம்பாவமும்-10

SEEKING  FEED BACK

கருத்து அறிதல்

ஆங்கிலத்தில் 'feed back ' என்பர் .நேரடி மொழிபெயர்ப்பில் 'பின்னூட்டம்' எனப்பெயர் பெறும். .அதன் உண்மையான நிலை மற்றும் பயன் 'தகவல் பெறுதல்' .அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்தது நுகர்வோர் தரும் கருத்து தான் 'feed back.'.  .நியாயமாகப்பார்த்தால் இது மனித உளவியல் தொடர்பானது. அதாவது ஒரு பொதுநிகழ்வில் பங்குபெற்ற ஒவ்வொருவருக்கும் தனது அன்றைய செயல்பாடு பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று அறிவதில் உள்ள ஆர்வம். கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, செமினார் வகை சொற்பொழிவு, சிறப்பு சொற்பொழிவு [ஸ்பெஷல் /அழைக்கப்பட்ட சொற்பொழிவு] [invited lecture] என எதிலும் கருத்துக்கேட்பது இன்றைய நடைமுறை.

இது, பயனாளிகள் எனும் நுகர்வோர் தரும் மதிப்பீடு என்றே புரிந்துகொள்ளலாம். அழைக்கப்பட்ட நிபுணர்களுக்கே இது தேவை என்றால், தனி ஒருவரின் நிலை என்ன? சரி, இப்படிப்பாருங்கள் , வீட்டில் 3,4 விருந்தினர் + குடும்பத்தினர் அனைவரும் விருந்துண்ண அமுது படைத்த பெண்மணி, தனது உணவுப்பதார்த்தங்களை பிறர் எந்தளவுக்கு ரசித்தனர் [புசித்தனர்] என ஆர்வம் கொள்ளுதல் இயல்பல்லவா? அந்தப்பெண்மணி நீண்ட அனுபவஸ்தரே ஆயினும், ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் கருத்து அறிய விழைவது ஏன்?                         

பிறர் மதிப்பீட்டில்,  தனது இடம் எது என்று அறிய ஆர்வம் கொள்கிறார். ஆக, 'சமூக அங்கீகாரம்' என்ற ஏற்பு ஒவ்வொரு கட்டத்திலும் தேவை. நல்ல ஆசான் என்று புகழ் எட்டிய பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் அன்றாடம் தங்களை புதுப்பித்துக்கொண்ட பின்பே வகுப்பை சந்திக்க வருவர் /வரவேண்டும் எனில் பொருள் என்ன?. மதிக்கத்தக்க எவரும் பொதுக்கருத்தை துச்சமாக மதிக்க இயலாது.

இதுதான் 'கருத்து கேட்டல்' செயலின் உள்ளார்ந்த எளிய செயல் முறை. 

இவ்வாறு கருத்துக்கேட்டு நிகழப்போவது என்ன? நேரடியாக பேசும்போது , உண்மையை சொல்ல ங்கி பொதுவான சமநிலையான[neutral opinion] கருத்து  மட்டுமே வெளிப்படும். அதுவே கேள்வி பதில் வடிவில் அமைந்தால், குறிப்பிட்ட அளவீடுகள் பற்றி அறிந்து கொள்ள  முடியம்.

எந்த  பண்பு வலுவாக இல்லையோ அதை செம்மைப்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்வது எளிதாகும். இது போல் ஒவ்வொரு செயலிலும் கருத்துக்கேட்டு நம்மை சிறுவயது முதல் கட்டமைக்க முனையும் போது, 'நான்' பிறரை விட உயர்ந்தவன் /அறிவுமிக்கவன் /திறமையாளன் போன்ற ஆதாரமற்ற கற்பனைகள் தளர்ந்துவிடும்;அது ஈகோ என்னும் அகம்பாவத்தை குறைக்கும், அடக்கும், அகற்றும் . ஆகவே கருத்துக்கேட்டல், ஈகோவை க்களைய சரியான உதவியாகும்.

SHOWING  GENUINE GRATITUDE

உளமார நன்றி பாராட்டுதல் .

