COUSINS -2
சகோதர உறவு முறை -2
கஸின் என்னும் நபர் நமது பெற்றோரின் சகோதர /சகோதரிகளின்
குழந்தைகள் அதாவது நாமும் அவர்களும் [அந்த குழந்தைகளும] ஒருவருக்கொருவர் கஸின் என்ற
உறவுமுறையினர். இந்த சொல் ஜீனியாலஜி எனும் உறவுத்தொடர்புகளை பற்றிய ஆய்வில் பெரிதும்
உபயோகப்படுவது .
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 'கஸின்' பெற்றோரின் சகோதர
சகோதரி களின் குழந்தைகள் FIRST
COUSIN --'முதலாம் கஸின் ' எனப்படும் உறவு முறை..
இதனைக்கடந்து 'கஸின்' உறவு முறையில் ONCE REMOVED, TWICE REMOVED என்ற தெளிவான வழிகாட்டுதல்களும் பயன் பாட்டில் உள்ளவையே. அதே குறிப்பிட்ட நபர்
சிலருக்கு ONCE
REMOVED நிலையிலும்,வேறு சிலருக்கு TWICE REMOVED நிலையிலும் இருக்க இயலும்.. ஐயோ இது என்ன
தொந்தரவு? என்று புலம்பாதீர்கள்
அவற்றை, புரிந்து கொள்ள முயல்வோம்.
இரு கஸின் களுக்கு இடையே நிகழும் பரம்பரை இடைவெளி
[அதாவது தலைமுறை வேறுபாடு] ஒரு தலைமுறை விலகி எனில் COUSIN -ONCE REMOVED என்றும், இரு தலைமுறைகள் விலகி எனில்
COUSIN -TWICE
REMOVED என்றும் கஸினை அ டையாளப்படுத்தப்படுவது வழக்கம்..
மதுரை மொழியில் சொல்வதானால் உங்கள விடமாட்டம் ல்
ல. இன்னும் கேளுங்க .மனதை தளர விடாமல் தொடருங்கள் .
FIRST-COUSIN
ஒவ்வொருவருக்கும் [தாய் வழி ,தந்தை வழி என] இரண்டு தாத்தா -பாட்டிகள் உண்டல்லவா? இரு கஸின் களுக்கும் ஒரே பொதுவான ஒரு தாத்தாபாட்டி [தந்தை வழியிலோ, தாய் வழியிலோ]அமைந்தால் அவர்கள் FIRST COUSINS எனப்படுவர்.
SECOND
COUSIN
இரு
கஸின்களுக்கும் பொதுவான கொள்ளுபாட்டி-கொள்ளுத்தாத்தா, அமைந்தால் அவர்கள் SECOND COUSINS என்றழைக்கப்படுகின்றனர்
.
FIRST
COUSIN-ONCE REMOVED என்பது
இரு
கஸின்களுக்கும் பொதுவான தாத்தா பாட்டி என்று பொருள் கஸினின் குழந்தை உங்களுக்கு கஸின் -ONCE REMOVED என புரிந்து கொள்ளப்படும்.
FIRST
COUSINS -என்போர்
குறைந்தது
ஒரு
பொதுவான
தாத்தாபாட்டியின் பேரக்குழந்தைகள் , ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள்
SECOND
COUSINS -என்போர்
ஒரே
தலைமுறையைச்சார்ந்த வர்கள், பொதுவான கொள்ளுத்தாத்தா -கொள்ளுப்பாட்டியின் -கொள்ளுப்பேர குழந்தைகள்
THIRD
COUSINS என்போர்
ஒரே
தலைமுறையைச்சார்ந்த வர்கள் பொதுவான எள்ளு -கொள்ளு தாத்தா வின் மூன்றாம் தலைமுறை பேரக்குழந்தைகள்
FOURTH
COUSINS - என்போர்
தலைமுறையைச்சார்ந்தவர்கள் பொதுவான சேயோன்-சேயோள் எள்ளு –கொள்ளு, தாத்தா வின் நான்காம் தலைமுறை பேரக்குழந்தைகள்
COUSIN
MARRIAGES
ஒரு
மூதாதையினரின்
வழித்தோன்றல்கள் [கஸின்] களிடையே திருமணம் செய்வது பல இந்திய சமுதாயங்களில் இருக்கும் நடை முறை. அத்தை -மாமா குழந்தைகள் முதல் மற்றும் பிந்தைய தலைமுறையினரிடையே அவரவர் தலைமுறைகளுக்குள்ளே யே திருமணங்கள் செய்துகொள்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம்-, உறவு விட்டு போய் விடக்கூடாது /சொத்து நமது குடும்பங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் -என்ற இரண்டு வலுவான ஆசையில் விளையும் நிலைப்பாட்டின் கருத்துகள்.
