Monday, February 3, 2025

MOONU PAAPPAAN [ true –no fiction]

 

MOONU PAAPPAAN  [ true –no fiction]

மூணு பாப்பான் [கதையல்ல நிஜம் ]

என்னது மூணு பாப்பானா ? என்று கொதிக்க வேண்டாம் . ஆம் மூணு பாப்பானே  தான் .

நீ வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாய் என்று ஒருவர் குமுறுகிறார்  -சத்தம் பெங்களூரு வரை கேட்கிறது . என்ன குமுறி என்ன?  உங்களால் நான் சொல்லும் இடத்திற்கு அருகில் கூட நெருங்க முடியாது இந்த கட்டுரை முடிவில் உங்களால்  முடியுமா என நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள். நிச்சயம் முடியாது அதுவும் அந்த  மூணு   பாப்பானைத்தவிர  , வேறு எவரும் பல முறை யோசிக்க வேண்டி வரும் . ஆம் நிச்சயமாக.

  அந்த குறிப்பிட்ட  இனத்தவரை அடையாளம் உணர [3% என்பதை உணர்த்த] மூணு பாப்பான் என்கிறாயா? என்று கோபம் கொப்பளிக்கிறார் ஒருவர். . அமைதி அமைதி நம்மில் எவரும் அந்த மூணு பாப்பானில் ஒருவர் இல்லை . பிறகு ஏன் அவசரம்? பொறுங்கள் விவரம் அறிந்து கொண்டு விவகாரத்தை தொடங்குங்கள். எத்தனையோ ஜென்மமாக பாப்பான் என்றால் கண்டு கொண்டதில்லையே , பின் எப்படி இப்போது இவ்வளவு வேகம்?

வேறு எவனாவது சொல்லியிருந்தால் காது அடைத்துக்கொள்ளும் . இவனே சொல்லுகிறானே -கலி முற்றிவிட்டது என்று கோபம் கொப்பளிக்கிறது.உங்கள் கோபம் என்னை ஒன்றும் செய்யாது ஏனெனில் நான் பேச இருப்பது மூன்று பாப்பான் பற்றித்தான்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்த மூன்று பாப்பானும் ஏற்றத்தாழ்வு என்னும் அளவுகோலுக்கு  உட்பட்டவர்கள்தான் . அவர்கள் முறையே ஒண்ணாம் பாப்பான், ரெண்டாம் பாப்பான், மூணாம் பாப்பான் என்றே அறியப்படுகிறார்கள்.     எனவே நிச்சயம் அவர்கள் சமமானவர்கள்  அல்லர்.

நீ வெறும் பீடிகை போடுகிறாயே  தவிர வேறொன்றையும் உருப்படியாக சொல்லமாட்டேன் என்கிறாய்.          

நீ இப்படியேபொழுதைப்போக்கிக்கொண்டிருந்தால், நான் blog போஸ்டிங்கை  படிக்கமாட்டேன் என்கிறார் நண்பர். அய்யா இத பாரும் நீங்க யார் யார் எப்பெப்ப என்னென்ன படிக்கிறீங்க எனக்கு தெரியும். எழுதினா படிக்க மாட்டிங்க ; படிச்சுட்டேன் னு சமாளிப்பீங்க . எதையாவது கேட்டா , பாதி தான் படிச்சிருக்கேன்பீங்க . இல்லையே , இது முதல் 4 வரிலியே இருக்கே என்றால் ஹீ ஹீ ஹீ இன்னிக்கு இனிமே தான் படிக்கணும் கோயிலுக்கு போய்ட்டேன் னு [பொய் ]சொல்லி உம்மாச்சி கோபத்துக்கு ஆளாகறீங்க.

ஆமாம்--- 'பாடலை உணர்வோம் " வேணுமா வேண்டாமா னு கேட்டா 12 பேர் தான் பாவம் [58 பேர் ] பதில் சொன்னாங்க. பாக்கிப்பேர் அவ்வளவு பிசி , மூணு நாள் மாண்ட்ரீல் போகணும், மன்னார்குடி போகணும் , வத்தல் பிழியணும், வடாம் போடணும் [ எல்லாம் கார்த்திகை மார்கழி பனி/ மழையில] நல்லா சால்ஜாப்பு சொல்வீங்க. ஆனா நான் பீடிகை போடறேன் னு சொல்றீங்க.

அதைவிட  டாப்  என்ன தெரியுமா 2 நாள் blog வரலை னா , என்னாச்சு ஏதாச்சு என்றே துயரம் கொள்வோம். ஏன்னா blog வல்லியே அந்த சமயம் பாத்து   ஏன் blog வரல னு கேட்டுட்டா ,ரொம்ப கவனமா படிக்கிறதாக அர்த்தம் . இனிமே பீடிகை போட்டால் தப்பு இல்லை. அதுனால பொறுமையா பாருங்க மூணு பாப்பான் னா கதையா கற்பனையா , இல்ல ஏதாவது டூபாக்கூர்           சமாச்சாரமானு, . சொல்லாமலா போகப்போகிறேன் --சொல்லுவேன் சொல்லுவேன் பொறுங்க .

தொடரும்

அன்பன்

ராமன் 

3 comments:

  1. பீடிகையே பலமாயிருக்கே!!

    ReplyDelete
  2. பீடிகையோடு சேர்த்து ஒரு குட்டு வெச்சதும் நன்கு அறிய முடிகிறது. 😄

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG-- 21

  LET US PERCEIVE THE SONG-- 21 பாடலை உணர்வோம் -21 PAATTU VARUM NAAN AANAIYITTAL VAALI MSV TMS PS நமது இன்றைய தேர்வு ஒரு ஆழ்ந்த ச...