பிறரிடம் கற்றாலும் கருத்துக்கேட்டாலும் , அவருக்கு என்றென்றும் நன்றி பாராட்டும் மிக அவசியமான பண்பினை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தல் , நமது மனோபாவம் குறித்த பிறரது மதிப்பீடுகளை நமக்கு உகந்ததாக மெல்ல வடிவு பெறச்செய்யும். பொதுமக்கள், அறிவை விரும்பி மதிப்பது போலவே அடக்கத்தையும் போற்றி க்கடைப்பிடிக்கும் .எவரையும் மதிப்பிற்குரிய மாந்தர்களாக அங்கீகரிக்கின்றனர்

நன்றி பாராட்டும் குணம் ஒருவரது பிம்பத்தை வெகுவாக உயர்த்த வல்லது. நன்றி என்பது ஒரு மானுடப்பண்பு என்றே போற்றப்படுகிறது . எனில் அறிவு அடக்கம் , நன்றி மறவாத்தன்மை இவ்வனைத்தும் ஒருங்கிணையும் போது, அந்த நபர் [வயது அனுபவம் போன்ற எல்லைகளுக்குள் அடை படாமல்]  பண்பாளர் என்று எளிதில் கௌரவம் பெறுகிறார்.  பண்பாளர் அந்தஸ்து பெற்ற நபர், அகம்பாவம் கடைப்பிடித்தால், விரைவில் ஏகோபித்த வெறுப்பை அறுவடை செய்வார். ஏனைய பண்புகள் போற்றத்தக்கவையாக வடிவமைத்துக்கொண்ட எவரும் அகம்பாவத்தை விலக்குவதைத்தவிர  வேறு நிலைப்பாடுகள் கொள்ளுதல் தீமையையே விளைவிக்கும்

எனவே அகம்பாவம் என்ற 'ஈகோ' வை விட்டொழித்தல் மட்டுமே உயர்வுக்கு உறுதுணைபுரியும்..உயர்வடைய வேண்டிய நிலையில் அகம்பாவம் கொள்ள எப்படி மனம் ஒத்துழைக்கும் ?

இதுவரை விவாதிக்கப்பட்ட அனைத்து செயல் முறைகளையும் முறையாக வடிவமைத்து பின்பற்றி     

 முன்னேற்றம் அடையும் ஒருவர் எப்படி தனிமனித செயல்திறனை மட்டுமே பின்பற்றி வளர்ந்திருக்க இயலும். பல நிலைகளில் வெவ்வேறு  வகையில் பிறர் கொடுத்த ஆதரவை பற்றிக்கொண்டு தானே வளர்ந்திருப்பார். வழி நெடுகிலும் ஈகோ பாராட்டி திரியும் எவராலும் குறுகிய வளர்ச்சியையே அடைய முடியும் , முழுமையான உயரம் எட்ட இயலாது ஏனெனில் ஈகோ குறுக்கிட்டு காரியத்தைக்கெடுத்து விடும்.. எனவே ஒவ்வொரு படி நிலையிலும் விநயம் , அடக்கம் , பண்பு, நன்றிஉணர்வு தொடர்ந்து வர உயர்வும் , அமைதியும், மகிழ்ச்சியும்  நமது வாழ்விற்கு அணி சேர்க்கும். ஈகோ கொண்டவர் ஒருநாளும் அமைதிகொள்ள இயலாது. ஆனால் ஈகோ வை அடக்கி கட்டுக்குள் வைத்தால் அது போட்டி மனப்பான்மைக்கு வித்தி முயற்சிக்கும் ஒரு தூண்டுதலாக வேலை செய்யும். ஈகோ நமக்கு அடங்கவேண்டும் , நாம் ஈகோவிற்கு அடிமைப்படுதல் கூடாது.

நன்றி                                                                       நிறைவு .  

அன்பன் ராமன்                                     

அன்புடையீர்

இதுவரை கல்வி,  அதற்கு தொடர்புடைய பிற முக்கிய கருத்துகளை நான் அறிந்த வகையில் எழுதி வந்துள்ளேன். வரும் நாட்களில் ஏதேனும் குறிப்பிட்ட தலைப்பில் தகவல் அறிய விழைவோர் தேவை என்ன என்பது குறித்து தெரிவித்தால், தேவையான தகவல்களை திரட்டி எழுதலாம் . குறைந்தது 4, 5 நாட்கள் அவகாசம் கிடைத்தால் முயன்று பார்க்கலாம். தேவை என்ன- என வாட்ஸ் அப் மூலம் தெரிவித்தால் போதும். BLOG இல் REPLY மூலம் தெரிவித்தாலும் , பரிசீலிக்கலாம்

நன்றி அன்பன் ராமன்

1 comment:

AMMANI, AMMANI

  AMMANI, AMMANI அம்மணீ அம்மணீ [ RENGA VENDAAM- 5 ] அம்மணீ அம்மணீ   என்று வாசலில் குரல் -காலை 7.50 மணிக்கு .  இங்கு அம்மண மணி என்று   யா...