ஆனால்,
உண்மை
நிலை
என்ன?
திருமணம்
எப்போதும்-
புதுப்புது
உறவுகளையே
அமைத்து
தருகிறது.
வேறு
குடும்பத்தில்
பெண்
கொடுத்தால்
/எடுத்தால்
உறவு
விட்டுப்போய்விடும் என்பது சிந்திக்காமலேயே பேசப்படும் கருத்து.
சொத்தைக்காக்க கிளம்பிய மனிதர்கள், சொத்தைக்குழந்தையை காப்பாற்ற ஏராளமான பொருட் [செலவும்] மன அமைதியும் இழந்து, நொந்து துவண்டு மாய்வது அதிகம் ஏற்படுவது உறவு விட்டுப்போய்விடக்கூடாது என்று அரங்கேற்றப்பட்ட கஸின் வகை திருமணங்களில் தான் அதிக % அறியப்பட்டுள்ளது.
இதன்
அடிப்படை
விலகிச்செல்ல வேண்டிய குறைபட்ட ஜீன் களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்த தவறு,
[திருமண இணைப்பு] தான்
என்று
[GENETIC BASIS] ஜெனெடிக் அடிப்படை தெளிவாக காட்டியுள்ளது. இதை உணர உதாரணம் வேண்டுவோர் -சில ராஜ வம்சத்தினரை பாருங்கள் குழந்தையின்மை குறைபாடு சில ராஜ தலைமுறைகளில் விட்டு விட்டு அமையும், 1, 3, 5 ம் தலைமுறையினருக்கு
வம்சம்
உண்டு,
ஆனால்
2, 4, 6 ம்
தலைமுறையினர்
குழந்தை
இன்றி
தத்து
எடுத்து
ராஜா
நிலைக்கு ஒருவர் வருகிறார். இதன் அடிப்படைமுன்னாளில் அரச குலத்தினர் அரச குடும்பத்திலேயே உறவின் வகையை காக்க முயன்றது
தான்.
அவர்களுக்காவது குழந்தை இல்லை என்ற வருத்தம் மட்டுமே. ஆனால் இதுபோன்ற நெருங்கிய உறவு திருமண பந்தங்கள் பிறவிக்குறைகொண்ட சந்ததியை தோற்றுவிக்கும்..
அதற்கு,
குழந்தை
இன்மையே
பரவாயில்லை
என்றே
எண்ண
தோன்றும்.
இது
போன்ற
பல
முக்கிய
விவரங்கள்
கொண்டது
தான்
கஸின்
.என்ற
குடும்பத்தொடர்பு.
எனக்கு
அறிந்த
/ புரிந்தவற்றை
தெரிவித்துள்ளேன். பிழையோ, குறையோ இருப்பின் மன்னித்தருள்வீர்.
பி.
கு
: மாட்டுப்பெண் /நாட்டுப்பெண் என்று முறையே
வைஷ்ணவ
, ஸ்மார்த்த பிராமண
மரபினர்
கூறும்
சொற்கள்
குறிப்பிடுவது
எதை?
விளக்கம்தெரிந்தோர் சொல்லுங்கள், அப்படியாவது வாசகர்கள் பேசட்டுமே. ஊஹூம் , மாட்டார்களே ; எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பது போல் மௌனம் காப்பார்கள் , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அமாவாசை , பௌர்ணமி , ஸ்கூல் பரீட்சை என்று சமாதானம் சொல்லிவிட்டால் போயிற்று , அதுவும் கேட்டால் பார்த்துக்கொள்வோம் என்பது தானே நமது அன்பர்களின் மௌன விரத நிலைப்பாடு.
அன்பன் ராமன்
No comments:
Post a Comment