Thursday, February 27, 2025

P B SRINIVAS-4

 P B SRINIVAS-4

பி பி ஸ்ரீனிவாஸ்-4

வளர்ந்த காலை மறந்துவிட்டாள் [காத்திருந்த கண்கள் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,

பி பி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா

இது போன்ற ஆரோக்கியமான பாடல்களுக்கு தமிழ் சினிமா எப்போதோ தலை முழுகிவிட்டது. அதனால் இளம் தலைமுறையினருக்கு இதில் அமைந்த நுணுக்கமான வாதங்கள் புரிவதில்லை என்பதைக்கடந்து, ஏதோ கிறுக்குத்தனம் என்பது போன்ற ஏளனம் தென்படுவதை பல தருணங்களில் கவனித்திருக்கிறேன். இப்பாடலில் சிறப்பு-- சொல் வழியே கிளம்பிய தர்க்கம், இசை வழியே கிளர்ந்த நளினம், வாதாட தெரிந்தவர் ஆணா , பெண்ணா, நியாயம் யார் பக்கம் என்றெல்லாம் சங்கிலித்தொடர் போல கிளம்பும் வியப்புகள்.

இதெல்லாம் எங்கே? --ஒரு சினிமாப்பாடலில் -நாயகன் -நாயகி இடையே..

சரி பாடல் என்ன காதல் வகையினதா, மோதல் வகையினதா,ஊடல் வகையினதா என்று இனம் பிரிக்க யாலாத  தனி ரகம்.. ஒன்று சொல்லலாம் -வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஆண், முரட்டுக்கொந்தளிப்பில் பதில் சொன்னாலும் , விட்டுக்கொடுத்துப்போகும் பெண் என ஒரு 3 நிமிட கவிதையில் புதைத்து வைத்த கவிஞர் , இசையால் காதல்,மோதல் , ஊடல் அனைத்தையும் அற்புதபின்னிசையுடன் வழங்கிய மெல்லிசை மன்னர்கள் , இவர்கள் போன்ற ஆளுமைகள் எங்கே போயின? ஏக்கம் தான் விடை.

 இந்த வரிகளை கவனியுங்கள் "காதலிதான்    மனைவி என்று கூறடா கண்ணா , அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடா  கண்ணா எனும் போ து கிளர்ந்த அரச்சீற்றம் , இறுதியில் அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா? நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா" என்று வெகு நேர்த்தியாக வாதத்தை முடக்கிய சொற்கள். வாதம் தானே முடங்கத்தான்  செய்யும் என்கிறீர்களா? இப்பாடலுக்கான இசையின் பங்களிப்பை ரசிக்கலாமே ஒழிய விளக்கி விமரிசிக்க அடியேனுக்கு திறமையும் தகுதியும் இல்லை.. பாடல் நெடுகிலும் ஜெமினி வம்பிழுத்து கிண்டல் செய்ய, சாவித்திரி பொறுப்பான தாயாக முகபாவம் காட்டி நடித்திருப்பதையும் நன்கு கவனியுங்கள் கேட்டு அமைதியாக ரசியுங்கள்  உங்களின் இளமை திரும்பும்.  இணைப்பு இதோ. 

VALARNDHA KALAI

https://www.dailymotion.com/video/x2j7aw9

பூவரையும் பூங்கொடியே [இதயத்தில் நீ - 1963] வாலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ்

வாலி 1960 க்குப்பின் பாடலாசிரியராக அங்கீகரிக்கப்பட "இதயத்தில் நீ" ஒரு முக்கிய கரணம் . இப்பாடல் காதல் பாடல். எனவே அந்த வகை பாடலுக்கு கண்ணதாசன் உடன் போட்டிபோட்டு தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் வாலி. வெகு சிறப்பாக பாடல் எழுதி பாராட்டுப்பெற்றார். தேவிகா வை துரத்தித்துரத்தி காதலிக்கும் ஜெமினி கணேசனுக்கு , பி பி ஸ்ரீனிவாஸ் குரல் [பாவ மன்னிப்புக்குப்பின் அதுவே ட்ரெண்ட் ஆனது] ஓஹோஹோஹோ ஹோ என்று துவங்கி கிட்டார் மாண்டலின் கூட் டிசையில் . அமர்க்களமாக துவங்கி பெரும் வெற்றி கண்டபாடல். திடீரென்று ஜெமினி தன் அருகில் வந்ததும் தேவிகா காட்டிய பதட்டம் கலந்த மகிழ்ச்சியின் முகபாவம், நடிப்பில் ஒரு பாடம் எனில் தவறதில்லை. அதே போல பாடலில் அவ்வப்போது தவறாத பாவம் காட்டி சிறப்பு சேர்த்தார் நடிப்பிற்கு தேவிகா பாராட்டுக்குரியவர்  [ எஸ் வி சஹஸ்ரநாமம் நாடக குழுவில் பயிற்சியும், நடிகர் முத்துராமனிடம் தமிழ் வசன பயிற்சியும் பெற்றவர் அல்லவா --எப்படி சோடை போவார்?] கல்லணைப்பகுதியில் படப்பிடிப்பு , நல்ல காட்சியமைப்பு, கேட்டு, கண்டு  மகிழ இணைப்பு இதோ

POO VARAIYUM POONGODIYE

https://www.google.com/search?q=poovaraiyum+poonkodiye+video+song+download&newwindow=1&sca_esv=e18df17b481d60dd&sxsrf=AHTn8zr0Qb47bYxMmRZKpN4ivSxvXw5xVQ%3A1740568343064&ei=F_e-Z4bPA7qK4-       IDHAYATHTHIL NEE 1963 VAALI V R PBS

