A BHIMSINGH -2
ஏ .பீம்சிங் -2
மயங்குகிறாள் ஒரு
மாது
[பாச
மலர்-
1962] கண்ணதாசன், விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, பி
சுசீலா
இதுபோன்ற பாடல்கள்
அன்றைய
கவிஞர்களுக்கே
சாத்தியம்,
ஏனெனில்
பெண்மன
ஓட்டங்களும்
, உள்ளார்ந்த
ஏக்கங்ககளும்
சொல்லில்
வடிப்பது
ஆழ்ந்த
இலக்கியத்தொடர்பு
கொண்ட
மனங்களுக்கே
சாத்தியம்
. அவ்வகையில்
1960 களின்
பாடல்கள்
தமக்குவமை இல்லாதன எனில் பொய்யோ,
மிகையோ
இல்லை.
இதுவும்
அது
போன்ற
ஒரு
மன
ஆய்வு
செய்யும்
பாடல்.
பின்
இவற்றை
விளக்குவது
எங்ஙனம்?
பாடலின் துவக்கமும்
முடிவும்
ஹம்மிங்
வகையில்
அமைத்திருப்பது
மனோதத்துவ
அணுகுமுறை.
இது
ஒரு
மாறுபட்ட
சூழலில்
நிகழும்
பாடல்
சித்தார்
ஒலியில்
[யூனுஸ்
சேட்
] உணர்வுகள்
வெளிப்பட
பாடல்
நெடுகிலும்
அதே
கருவியின்
துணையில்
பாடல்.
கிண்டல்
வரிகள்
"தோழியர்
கதை
சொல்லி
தரவில்லையா?
துணிவில்லையா
மனம்
வரவில்லையா,
பார்வையில்
ஆயிரம்
கதை
சொல்லுவாள்
படித்தவள்
தான்
அதை
மறந்து
விட்டாள்
, காதலை
நாணத்தில்
மறைத்துவிட்டாள்
என்று [அண்ணி யை
வம்பிழுக்கும்
நாத்தனார்
]. அவ்வப்போது
வரும்
அன்பே
அன்பே
, அத்தான்
அத்தான் என்ற சொற்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ள
கவனம்
அந்தநாளைய
பாடல்களின்
பண்பிற்கு
அடையாளம். மீண்டும் ஒரு சாவித்ரி வருவாரா?
என்றே கேட்கத்தோன்றுகிறது.
கேட்டு மகிழ
இணைப்பு
இதோ
தண் நிலவு
தேனிறைக்க
[படித்தால்
மட்டும்
போதுமா-
1963] கண்ணதாசன்
, விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, சுசீலா
மீண்டும் ஓர்
மென்மையான
பெண்மன
ப்பாடல்.
சாவித்ரியின்
வெகு
நேர்த்தியான
நடிப்பும்
, சுசீலாவின்
மென்
குரலும்,
அமைதியான
பாடலும்
-இப்போது
கனவாகிப்போய்விட்ட
நிலையில்
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
அவள் மெல்ல
சிரித்தாள்
[பச்சை
விளக்கு
-1964] கண்ணதாசன்
, விஸ்வநாதன்
ராமமூர்த்தி
சுசீலா
இது போன்ற
தோழியர்
பாடல்கள்
ஒருவரை
ஒருவர்
கிண்டல்
செய்வதாக
1960களில்
எல்லாப்படங்களிலும்
இருந்தது.
அவை
பெரும்பாலும்
கவியரசர்
மெல்லிசை
மன்னர்கள்
கூட்டணியில்
அமைந்தவை..
ராதை-கண்ணன்
பத்திரப்படைப்புகளைக்கொண்டு
அமைந்த
பாடல்,புல்லாங்குழல்
பங்கு
வெகு
அதிகம்.
. சிறிதும்
தொய்வில்லாத
ஓட்டம்
இப்பாடல்.
பாடல் ஆக்கத்தின்
போது
நஞ்சப்ப
ரெட்டியார்
[குழல்
வித்தகர்]
தாமதமாக
வந்ததால்
எம்
எஸ்
வி
பயங்கர
கோபம்
கொண்டு
, மூச்சுத்திணறும்
அளவிற்கு
ஸ்வரங்களை
கொடுத்து
இதை
வாசி
என்று
தண்டனையாக
சொல்லப்போக,
குழல்
வித்தகன்
சிறிதும்
பிசகாமல்
குறையின்றி
.வாசிக்க, இரண்டு இடை
இசையிலும்
அதே
நீண்ட
நெடிய
குழல்
இசை
பயன்படுத்தி
வியப்பின்
உச்சம்
தொட்ட
இசை,
எப்போதும்
கேட்க
ரம்மியமான
பாடல்.
தயவு
செய்து
பாடலின்
ஒய்யார
படகு
போன்ற
ஓட்டத்தையும்
ரெட்டியார்
அவர்களின்
வெகு
நேர்த்தியான
குழல்
வாசிப்பையும்
நன்கு
கேட்டு
இன்புறுங்கள்
பாடல்
நெடுகிலும்
புல்லாங்குழல்
வியாபித்து
அமைக்கப்பட்ட
இசை
, எப்படி
கற்பனை
செய்தனரோ
இணைப்பு இதோ
https://www.google.com/search?q=aval+mella+siriththaal+video+song+download&newwindow=1&sca_esv=651bcd34fa17f541&sxsrf=AHTn8zrd4e5hFfLR3pZP3_xIgLG-3MprIA%3A1739869677257&ei=7U20Z9y4D4KfnesPrN24yQw&oq=AVAL+MELLA+SIRITHTHAAL+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIkFWQUwgTUVMTEEgU0lSSVRIVEhBQUwgVklERU8gU09ORyAqAggAMgcQIRigARgKSP6vAVA
pachai vilakku 1964 KD VR , PS
REDDIYAR
தூது செல்ல
ஒரு
தோழி
[பச்சை
விளக்கு
-1964] கண்ணதாசன்
, விஸ்வநாதன்
-ராமமூர்த்தி
சுசீலா
,
எல் ஆர்
ஈஸ்வரி
மீண்டும் தோழிகளின்
கிண்டல்
பாடல்.
ஆணாக
காவிய
நயம்
மிக்க
சொல்லாடல்,
காவிரி
, நாயகன்
கோவலன்
, இடையணி
மேகலை,
என்ற
வர்ணனைகள்
காவியக்காதலின்
பிரதிபலிப்பாக
நெடுகிலும்
ஒலிக்க
, அவ்வப்போது
ஏக்கத்தின்
தாக்கத்தை
காட்டும்
சரோட் ஒலி மண்டலின் , கிட்டார் ஒலிகள்
என்று
இசை
ரங்கோலி
இப்பாடல்.
பாடகிகள்
தங்கள்
முழு
ஆளுமையை
உபயோகித்து
அதகளம்
செய்துள்ளனர்.
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
தொடரும்
No comments:
Post a Comment