SURRENDER -UNCONDITIONAL
பாதம் பணிந்த ஆடிய பாதம்
இவர் யார் ?
நீங்கள் நன்கு அறிந்தவர் தான் .
சமீபத்தில் பேசப்பட்டவர். எனினும் இப்போது நாம் காண்பது சாட்சாத் ஜீவா ,
தங்கை மற்றும் அவளின் 2 வயது சிறுவனுடன் திருப்பதில சாமி தரிசனக்க்யூவில். க்யூவில். நுழைந்து இரண்டு வினாடிகளில் ஒரு உயர் அதிகாரி வேகமாக வந்து வணக்கம் வைத்து எப்ப வந்தீங்க? என்றார் ஜீவாவிடம் .
சார் நீங்களா நல்லா இருக்கீங்களா ?
என்று கேட்டுவிட்டு, இப்பதான் வந்தோம், சாமி பாத்துட்டு இந்தப்பையனுக்கு மொட்டை போட்டு , காது குத்தணும், எனக்கு இங்க ஒன்னும் தெரியாது இப்பதான் இந்த கோயிலுக்கே வரேன் ,
எல்லாம் விசாரிசுக்கிட்டுப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக்கொண்டே தங்கையைப்பார்த்தான். அவள் ஆமாம் என்பதாக தலை ஆட்டினாள்..
உயர் அதிகாரி 'ஒரு நிமிஷம்' என்று சொல்லி விட்டு எதிர் திசையில் யாருக்கோ கை காட்டினார் , திபு திபு என்று
3, 4 பேர் ஓடிவந்தனர். அதிகாரி தெலுங்கில் ஏதோ சொன்னார் ஓ வாடு தமில் வாடு என்றார். உடனே ஒருவன் கை அசைக்க தீனதயாளு என்ற சிப்பந்தி ஓடி வந்தான். அவன் அரக்கோணம் ஆசாமி திருப்பதியில் கோயில் சிப்பந்தி. உடனே ஜீவாவை 'வெளிய வந்துருங்க' என்று கூப்பிட்டுக்கொண்டு ஆங்காங்கே பிரத்தியேக வழியில் நகர்ந்து 7 நிமிடத்தில் பெருமாள் சன்னதியில் நிறுத்தினான் .
கண்கொள்ளா காட்சி தன கடையில் சுவற்றில் இருந்த வெங்கடாசலபதியை மட்டுமே பார்த்தவன் இப்போது திருப்பதி பேரெழில் பெருமாளை பார்த்து நெக்குருகி கண்ணீர் விட்டான் .தங்கையும் அழுத படியே கை கூப்பி பாலாஜியை வணங்கினாள் . பாலாஜியை இப்போதுதான் நேரில் தரிசிக்கின்றனர். பட்டர் தீபாராதனை , செய்து துளசி பிரசாதம் வழங்கினார். நன்றியும் பரவசமும் பெருக தரிசனம் முடிந்து வெளியே வந்தனர்.
வெளியே பிராகாரத்தில் அமர்ந்த படி மறைந்து விட்ட தாயை நினைவு கொண்டான் ஜீவா. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது " ஏ ஜீவா உனக்கும் தங்கச்சிக்கும் புள்ள குட்டிங்க பொறந்தா மறக்காம திருப்பதிலே சாமி கும்பிட்டு முடி காணிக்கை செய்துடு. அது போதும் , வெங்கடாசலபதி காப்பாத்துவார், உங்க அப்பாரு போனப்புறம் சாமியை பாக்க எனக்கு கிடைக்கல. இதை மறக்காம செய்துடு அது போதும் " “அம்மா சாமி கும்பிட்டுட்டு வந்தோம் இனிமே தான் முடி காணிக்கை செலுத்தணும்” என்று மனதில் சொன்னபடியே தீனதயாளு வைப்பார்த்தான் ஜீவா. இங்க வாங்க என்று அழைத்துக்கொண்டு போய் கவுண்டரில், முடி, காதுகுத்து சீட்டு வாங்கி ஒரு குறிப்பிட்ட ஆசாமியிடம் உயர் அதிகாரி சொல்லிருக்கார் என்று அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்து கொடுத்து , குளியல் முடித்து மொட்டையில் சந்தனம் அப்பி . அலுவலகம் வந்தனர். அப்போது தான் நினைவுக்கு வந்தது ஓட்டல் ராவ்ஜி , ஜீவா ஒரு 2,500 ரூவா நான் செலுத்தவேண்டிய காணிக்கை + ஓட்டல்ல சில்லறை வாங்காமல் போய்விட்ட கஸ்டமர்கள் பணம் ஒரு 600 ,[மொத்தம் 3100/-] திருப்பதி உண்டியல் ல சேத்துரு உனக்கு புண்ணியமாப்போகும் என்றார்.
சாமி உங்களுக்கு இது கூட செய்ய மாட்டேனா, என்று பணமுடிப்பை கையோ டு கொண்டுவந்திருந்ததை நினைவு கூர்ந்தான். இப்போது உயர் அதிகாரி அந்த முடிப்பை வாங்கி பக்கத்தில் இருந்த உண்டியலில் போட்டு விட்டு ,
வாங்க என்று உள்ளே
ஆபிசில் அமரவைத்து சூடாக டிபன் கொடுத்து சாப்பிடச்சொன்னார். தீன தயாளுக்கு நன்றி சொல்லி விடை பெற்று உள்ளே வந்தான் ஜீவா. சாப்பிட்ட பின் தங்கையை வெளியில் உட்காரச்சொல்லி அறையை தாளிட்டு விட்டு உயரதிகாரி
“தம்பி என்ன மன்னித்தேன் னு ஒரு வார்த்தை சொல்லுங்க , பாவி நான்” என்று கண்கலங்கினார். .
“அய்யா மன்னிக்கிற ஜீவனா நானு . ஏதோ நேரக்கோளாறு தப்பு நடந்து போச்சு. அதைச்சொல்லி வேதனைப்படாதீங்க. இந்த உலகம் எல்லோருக்குமானது. உங்க தேவை செய்ய எத்தனையோ பேர் ,
எனக்கு உதவ எத்தனையோ பேர் , அதுனால அன்பா இருந்தா போதும் பெரிய வார்த்தை சொல்லாதீங்க” என்று கையைப்பிடித்துக்கொண்டான். இல்ல தம்பி நீங்க எனக்கு கால் குடுத்தீங்க இல்லன்னா “நான் எவ்வளவு அவதிப்பட்டேன் தெரியுமா”? . “வருத்தப்படாதீங்க, உங்க புண்ணியத்துல சுளுவா சாமி கும்பிட்டாச்சு ஓட்டல் அய்யர் சொன்னாரு ஜீவா திருப்பதிக்கு போயிட்டு வா -நல்லது நடக்கும் னாரு ; அதே படி ஆச்சு.நீங்களும் கால் உபாதையில்லாம சந்தோசமா தானே இருக்கீங்க. கவலையோ குறையோ வேண்டாங்க , நல்ல படியா நடந்துகிட்டு குறையில்லாம இருக்கலாம் .
ரொம்ப நன்றிங்கய்யா வரட்டுங்களா” என்று குழந்தையை தூக்கி கொண்டு நடந்தான் தங்கையுடன்.
நெட்டை ஜீவா ,
குட்டை தங்கை, மொட்டை குழந்தை மூன்றும் புள்ளியாக மறையும் வரை உயர் அதிகாரி கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தார்.
***************************************************
No comments:
Post a Comment