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி

பிபி ஸ்ரீனிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி  பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பாடல்களே. அது என்ன இறையருளோ , சூப்பர் டூப்பர் வகை வெற்றி. இந்தப்பாடல் அவ்வாறே. அதிலும் இடை இசையில் கிட்டாரும் , ட்ரம் , அவ்வப்போது டாட் தட தடா டட் என்று அதிர்ந்த போங்கோவும் வெகு பிரசித்தம் . இந்த கிட்டார் பிட் அப்படியே அப்பட்டமாக இன்னோர் தமிழ் சினிமாப்பாடலில் காபி அடித்தனர் எனில் பார்த்துக்கொள்ளுங்கள் .பாடலுக்கு இணைப்பு 

KANNI VENDUMAA

PACHAI VILAKKU KD 1964 V R LRE PBS

https://www.google.com/search?q=kanni+vendumaa+kavidhai+vendumaa+tamil+song+video+song&newwindow=1&sca_esv=0ac4b8938639300a&sxsrf=AHTn8zq4-LVr0WbrjXRdsDEtihuiTwooRQ%3A1740664453500&ei=hW7AZ6yXHpyI4-EPvY7gsQE&oq=kanni+vendumaa+kavidhai+vendumaa++tamil+song+video+&gs_lp=Egxnd3Mtd2l6LXNl

இளமை கொலுவிருக்கும் [ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் -1965 ] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பிபி ஸ்ரீனிவாஸ்

எங்கே எங்கே படம் என்று பைத்தியம் பிடிக்காத குறையாக 1962 முதல் மாணவர்கள் லோ லோ என்று அலைந்த வரலாறு இப்படம் கிளப்பிய எதிர்பார்ப்பு. அதாவது பாடல்கள் விளைவித்த ஆவல். பாவம் படம் மிகுந்த காலம் கடந்து வந்ததால் வெற்றியை நழுவ விட்டது . ஏன் எனில் அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழில் வண்ணப்படங்கள் வர துவங்கி கருப்பு வெள்ளை படங்கள் குறைந்துவிட படத்தின் சந்தை மதிப்பு குறைந்துவிட்டது. மேலும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் நடிகை நடிகையர் திடீரென்று குண்டாகவும் , ஒல்லியாகவும் திரையில் தோன்ற எளிதில் தோல்வியைக்கண்டது படம். ஆனால் அத்தனையும் முத்தான பாடல்கள்.. இதே  இளமை கொலுவிருக்கும் பாடல் பி சுசீலா குரலிலும் இருக்கிறது. அப்பாடல் வெகு ஆழ்ந்து ஊன்றி கவனிக்க வேண்டிய வகை . நிச்சயம் அது உரிய இடத்தில் பேசப்படும். பாடலுக்கு இணைப்பு.

 

ILAMAI KOLUVIRUKKUM https://www.google.com/search?q=hello+mr+zamindar+tamil+movie+ILAMAI+KOLUIRUKKUM+SONG+PBS+VIDEO+&newwindow=1&sca_esv=9d27623491523629&sxsrf=AHTn8zrJX4sAMUIjt5dNC9Eg1vom9nC_2A%3A1740038362627&ei=2uC2Z4X_JaW45OUPyLCbkAw&ved=0ahUKEwiF1P-D5NGLAxUlHLkGHUjYBsIQ4dUDCBA&oq=hello+mr+zamindar+tamil+movie+ILAMAI+KOLUIRUKKUM+SONG+PBS+VIDEO+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiQGhlbGxvIG1yIHphbWluZGFyIHRhbWlsIG1vdmllIElMQU1BSSBLT0xVSVJVS0tVTSBTT05HIFBCU HZ 1965 KD V R PBS

ஒருவன் காதலன் [வெண்ணிற ஆடை -1965] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் சுசீலா

இந்த கவிதை வெறும் கடிதம் போல் எழுதப்பட்டு , படித்துப்பார்த்தால் ,இதற்கு எப்படி இசை அமைப்பது என்று மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கும். அனால் மெல்லிசை மன்னர் அதை ஏதோ பெரும் காதல் பாடல் ரேஞ்சுக்கு உயர்த்தி வெற்றிப்பாடல் ஆக்கியுள்ளார்.அதிலும் இடை இசை குறிப்பாக வயலின், குழல் கிட்டார் வரிசை கட்டி வெகு நேர்த்தியாக ஒலி க்க, கேட்போரை சற்றே கிறங்க வைக்கும்.. காட்சி அமைப்பில் கேமரா வின் பங்கு அதிகம் [ஜி .பாலகிருஷ்ணா, என் பாலகிருஷ்ணன்] கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்    கமெராவின்  விளையாட்டு . பாடலுக்கு இணைப்பு இதோ

ORUVAN KAADHALAN  https://www.youtube.com/watch?v=Fx2EVcsoClI  VA 1965 KD V R PBS PS

இதே பாடலை இசைக்குழுவினர் பாடக்கேளுங்கள்

https://www.youtube.com/watch?v=Cglq3P_K330 MSV TIMES STAGE PROG

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

P B SRINIVAS-4

  P B SRINIVAS-4 பி   பி   ஸ்ரீனிவாஸ்-4 வளர்ந்த காலை மறந்துவிட்டாள் [ காத்திருந்த கண்கள் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ...