Tuesday, February 25, 2025

LET US PERCEIVE THE SONG -11

 LET US PERCEIVE THE SONG -11

பாடலை உணர்வோம்-11

ரோஜா மலரே ராஜ குமாரி [வீரத்திருமகன் -1962] கண்ணதாசன் ,   வி--ரா , பி பி ஸ்ரீனிவாஸ், சுசீலா

பரத நாட்டியக்கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனி ன் கணவர் லேட் -பண்டிட் விஸ்வேஸ்வரன் இந்தப்பாடலை செல்லமாக இது சிரஞ்சீவி என்பார். என்னைக்கேட்டால் இது மார்க்கண்டேய சிரஞ்சீவி என்றாலும் பிழை அல்ல.

டூயட் வகையில் இப்பாடல் ஒரு புதுமை என்றே துவக்கியிருந்தேன் சென்ற பதிவில். என்ன புதுமை? எல்லாமே புதுமை.. படத்தின் டிஸ்கஷன் எனும் விவாதமே நடைபெறாமல் கதையின் மேலோட்ட அமைப்பை தெரிந்து கொண்டுபாடலை  எழுதினார் கண்ணதாசன் [அது அன்றைய நடைமுறையில் அரிது]. இயக்குனர் புதியவர், தயாரிப்பு நிறுவனம் புதிது நடிகர்கள் கிட்டத்தட்ட இரண்டொரு படங்களில் மட்டுமேதனியே  நடித்தஆண்  பெண்  புதிய ஜோடி . இதெல்லாம் பெரிய விஷயமா? ஆம் நிச்சயம் . ஏனெனில் பாடகர்கள் தேர்வுக்கு ஒரு சில படக்காட்சிகளையாவது பார்த்த பின்னரே எம் எஸ் விஸ்வநாதன் பாடகர்களை தேர்வு செய்வார். காட்சியோ படமோ, விவாதமோ எதுவுமின்றி ஒரு பாடலை எப்படித்தொடுவது.?

ஏதோ ஒன்று என்று இயங்கும் இசை அமைப்பாளர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் அன்றைய வழிமுறைகள் ஒவ்வொன்றையும் நன்கு தீர்மானித்த பின்னரே இசை அமைப்பு . [ஒரு குறிப்பு நெஞ்சில் ஓர் ஆலயம் தயாரிப்பு காலம் 25 நாட்கள் ஆனால் அதற்குள்ளாக கதை விவாதம், காட்சி அமைப்பு , அனைத்தும் வெவ்வேறு மனநிலையின்  குமுறல் பாடல்கள் இப்படித்தான் நெ . .  பாடல்களுக்கு இசை அமைக்கப்பட்டது]   ஆனால் ரோஜாமலரே ராஜகுமாரி எந்த முன்னேற்பாடும் இன்றி அங் " பாடு" என்பது போல் முடித்தார்கள் என்றால் நம்ப முடியுமா?

தும் தும் தும் என்ற தாளத்துடன் குழல் காற்றில் ஒலிக்க அதற்கு இசைவாக, எப்போதும் இல்லாத ஹஹ ஹா என்ற புது பாணியில் பாடல் துவக்கம்.                                           இசையைப்பொறுத்தவரை

காதல் சமமன்றோ பேதம் இலை அன்றோ என்ற சரண வரியின்  கோட்பாட்டை இம்மியும் விலகாமல் 2 பாடகர்களுக்கும் சரி சமமாக பகிர்ந்தளிக்க - அதுவே கதையின் உயிர்நாடியை பாடலாக சுமந்தது எனில் - பிளானிங் எனப்படும் திட்டமிடல் எவ்வளவு விரைவாக நடந்துள்ளது இதை நாம் புரிந்து கொள்ள  வேண்டும்.  ஹோய்என்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு         [எம் எஸ் வி முத்திரை ]  துவங்கியது இப்பாடலில் இருந்து தான் என்று நினைக்கிறேன்

சரி, இடை இசையின் துவக்கத்தில் மெஷின் போன்ற வேகத்தில் மீட்டப்பட்டு ரம்மியமாக ஒலிக்கும் மாண்டலின் [MS RAJU] அவ்வளவு துல்லியமாக கேட்போரைக்கொள்ளைகொண்டதென்பது அன்றைய தமிழ் சினிமாவில் நிச்சயம் அறியாத ஒன்று. அதற்கு இணக்கமாக துரத்திக்கொண்டு வாசிக்கப்பட்ட போங்கோ வின்.  சுநாதம் [கோபாலகிருஷ்ணன்]  வேறு பாடல்களில் இல்லாத நளினம் . இசைக்கருவிகளை தொடர்ந்து குரல்கள் துவங்கும்போது எவ்வளவு இயல்பாக இவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . இவ்விடங்களை நன்குணர பாடலை கேளுங்கள் இசை அமைப்பாளர் எவ்வளவு விரைவாகவும் ஆழமாகவும் சிந்தித்து ஒலிகளை கட்டமைக்கிறார் -நிச்சயம் அசுரர்கள் தான் அன்றைய இசை அமைப்பாளர்கள்.

மீண்டும் இடை இசையில் மாண்டலின் துள்ளி ஓடும் மான் போலப்பாய, மீண்டும் சரணத்திற்குள் நுழைந்து -சொல்லவொண்ணா இசை ஆதிக்கம். அது மட்டுமா எம் எஸ் வி எப்போது பாடலுக்குள் என்ன நுணுக்கம் வைப்பார் சொல்லவே முடியாது. அவர் போல் கோரஸ் என்னும் கூட்டுக்குரல் ஒலி வெகு நேர்த்தியாய் பொருத்தமாய் அமைத்தவர்கள் வெகு வெகு குறைவு. மனிதன் டூயட்  வகைப்பாடலில் . அதியற்புதமாக கோரஸ் ஒலித்து பாடலின் தாக்கத்தை மேம்படுத்துவார் . இப்பாடலில் கூட்டமாக பெண்கள் கோரஸ் குரல் ஒலிக்க பரிசலில் மற்றும் காவிரிநீர் பாறைக்கரையில் பாடிக்கொண்டே போகக்காணலாம் . பாடலின் பயணம் வெகு சுகமாக இருக்க இறுதியில் மீண்டும் அதே ஹ ஹஹ ஹா இணைந்து பாடி ஹஹா ஹஹா ஹஹா என்று இருவர் குரலும் சேர்ந்து ஒலித்து பாடலை நிறைவு செய்ய மெல்லிய தாள இசையில் புதைந்து அடங்கிய அமைதி பிபி ஸ்ரீனிவாஸ் சுசீலா இருவரும் வெகு நேர்த்தியாக பங்களித்து பாடல் உச்சம் தொட்டு வெற்றி ஈட்டியது.

எம் எஸ் வி குழுவினர் இதே பாடலை பாட கேளுங்கள் வெவ்வேறு கருவிகளின் பங்களிப்பை உணரலாம் . . இந்த வீடியோவில் Y G மஹேந்திரா, கண்ணதாசன் பெண், பையன் [அண்ணாதுரை] சவுகார் ஜானகி, எம் எஸ் வியின் பெண்கள் லதா, மது, மற்றும் பாடிய அனந்து ஜெயஸ்ரீ அனைவரையும் காணலாம்

https://www.youtube.com/watch?v=3-JBu6NVDXo roja  malare ananthu jayasree

வேறு பாடலுடன் பின்னர் பேசுவோம்

நன்றி

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...